அக்டோபரில் 4 முறை நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க..

Venus Transit 4 Times In October 2025: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த நவகிரகங்களில் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன், அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார்.

இந்த சுக்கிரன் 26 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றக்கூடியவர். அதோடு அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார். அப்படி சுக்கிரனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போது, அதன் தாக்கம் ஒருவரது நிதி நிலை, காதல் வாழ்க்கை போன்றவற்றின் காணப்படும். அந்த வகையில் அக்டோபர் மாதத்தில் 4 முறை சுக்கிர பெயர்ச்சி நடக்கவுள்ளது.

Venus Transit 4 Times In October 2025 List Of Lucky Zodiac Signs

அதில் முதலாவதாக அக்டோபர் 06 ஆம் தேதி சுக்கிரன் உத்திரம் நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். அதன் பின் அக்டோபர் 09 ஆம் தேதி சுக்கிரன் கன்னி ராசிக்குள் நுழையவுள்ளார். பின்பு அக்டோபர் 17 ஆம் தேதி சுக்கிரன் ஹஸ்தம் நட்சத்திரத்திற்கும், அக்டோபர் 28 ஆம் தேதி சித்திரை நட்சத்திரத்திற்கும் செல்லவுள்ளார்.

இப்படி 4 முறை சுக்கிரனின் நிலையில் ஏற்படும் மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். முக்கியமாக 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசித்து, வருமானத்தில் உயர் ஏற்படுவதோடு, தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. இப்போது அக்டோபரில் 4 முறை நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் அதிர்ஷ்டமடையும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

கும்பம்

அக்டோபரில் 4 முறை நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்களுக்கு 4 மடங்கு நன்மைகள் கிடைக்கப் போகிறது. முக்கியமாக நிதி நிலையில் எதிர்பாராத அளவில் நல்ல உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உயர் அதிகாரிகள் கடின உழைப்புக்கான பலனைப் பெறுவார்கள். உங்களின் முயற்சிகளுக்கு ஏற்ற நல்ல பலன்கள் கிடைக்கும். தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்கள் இலக்குகளை அடைவீர்கள். சிலருக்கு புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.

மேஷம்

அக்டோபரில் 4 முறை நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களின் வாழ்வில் 4 மடங்கு அதிகமாக நல்ல மாற்றங்களைக் காணக்கூடும். வருமானத்தில் மிகப்பெரிய உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். இக்காலத்தில் மேற்கொள்ளும் பயணங்கள் நல்ல பலன்களைத் தரும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு இனிமையாக இருக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புக்களைப் பெற வாய்ப்புள்ளது. மேலும் உடன் வேலை செய்வோர் மற்றும் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள்.

தனுசு

அக்டோபரில் 4 முறை நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் அருளால் வருமானத்தில் நல்ல உயர்வைக் காணக்கூடும். உறவுகள் வலுவடையும். சிலருக்கு வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். போட்டி தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். சுக்கிரனின் ஆசியால் உங்களின் வசதிகள் அதிகரிக்கும். பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றின் மூலம் நல்ல நன்மைகளைப் பெறுவீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Wednesday, September 17, 2025, 9:19 [IST]
Desktop Bottom Promotion