Latest Updates
-
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது! -
கொங்குநாட்டு ஸ்டைல் பச்சைப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
நட்ஸ்கள் குறித்து பலரது மனதில் உள்ள டாப் 5 சந்தேகங்களுக்கு பதிலளித்த டாக்டர்.அருண்குமார்! மிஸ் பண்ணாம படிங்க.. -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்! -
ரவா பன் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
சனி-சந்திரனால் உருவாகியுள்ள விஷ யோகம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்!
12 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் சக்திவாய்ந்த திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது...
Trigrahi Yog 2025 In Gemini After 12 Years: ஜோதிட ரீதியாக ஜூன் மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்த மாதத்தில் பல ராஜயோகங்கள் உருவாகின்றன. அதோடு சில அரிய கிரகங்களின் சேர்க்கைகளும் நிகழவுள்ளன. இதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.
அந்த வகையில் ஜூன் 15 ஆம் தேதி கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குள் நுழையவுள்ளார். அப்போது அந்த மிதுன ராசியில் ஏற்கனவே கிரகங்களின் இளவரசனான புதனும், தேவர்களின் குருவான குரு பகவானும் பயணித்து வருகின்றனர். இதனால் மிதுன ராசியில் சூரியன், புதன் மற்றும் குரு பகவானின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது.

இந்த யோகம் சுமார் 12 ஆண்டுகளுக்கு பின் இந்த 3 கிரகங்களின் சேர்க்கையால் உருவாகவுள்ளது. இது தவிர, சூரியன் மற்றும் புதனின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகமும், குரு மற்றும் சூரியனின் சேர்க்கையால் குரு ஆதித்ய ராஜயோகமும், புதன் சொந்த ராசியில் இருப்பதால், பத்ர ராஜயோகமும் உருவாகியுள்ளன.
இப்படி ஒரே வேளையில் திரிகிரக யோகத்துடன், 3 ராஜயோகங்களும் உருவாகியிருப்பதால், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக, நிதி நிலையில் நல்ல உயர்வை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கப் போகிறது. இப்போது திரிகிரக யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 2 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகத்தால் பரம்பரை சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து, அந்த சொத்து கைக்கு வந்து சேரும். நீண்ட கால பிரச்சனைகளில் இருந்து தீர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணம் ஏதேனும் சிக்கியிருந்தால், அது கைக்கு வந்து சேரும். பேச்சு இனிமையாக மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். பேசியே நிறைய வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 9 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். அதே சமயம் தந்தையின் முழு ஆதரவும் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். அரசு வேலைக்கு முயற்சித்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். படித்து முடித்து வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
கும்பம்
கும்ப ராசியின் 5 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. பெற்றோர்கள் குழந்தைகளிடம் இருந்து நல் செய்திகளைப் பெறலாம். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை வயிறு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நிவாரணஙம் கிடைக்கும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். இதன் மூலம் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications