Latest Updates
-
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது?
164 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள மாய யோகம்: இந்த 3 ராசிகளின் தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் ஜொலிக்கபோகுது..
Venus Neptune Conjunction Make Maya Yog 2025: ஜோதிடத்தில் நவகிரகங்களைத் தவிர, வேறு சில கிரகங்களும் உள்ளன. அவை யுரேனஸ், புளூட்டோ, நெப்டியூன் ஆகும். இந்த கிரகங்களும் ஜோதிடத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். இவையும் மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
இதில் நெப்டியூன் மிகவும் சிறப்பு வாய்ந்த கிரகமாக கருதப்படுகிறது. இந்த நெப்டியூன் தான் வருண பகவான் ஆவார். இந்த நெப்டியூன் ஒரு ராசியில் சுமார் 13 ஆண்டுகள் இருக்கும் மற்றும் ஒரு சுழற்சியை முடிக்க சுமார் 164 ஆண்டுகள் ஆகும்.

அந்த வகையில் வருணன் 2023 ஆம் ஆண்டின் பிப்ரவரி 19 ஆம் தேதி மீன ராசிக்குள் நுழைந்தார். இந்த மீன ராசியில் வருணன் 2025 ஆம் ஆண்டின் ஜூன் 27 ஆம் தேதி வரை இருப்பார். அதே சமயம் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரனும் மீன ராசியில் பயணித்து வருகிறார். இதனால் மீன ராசியில் சுக்கிரன் மற்றும் வருணன் ஒன்றிணைந்து மாயா என்ற ராஜயோகத்தை உருவாக்கியுள்ளனர்.
இந்த மாய யோகமானது சுமார் 164 நாட்கள் கழித்து உருவாகியுள்ளது. இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெற்று, ஒவ்வொரு வேலையிலும் வெற்றியுடன், நல்ல நிதி நன்மைகளையும் பெற்றவுள்ளனர். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கன்னி
கன்னி ராசியின் 7 ஆவது வீட்டில் மாய யோகம் உருவாகிவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தோற்றத்தில் நல்ல மாற்றம் ஏற்படும். ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கை துணையின் மூலம் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவீர்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். பணம் தொடர்பான சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். இந்த முடிவுகள் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும் வகையில் இருக்கும். உங்கள் இலக்குகளை எளிதில் அடைவீர்கள். கூட்டு தொழில் செய்து வருபவர்கள் பெரிய அளவில் லாபத்தைப் பெறுவார்கள்.
துலாம்
துலாம் ராசியின் 6 ஆவது வீட்டில் மாய யோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நிறைய நன்மைகளைப் பெறுவார்கள். முக்கியமாக பெரிய அளவில் நிதி ஆதாயங்களைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உடன் வேலை செய்வோருடனான உறவு சிறப்பாக இருக்கும். போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். பணியிடத்தில் சோம்பேறித்தனத்தை தவிர்த்து வேலையில் முழு ஆர்வத்தை காட்டினால், நல்ல பலனைப் பெறலாம்.
மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் மாய யோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் பணியிடத்தில் சிறப்பான நன்மைகளைப் பெறுவார்கள். படைப்பாற்றல் அதிகரிக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். மேலும் வேலையில் செயல்திறன் சிறப்பாக இருக்கும். இதனால் பணியிடத்தில் பாராட்டு மழையில் நனைவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும். தொழிலில் நிறைய லாபம் கிடைக்கும். மொத்தத்தில் மாய யோகம் தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டத்தை பிரகாசிக்க வைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications