Latest Updates
-
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
ஆகஸ்ட் 17-ல் சூரியன் சிம்மம் ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
சனி-சுக்கிரன் இணைப்பால் உருவாகும் பிரதியுதி திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு அளவற்ற செல்வத்தை தரப்போகுது! -
சுதந்திர தினத்தின் போது ஏன் பிரதமர் செங்கோட்டையில் கொடியேற்றுகிறார் - அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன? -
ஆடிப்பூரம் ஸ்பெஷல் அவல் பால் பொங்கல் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடுப்பி ஸ்டைல் வெண்டைக்காய் பொரியல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும்
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது... உங்க ராசி இதுல இருக்கா?
Venus Transit In Cancer On 07 July 2024: கிரகங்களில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார்.
இந்த சுக்கிரன் இதுவரை மிதுன ராசியில் பயணித்து வந்தார். இந்நிலையில் ஜூலை 07 ஆம் தேதி, அதாவது இன்று சுக்கிரன் கடக ராசிக்குள் நுழைந்துள்ளார். சுக்கிரன் கடக ராசியில் நுழைந்ததால் சில ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான நற்பலன்கள் கிடைக்கவுள்ளன.

கடக ராசியில் நுழைந்துள்ள சுக்கிரன், இந்த ராசியில் ஜூலை 31 ஆம் தேதி வரை இருந்து, பின் கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியனின் ராசியான சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார். சுக்கிரன் கடக ராசியில் நுழைந்துள்ளதால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நிறைய பயணங்களை செய்ய வேண்டியிருக்கும். இந்த பயணங்கள் நல்ல பலனைத் தருவதாக இருக்கும். வேலை தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களால் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறக்கூடும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இருப்பினும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் அனைத்து துறைகளிலும் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். பணியிடத்தில் கொடுக்கப்பட்ட இலக்குகளை வெற்றிகரமாக அடைவீர்கள். தொழில் ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். ஆனால் வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதங்களை சந்திக்க நேரிடும் என்பதால் உறவுகளில் மட்டும் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
மகரம்
மகர ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் புதிய நண்பர்களை சந்திப்பார்கள். நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும். மேலும் வேலை தேடிக் கொண்டிருந்தால், நல்ல வேலை கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் வேலை பாராட்டப்படும். சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். நிதி நிலை மேம்படும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். ஆனால் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications