Latest Updates
-
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு
இந்த 5 ராசிக்கார பெண்கள் அவங்க கணவனுக்கு அதிர்ஷ்ட தேவதைகளாம்.. உங்க மனைவி ராசி இதுல இருக்கா?
Lucky Women Zodiac Signs: ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒருவர் பிறக்கும் நேரத்தில் இருக்கும் கிரகங்களும் நட்சத்திரங்களும் ஒருவரின் தலைவிதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஜோதிடத்தின் படி, சில ராசிகளின் பெண்கள் மற்றவர்களை விட அதிக அதிர்ஷ்டசாலிகளாகக் கருதப்படுகிறார்கள்.
இந்தப் பெண்கள் நல்ல அதிர்ஷ்டத்தால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றும், தனது கணவருக்கு அதிர்ஷ்ட தேவதைகளாகவும் கருதப்படுகிறார்கள். இந்த ராசி பெண்கள் இருக்கும் வீட்டில் பணத்திற்கு பஞ்சம் இருக்காது மற்றும் செல்வமும், மகிழ்ச்சியும் பெருகும். மேலும் அவர்கள் சமூகத்தில் அந்தஸ்தையும் கௌரவத்தையும் பெறுகிறார்கள்.

அதனால் தான் பல ஆண்கள் தங்களின் திருமணத்திற்கு பின் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைக் காண்கிறார்கள். இப்படி திருமணத்திற்கு பின் ஆண்கள் காணும் மாற்றத்திற்கு, அந்த ஆணின் வாழ்க்கையில் நுழைந்த பெண் முக்கிய காரணமாக இருக்கலாம். அதுவும் அந்த பெண்ணின் ராசி தான் அந்த ஆணுக்கு இப்படியான மாற்றத்திற்கு காரணமாகும்.
ஜோதிடத்தின் படி, சில ராசியைச் சேர்ந்த பெண்கள் அவர்கள் கணவருக்கு ஒரு அதிர்ஷ்ட தேவதைகளாக இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் எண் கணித நிபுணர் ஸ்வேதா சுரேகா தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது கணவருக்கு அதிர்ஷ்ட தேவதைகளாக இருக்கும் டாப் 5 ராசி பெண்கள் குறித்து பகிர்ந்துள்ளார். அது எந்தெந்த ராசிக்கார பெண்கள் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
1. ரிஷபம்
ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். இந்த சுக்கிரன் ஆரம்பரம், சந்தோஷம் மற்றும் பணம் ஆகியவற்றின் காரணியாவார். எனவே இந்த ரிஷப ராசியைச் சேர்ந்த பெண்கள் சுக்கிரனின் பரிபூர்ண ஆசியைக் கொண்டவர்கள். இந்த ரிஷப ராசிக்கார பெண்களை மணக்கும் ஆண்கள் திருமணத்திற்கு பின் பணக்காரராகும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
2. கடகம்
கடக ராசியின் அதிபதி சந்திரன். இந்த சந்திரனும் பணத்தின் ஒரு காரணியாவார். எனவே ஜாதகத்தில் வலுவான சந்திரனைக் கொண்ட அல்லது கடக ராசியை சேர்ந்த பெண்களை திருமணம் செய்யும் ஆண்கள், திருமணத்திற்கு பின் நிதி நிலையில் நல்ல உயர்வைக் காண்பார்கள்.
3. சிம்மம்
சிம்ம ராசியின் அதிபதி சூரியன். மேலும் சிம்ம ராசியை சேர்ன்த பெண்கள் வலுவானவர்கள் மற்றும் தொழில் சார்ந்த பெண்கள். இந்த ராசியைச் சேர்ந்த பெண்கள் தங்களின் கடின உழைப்பால் நிறைய செல்வத்தை சம்பாதிப்பார்கள். எனவே இந்த சிம்ம ராசிக்கார பெண்ணை திருமணம் செய்து கொண்டால், நிச்சயம் பணக்கார வாழ்க்கையை வாழ்வார்கள்.
4. துலாம்
துலாம் ராசியின் அதிபதியும் சுக்கிரன். இந்த துலாம் ராசியைச் சேர்ந்தவர்கள் பிறவியிலேயே லட்சுமி தேவியின் ஆசியைப் பெற்றவர்கள். எனவே இந்த துலாம் ராசியைச் சேர்ந்த பெண்களை திருமணம் செய்து கொண்டால், அப்பெண் தனது கணவருக்கு அதிர்ஷ்டத்தையும் செல்வத்தையும் கொண்டு வருவார். எனவே இந்த ராசி பெண்கள் கிடைத்தால் மிஸ் பண்ணிவிடாதீர்கள்.
5. தனுசு
தனுசு ராசியின் அதிபதி குரு பகவான். இந்த தனுசு ராசியைச் சேர்ந்த பெண்கள் தெய்வத்தின் பரிபூர்ண ஆசீர்வாதத்தைப் பெற்றவர்கள். இந்த தனுசு ராசியை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டால், அந்த பெண் தனது புகுந்த வீட்டின் அதிர்ஷ்ட கதவைத் திறப்பதோடு, தனது கணவனுக்கு ஒரு அதிர்ஷ்ட தேவதையாக இருப்பாள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications