Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்காரர்களை பிரச்சனைகள் ரவுண்டு கட்டி அடிக்கப்போகுது..
Venus Transit In Krittika Nakshatra On 26 June 2025: ஜோதிடத்தில் சுக்கிரன் அழகு, காதல், செல்வம், செழிப்பு, ஈர்ப்பு, ஆடம்பரம் ஆகியவற்றின் காரணியாவார். மேலும் இவர் அசுரர்களின் குருவும் கூட. இந்த சுக்கிரன் 26 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவதைத் தவிர, அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார்.
சுக்கிரனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போது அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். முக்கியமாக நிதி நிலை, காதல் வாழ்க்கையில் அதிகம் காணப்படும். அந்த வகையில் சுக்கிரன் ஜூன் 26 ஆம் தேதி சூரியன் ஆளும் கிருத்திகை நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாகவுள்ளார்.

இந்த சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருந்தாலும், சில ராசிக்காரர்கள் சவால்களை சந்திக்க நேரிடும். குறிப்பாக உறவுகளில் பதற்றம், உறுதியற்ற நிதி நிலை, குழப்பமான மனநிலை போன்றவற்றை சந்திக்க நேரிடும். இப்போது கிருத்திகை நட்சத்திரத்திற்கு சுக்கிரன் செல்வதால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
1. கன்னி
கன்னி ராசிக்காரர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நிதானத்தையும் எச்சரிக்கையையும் கடைப்பிடிக்க வேண்டும். உங்களின் வார்த்தைகள் அல்லது நடத்தை குறித்து சமூகத்தில் தவறான புரிதல்கள் ஏற்படலாம். முடிந்தவரை விவாதத்தைத் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வாயு, அஜீரணம் அல்லது நெஞ்செரிச்சல் போன்ற வயிற்றுப் பிரச்சினைகள் தொந்தரவு செய்யும். திடீர் செலவுகளால் மன அழுத்தம் அதிகரிக்கும். புத்திசாலித்தனமாக எந்த செலவையும் செய்ய வேண்டும். மூன்றாம் நபரின் ஆலோசனையின் பேரில் முடிவுகளை எடுக்காதீர்கள். வாழ்க்கைத் துணையுடனான உறவு சிறப்பாக இருக்க, அவ்வப்போது சிறு சிறு பரிசுகளைக் கொடுத்து வாருங்கள்.
2. துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இந்த சுக்கிர பெயர்ச்சியால் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தைக் காணக்கூடும். முக்கியமாக நிறைய சோதனைகளை சந்திக்க நேரிடும். பணியிடத்திலோ அல்லது கல்வித் துறையிலோ வெற்றிபெற, நீங்கள் வழக்கமான கடின உழைப்பு மற்றும் ஒழுக்கத்தின் பாதையைப் பின்பற்ற வேண்டும். காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏதும் இருக்காது. ஆனால் நிதி பொறுப்புகள் அதிகரிக்கும். அதாவது, துணையின் தேவைகளை பூர்த்தி செய்ய நிறைய செலவழிக்க வேண்டியிருக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் சிறு தவறால் இழப்புக்களை சந்திக்க நேரிடும். எனவே ஒவ்வொரு முடிவையும் கவனமாக எடுக்க வேண்டும்.
3. விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் முடிவெடுக்க முடியாமல் அவதிப்பட நேரிடும். எதிர்காலம் தொடர்பான முடிவுகளை எடுக்க குழப்பமடையக்கூடும். இம்மாதிரிய சூழ்நிலையில் அனுபவசாலிகளின் ஆலோசனையை ஒருமுறை கேட்கலாம். அதோடு எதிரிகளிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும். உங்கள் எதிரிகள் உங்களை தவறாக சித்தரிக்கலாம். பணியிடத்தில் கொடுக்கப்பட்டுள்ள பொறுப்புகளை முடிக்காமல் இருந்தால், அது தீங்கு விளைவிக்கும். எனவே ஒவ்வொரு வேலையையும் சரியான நேரத்தில் முடிக்க முயற்சிக்க வேண்டும். தேவையற்ற செலவுகளைத் தவிர்ப்பது மிகவும் முக்கியம். செலவுகள் அதிகரிக்கும். இதனால் நிதி நெருக்கடிக்கு ஆளாக நேரிடும்.
4. கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இயற்கையாகவே படைப்பாற்றல் மிக்கவர்களாகவும், கற்பனைத் திறன் மிக்கவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் இந்த சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால், இது பாதிக்கப்படும். உங்களின் பேச்சு மற்றவர்களால் தவறாக புரிந்து கொள்ளப்படும். பேசுவதற்கு முன் சிந்தியுங்கள். இந்த காலத்தில் முடிந்தவரை கேட்பது நல்லது. நிதி நிலை சற்று பலவீனமாக இருக்கும். கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படலாம். படைப்புத் துறையுடன் தொடர்புடையவராக இருந்தால், புதிய தொடக்கங்களை ஒத்தி வைப்பது நல்லது. இல்லாவிட்டால் இழப்புக்களை சந்திக்க நேரிடும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
