மேஷம் செல்லும் சுக்கிரன்: அடுத்த 1 மாதம் எந்த ராசிக்கு சூப்பராவும், எந்த ராசிக்கு மோசமாகவும் இருக்கும்?

Venus Transit In Aries On 31 May 2025: ஜோதிடத்தில் அசுரர்களின் தலைவனாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார் மற்றும் இவர் ரிஷபம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். இப்படிப்பட்ட சுக்கிரன் ஒரு ராசியில் 1 மாத காலம் பயணிப்பார். ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் சுக்கிரனின் நிலை மிகவும் முக்கியமானது. ஏனெனில் சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தால் தான் அதிக நன்மைகளைப் பெற முடியும்.

தற்போது சுக்கிரன் மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் மே 31 ஆம் தேதி சுக்கிரன் மேஷ ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த ராசியில் ஜூன் 29 வரை இருந்து, பின் மிதுன ராசிக்கு செல்லவுள்ளார். சுக்கிரன் மேஷ ராசியில் நுழைவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தெரியும். அதில் சிலருக்கு அதிர்ஷ்டமாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம். இப்போது மேஷம் செல்லும் சுக்கிரனால் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.

Venus Transit In Aries On 31 May 2025 Effects On 12 Zodiac Signs

மேஷம்

மேஷ ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் பணப் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். தொழில் ரீதியாக சிக்கல்களை சந்திக்க நேரிடும். அதிக மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். வணிகர்கள் தேவையான அளவு லாபத்தைப் பெறாமல் போகலாம். அதிக செலவுகளை சந்திக்க நேரிடும். வாழ்க்கைத் துணையுடனான உறவு சற்று மோசமாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், நிறைய ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது.

ரிஷபம்

ரிஷப ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் எதிர்காலத்தைப் பற்றிய கவலை அதிகரிக்கலாம். அதிக பயணங்களை மேற்கொள்ள நேரிடும். அதிக வேலைப்பளுவை சந்திக்க வாய்ப்புள்ளது. வணிகர்கள் கவனக்குறைவாக இருப்பதாவும், திட்டமிடாமல் இருப்பதாலும், நஷ்டத்தை சந்திக்க நேரிடும். பண விஷயத்தில் அலட்சியத்தால் பண இழப்பை நீங்கள் சந்திக்க நேரிடும். வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பு கிடைக்காமல் போவதால், வருத்தம் கொள்வீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கால்கள் மற்றும் தொடைகளில் பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது.

மிதுனம்

மிதுன ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும். தொழில் ரீதியாக, புதிய வேலை வாய்ப்புக்கள் தேடி வரும். வணிகர்களுக்கு நிறைய லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. அதிக பணத்தை சம்பாதித்து சேமிக்க முடியும். சுக்கிரனின் ஆசியால் பணம் குவியும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும்.

கடகம்

கடக ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் உங்களின் வசதிகள் அதிகரிக்கும். வரவு செலவுகளுக்கு இடையே நல்ல சமநிலையைப் பராமரிக்க முடியும். தொழில் ரீதியாக, உங்களுக்கு வேலை அழுத்தம் மற்றும் வேலை மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. வணிகர்களால் நிறைய லாபத்தை பெற முடியாமல் போகலாம். நிதி ரீதியாக நிறைய பணத்தை சம்பாதிக்க முடியும். அதே சமயம் செலவுகளையும் அதிகம் சந்திக்க நேரிடும். புரிதலின்மையால் வாழ்க்கைத் துணையுடன் பிரச்சனையை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, தலைவலி மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது

சிம்மம்

சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் அதிக பயணங்களை மேற்கொள்ள நேரிடும். தொழில் ரீதியாக அதிக நன்மைகளைப் பெறுவீர்கள். புதிய வேலை வாய்ப்புக்களைப் பெறவும் வாய்ப்புள்ளது. நிறைய பணத்தை சம்பாதிக்க முடியும். இதன் மூலம் கையில் பணம் அதிகம் குவியும். வணிகர்கள் புதிய ஆர்டர்களைப் பெறலாம். தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நன்றாக இருக்கும்.

