Latest Updates
-
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்..
100 ஆண்டுகளுக்கு பின் மிதுனத்தில் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: பண மழையில் நனையும் ராசிக்காரர்கள்!
Trigrahi Yoga In Gemini After 100 Years: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் ராசி மாற்றங்கள் சில சமயங்களில் சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்கலாம். அப்படி உருவாக்கும் யோகங்களின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் ஜூன் 12 ஆம் தேதி செல்வத்தின் காரணியாக கருதப்படும் சுக்கிரன் மிதுன ராசிக்குள் நுழைந்தார். அதைத் தொடர்ந்து ஜூன் 14 ஆம் தேதி கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதனும் மிதுன ராசியில் நுழைந்தார். அதன் பின் ஜூன் 15 ஆம் தேதி கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியனும் மிதுன ராசிக்குள் நுழைந்தார்.

இதனால் மிதுன ராசியில் சுக்கிரன், புதன், சூரியன் ஆகிய கிரகங்களின் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதன் விளைவாக இந்த மூன்று கிரகங்களின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகியுள்ளது. இந்த யோகமானது 100 ஆண்டுகளுக்கு பின் இந்த மூன்று கிரகங்களின் சேர்க்கையால் உருவாகியுள்ளது.
இந்த யோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாகவும், நல்ல நிதி நன்மைகளைத் தருவதாகவும் இருக்கும். இப்போது மிதுன ராசியில் உருவாகியுள்ள திரிகிரக யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
துலாம்
துலாம் ராசியின் 9 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். சுப காரியங்களில் அதிகம் பங்கேற்க வேண்டியிருக்கும். தொழில் ரீதியாக முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும். மேலும் பணம் சம்பாதிப்பதற்கு புதிய வழிகளைப் பெறக்கூடும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைக்கும். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள்.
மேஷம்
மேஷ ராசியின் 3 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தைரியம் மற்றும் வீரம் அதிகரிக்கும். வெளிநாட்டுடன் தொடர்புடைய வேலை மற்றும் வியாபாரம் செய்பவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். சிலருக்கு புதிய வேலைகளைத் தொடங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள். நிதி ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும். சிக்கிய பணம் கைக்கு தேடி வரும்.
மிதுனம்
மிதுன ராசியின் முதல் வீட்டில் திரிகிரக யோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் தீர்வுகள் சாதகமாக வரும். திருமணமானவர்களின் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தையும், முன்னேற்றத்தையும் பெறுவார்கள். முதலீடுகளில் இருந்து நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications