Latest Updates
-
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
500 ஆண்டுகளுக்கு பின் செப்டம்பரில் நிகழும் 3 ராஜயோகங்கள்: இந்த 4 ராசிக்கு கூரையை பிச்சு பணம் கொட்டபோகுது!
Triple Rajyog Formed In September 2024: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதோடு, அவ்வப்போது சுப மற்றும் ராஜயோகங்களையும் உருவாக்கும். அவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், அதனால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாகவும், சிலருக்கு துரதிர்ஷ்டமாகவும் இருக்கும்.
அந்த வகையில் செப்டம்பர் மாதத்தில் 3 ராஜயோகங்கள் ஒரே வேளையில் உருவாகவுள்ளன. அதில் சனி தனது மூலதிரிகோண ராசியான கும்பத்தில் இருந்து சச ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார். அதன் பின் செப்டம்பர் 18 ஆம் தேதி சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாம் ராசியில் நுழைந்து மாளவ்ய ராஜயோகத்தையும், அதைத் தொடர்ந்து செப்டம்பர் 23 ஆம் தேதி புதன் தனது சொந்த ராசியான கன்னி ராசியில் நுழைந்து பத்ர ராஜயோகத்தையும் உருவாக்கவுள்ளனர்.

இப்படி 3 கிரகங்கள் தனது சொந்த ராசியில் இருந்து ஒரே வேளையில் 3 ராஜயோகங்களையும் உருவாக்கியிருப்பது ஒரு அரிய நிகழ்வு. இந்நிகழ்வானது சுமார் 500 ஆண்டுகளுக்கு பின் நிகழ்ந்துள்ளது. அதுவும் இது தீபாவளிக்கு முன்பு நிகழ்வதால், அதிர்ஷ்டம் பிரகாசித்து, நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படப் போகிறது. இப்போது 500 ஆண்டுகுளுக்கு பின் செப்டம்பரில் நிகழும் ராஜயோகங்களால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த 3 ராஜயோகங்களானது எதிர்பாராத நல்ல நிதி ஆதாயங்களைத் தரும். முதலீடுகளை செய்திருந்தாலோ அல்லது புதிய முதலீடுகளை செய்தாலோ நல்ல லாபத்தைப் பெறலாம். உடன் வேலை செய்வோரிடம் இருந்து நல்ல செய்திகளைப் பெறக்கூடும். அலுவலகத்தில் உங்கள் செயல்திறன் சிறப்பாக இருக்கும். உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் ஆசை இருந்தால் அது நிறைவேறும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புக்கள் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த 3 ராஜயோகங்களால் வாழ்க்கை செழிப்பாக இருக்கும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். ரியல் எஸ்டேட் மூலம் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். உங்களின் இலக்குகளை எளிதில் அடைவீர்கள். உங்களின் செலவுகள் கட்டுப்படும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நிதி ரீதியாக அற்புதமாக இருக்கும். உங்களின் செயல்களால் நல்ல பாராட்டுக்களைப் பெறுவீர்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த 3 ராஜயோகங்களால் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஒவ்வொரு வேலையிலும் குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். உங்களின் வேலைகளில் நல்ல வெற்றி கிடைக்கும். கொடுக்கப்பட்ட இலக்குகளை எளிதில் அடைவீர்கள். வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். வியாபாரிகளின் வியாபாரம் விரிவடையும். வேலை இருப்பவர்கள் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவார்கள். பணிபுரிபவர்கள் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த 3 ராஜயோகங்களானது எதிர்பாராத பல நன்மைகளைத் தரும். உங்களின் தன்னம்பிக்கை மற்றும் மரியாதையும் அதிகரிக்கும். உறவுகளைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியமும் நின்றாக இருக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை இனிமையாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். உங்களின் தைரியம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