கன்னி

கன்னி ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பாதுகாப்பாக உணராமல் போகலாம். வாழ்க்கையில் மகிழ்ச்சி குறையும். வணிகர்கள் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். தொழிலதிபர்கள் ஏமாற்றத்தை சந்திக்க நேரிடும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, ஈகோ தொடர்பான பிரச்சினைகளால் வாழ்க்கைத் துணையுடனான உறவு பாழாகும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கண் தொடர்பான பிரச்சனைகளால் அதிகம் அவதிப்பட நேரிடும்.

துலாம்

துலாம் ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் புதிய நண்பர்களைப் பெறலாம். ​​தொழில் ரீதியாக உங்களுக்கு கடுமையான வேலை அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு இக்காலம் சுமாராக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, வாழ்க்கைத் துணையுடனான உறவு சிறப்பாக இருக்காது. சிறுசிறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உறவுகளைப் பொறுத்தவரை, பெரிய அளவில் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்காமல் போகலாம். ஆனால் இருமல், சளி பிரச்சனையால் அவதிப்பட நேரிடும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் உறவுகளில் சிக்கல்களை சந்திக்க நேரிடும். தொழில் ரீதியாக, நீங்கள் அதிக வேலை அழுத்தத்தை எதிர்கொள்ள நேரிடும் என்பதால், வேலையில் எதிர்பார்த்த பலன்களைப் பெற முடியாமல் போகலாம். வணிகர்கள் கடுமையான போட்டியின் காரணமாக அதிகமாக டென்சனாக நேரிடும். வாழ்க்கைத் துணையுடன் புரிதல் இல்லாததால், உறவில் சூடான வாக்குவாதங்கள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்திற்காக நீங்கள் அதிக செலவுகளை செய்ய வேண்டியிருக்கும்.

தனுசு

தனுசு ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிக கடன்களை எதிர்கொள்ள நேரிடும். பணியிடத்தில் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்த முடியாமல் போகலாம். இதனால் வேலையில் எதிர்பார்த்த பலன்களைப் பெற முடியாமல் போகலாம். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் போகலாம். வாழ்க்கைத் துணையுடன் நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. ஆரோக்கிய விஷயத்தில் அதிக கவனத்தை செலுத்த வேண்டும்.

மகரம்

மகர ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உடன் வேலை செய்வோருடன் அதிக சிக்கல்களை சந்திக்க நேரிடும். இதன் காரணமாக வேலையில் முன்னேற்றம் பாதிக்கப்படும். வணிகர்களுக்கு மிதமான லாபம் கிடைக்கும். போட்டியாளர்களிடமிருந்து அதிக பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குடும்பப் பிரச்சினைகள் காரணமாக உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சச்சரவுகளைச் சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, தொடை மற்றும் கால்களில் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

கும்பம்

கும்ப ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தையும், வெற்றியையும் பெறுவீர்கள். வணிர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. புதிய வணிக வாய்ப்புக்களையும் பெறலாம். வாழ்க்கைத் துணையுடனான உறவு மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும்.

மீனம்

மீன ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் வளர்ச்சியைப் பெறுவதில் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். எதிலும் நம்பிக்கையின்மையை எதிர்கொள்ள நேரிடும். பணிபுரிபவர்கள் வேலையை மாற்ற வேண்டியிருக்கும். வணிகர்கள் மோசமான திட்டத்தால் அதிக இழப்பை சந்திக்க நேரிடும். வாழ்க்கைத் துணையுடன் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் உங்களின் பேச்சு உங்கள் உறவில் விரிசலை ஏற்படுத்தலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, செரிமானம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Tuesday, May 27, 2025, 22:57 [IST]
Desktop Bottom Promotion