Latest Updates
-
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
மீன ராசியில் அஸ்தமனமாகும் சுக்கிரன்: இன்று முதல் அடுத்த 10 நாட்கள் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா?
Venus Combust In Pisces On 18 March 2025: வேத ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். இந்த சுக்கிரன் ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், அந்நபர் நல்ல செழிப்பான மற்றும் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வதோடு, காதல் வாழ்க்கை இனிமையாகவும், மற்றவர்களை ஈர்க்கும் அழகுடனும் இருப்பர்.
இப்படிப்பட்ட சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். தற்போது சுக்கிரன் மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் மார்ச் 18 ஆம் தேதி சுக்கிரன் மீன ராசியில் அஸ்தமனமாகவுள்ளார். இந்த அஸ்தமன நிலையில் சுமார் 10 நாட்கள் சுக்கிரன் இருக்கப் போகிறார்.

சுக்கிரன் அஸ்தமனமாவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதில் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம். இப்போது மீன ராசியில் அஸ்தமனமாகும் சுக்கிரனால் அடுத்த 10 நாட்கள் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 12 ஆவது வீட்டில் சுக்கிரன் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் குடும்பத்தில் பிரச்சினைகளையும் பண இழப்பையும் சந்திக்க நேரிடும். கடன் பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும். தொழில் ரீதியாக, பணியிடத்தில் வெற்றி பெறுவதற்கான மிதமான வாய்ப்புகள் உள்ளன. கூட்டு தொழில் செய்பவர்கள், கூட்டாளியுடன் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
குடும்பத்திற்காக அதிகமாக செலவு செய்ய வேண்டியிருக்கும். இதன் காரணமாக பட்ஜெட் பாதிக்கப்படலாம். உறவுகளைப் பொறுத்தவரை, குடும்பத்தில் வாக்குவாதங்களைச் சந்திக்க நேரிடும். வாழ்க்கைத் துணையுடனான உறவு மோசமாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, செரிமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் சுக்கிரன் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்களைப் பற்றியும், தங்கள் குழந்தைகளின் முன்னேற்றம் குறித்தும் அதிகம் கவலைப்படுவார்கள். தொழில் ரீதியாக, உங்கள் திறமைகள் வீணாகலாம். இது மிகப்பெரிய கவலைகளைத் தரக்கூடும்.
வணிகர்கள் அலட்சியத்தால் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். நிதி ரீதியாக, பண இழப்பை சந்திக்க நேரிடும். வாழ்க்கைத் துணையுடன் சரியான தொடர்பு இல்லாததால், இருவரிடையேயான பிணைப்பு குறையும். இதனால் திருமண வாழ்க்கை மோசமாக இருக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக நிறைய பணத்தை செலவழிக்க வேண்டியிருக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் சுக்கிரன் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் குடும்பத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மேலும் எதிர்பாராத வீடு மாற்றத்தை சந்திக்க நேரிடும். தொழில் ரீதியாக, இடமாற்றத்தை சந்திக்க நேரிடும்.
அதிக செலவுகளை சந்திக்க நேரிடும். அதிக பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகளை இழக்க நேரிடும். உறவுகளைப் பொறுத்தவரை, உங்கள் வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதம் ஏற்படலாம். தாயாரின் ஆரோக்கியத்திற்காக நிறைய பணம் செலவழிக்க வேண்டியிருக்கும்.
கடகம்
கடக ராசியின் 9 ஆவது வீட்டில் சுக்கிரன் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்காது. வெற்றியைப் பெற அதிகம் உழைக்க வேண்டியிருக்கும்.
தொழில் ரீதியாக, அதிக வேலை அழுத்தத்தை எதிர்கொள்ள நேரிடும். வியாபாரிகள் மிதமான லாபத்தை மட்டுமே பெற முடியும். வாழ்க்கைத் துணையுடன் அதிக சச்சரவுகளை சந்திக்க நேரிடும். தந்தையின் உடல்நலத்திற்காக நீங்கள் அதிக பணம் செலவிட வேண்டியிருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டில் சுக்கிரன் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் இக்காலத்தில் தைரியத்தையும் உறுதியையும் இழக்க நேரிடும். வேலையைப் பொறுத்தவரை இடமாற்றத்தைக் காணலாம், அது உங்களுக்குப் பிடிக்காமல் போகலாம்.
வணிக ரீதியாக, உங்கள் போட்டியாளர்களிடமிருந்து அதிக போட்டியை காணக்கூடும். ஒருவருக்கொருவர் புரிதல் மற்றும் நம்பிக்கை இல்லாததால் உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவு மோசமாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, செரிமானப் பிரச்சினைகளை அதிகம் சந்திக்க வாய்ப்புள்ளது.
கன்னி
கன்னி ராசியின் 7 ஆவது வீட்டில் சுக்கிரன் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பணப்பற்றாக்குறையை சந்திக்க நேரிடும். பணியிடத்தில் மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களுடனான உறவுகள் மோசமாக இருக்கும். உங்கள் வேலையில் தன்னம்பிக்கை குறையக்கூடும்.
வணிகர்கள் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். வாழ்க்கைத் துணையுடன் சரியான தொடர்பு இல்லாததால் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நெருங்கிய நண்பரின் ஆரோக்கியத்திற்காக நிறைய பணம் செலவழிக்க வேண்டியிருக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 6 ஆவது வீட்டில் சுக்கிரன் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நிறைய கடன்களை வாங்க வேண்டியிருக்கும். தொழில் ரீதியாக, நீங்கள் செய்யும் கடின உழைப்புக்கு எதிர்பாராத பலன்களை பெறக்கூடும். சில நேரங்கள் அதிகம் கவலைப்பட வேண்டியிருக்கும்.
வணிகர்கள் அலட்சியத்தால் லாபத்தை இழக்க நேரிடும். வாழ்க்கைத்துணையுடனான பிரச்சனையால் மன உளைச்சல் ஏற்படக்கூடும். பலவீனமான நோயெதிர்ப்பு சக்தியால் அடிக்கடி உடல்நலக் குறைவால் அவதிப்படக்கூடும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 5 ஆவது வீட்டில் சுக்கிரன் அஸ்தனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிக மன அழுத்தம், பாதுகாப்பற்ற உணர்வுகளை எதிர்கொள்ள நேரிடும். உங்கள் குழந்தைகளின் வளர்ச்சியைப் பற்றி நீங்கள் கவலைப்பட நேரிடும்.
செய்யும் கடின உழைப்புக்கு போதுமான பாராட்டு கிடைக்காமல் போகலாம். கூட்டு தொழில் செய்பவர்கள் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். சர்க்கரை நோய் தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்படக்கூடும்.
தனுசு
தனுசு ராசியின் 4 ஆவது வீட்டில் சுக்கிரன் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் குடும்பத்தில் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். வசதிகளை இழக்க நேரிடும். கடன்கள் அதிகரிக்கும், மேலும் இடமாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.
பணியிடத்தில் சவாலான பல வேலைகள் வழங்கப்படலாம். வணிகர்கள் போட்டியால் லாபத்தை இழக்க நேரிடும். வாழ்க்கைத் துணையுடன் ஈகோ பிரச்சினைகள் இருக்கலாம். இதன் காரணமாக வாக்குவாதங்களில் ஈடுபடலாம். தாயாரின் உடல்நலத்திற்காக அதிக செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கும்.
மகரம்
மகர ராசியின் 3 ஆவது வீட்டில் சுக்கிரன் அஸ்தனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வளர்ச்சியின்மையை நீங்கள் சந்திக்க நேரிடும். வேலை தொடர்பான பயணத்தில் தடைகளை சந்திக்க நேரிடும்.
வியாபாரிகள் அதிக லாபம் ஈட்ட முடியாமல் போகலாம். வாழ்க்கைத் துணையுடன் உங்களுக்கு சச்சரவுகள் ஏற்படக்கூடும். சர்க்கரை தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருப்பதால், உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் 2 ஆவது வீட்டில் சுக்கிரன் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பணப் பிரச்சினைகள், குடும்பத்தில் பிரச்சினைகள் மற்றும் குடும்ப வட்டாரங்களில் பாசமின்மையை எதிர்கொள்ள நேரிடும்.
பணியிடத்தில் வேலைப்பளு மற்றும் உடன் வேலை செய்வோருடன் சிக்கல்களை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கண்களில் எரிச்சல், பற்களில் வலி மற்றும் பிற வகையான ஒவ்வாமை பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.
மீனம்
மீன ராசியின் முதல் வீட்டில் சுக்கிரன் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வழக்கமான செயல்பாடுகளில் எந்த ஒரு முன்னேற்றத்தையும் காணாமல் போகலாம். அதிக வேலை அழுத்தங்களுக்கு ஆளாக நேரிடும்.
வேலையை திறம்பட செய்ய முடியாமல் போகும். வியாபாரிகள் அதிக லாபத்தை இழக்க நேரிடும். வாழ்க்கைத் துணையுடன் உங்களுக்கு சச்சரவுகள் ஏற்படக்கூடும். இதன் காரணமாக உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நல்லுறவை இழக்க நேரிடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை கால்கள் மற்றும் தொடைகளில் வலி ஏற்படலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications