Latest Updates
-
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்..
இந்த 5 ராசிக்காரங்க மற்றவர்களை அழவைக்கும் கொடுமைக்காரர்களாக இருப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
மற்றவர்களை கொடுமைப்படுத்துவது அல்லது காயப்படுத்துவது என்பது ஒருவர் வாழ்க்கையில் செய்யக்கூடிய மிகவும் மோசமான விஷயங்களில் ஒன்றாகும். தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்த முடியதவர்களை அல்லது பலவீனமானவர்களை தொடர்ந்து துன்புறுத்துவது என்பது அவர்களின் இதயத்தை சுக்கு நூறாக உடைக்கக்கூடும்.
இந்த மனக்காயங்கள் ஆற பல வருடங்களாகும், சிலருக்கு இந்த காயம் எப்போதும் ஆறாது. இப்படி மற்றவர்களை கொடுமைப்படுத்துபவர்கள் மனரீதியாக பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். தாங்கள் உணர்ந்த வலியை மற்றவர்களும் உணர வேண்டுமென இதுபோன்ற செயல்களில் அவர்கள் ஈடுபடுவார்கள். அப்படி மற்றவர்களை வேண்டுமென்றே காயப்படுத்துபவர்களை தவிர்ப்பது நல்லது.

ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதை அறிய அவர்களின் ராசி உதவலாம். ஜோதிடத்தின் படி சில ராசிகளில் பிறந்தவர்களிடம் இந்த மோசமான குணம் இருக்கலாம். நீங்கள் மனதளவில் பலவீனமானவராக இருந்தால் இந்த ராசிக்காரர்களிடமிருந்து விலகி இருப்பதுதான் நல்லது. அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் போரின் கிரகமான செவ்வாயால் ஆளப்படுகிறார்கள். அவர்கள் அமைதியானவர்களை தேர்ந்தெடுத்து கொடுமைப்படுத்துவார்கள். அவர்களால் தங்கள் கோபத்தை ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது, எனவே அவர்கள் யாரை வேண்டுமென்றாலும் கடுமையாகத் தாக்குவார்கள். ஒருவரைத் துன்புறுத்த அவர்களுக்கு ஒரு காரணம் தேவையில்லை. அவர்கள் நினைத்து விட்டால் போதும், அந்த நபரின் மனதை உடைக்கும் வரை அவர்கள் ஓய மாட்டார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் காதலின் கிரகமான சுக்கிரனால் ஆளப்பட்டாலும் அவர்கள் மிகவும் பிடிவாதக்காரர்களாக இருப்பார்கள். ஒருவரை அவர்கள் கிண்டல் செய்யவோ அல்லது புண்படுத்தவோ முடிவெடுத்து விட்டால் அவர்கள் மீது எந்த இரக்கத்தையும் காட்ட மாட்டார்கள். குறிப்பாக யாராவது ஒருவர் அவர்களை கிண்டல் செய்திருந்தால் அவர்களை துன்புறுத்த எந்த எல்லைக்கும் செல்ல தயங்க மாட்டார்கள்.
மிதுனம்
புதனால் ஆளப்படும் மிதுன ராசிக்காரர்கள் இரட்டை ஆளுமைக் கொண்டவர்கள், அவர்களை புரிந்து கொள்ளவே முடியாது. ஒரு நிமிடம் அவர்கள் நட்பானவர்களாக இருப்பார்கள், அடுத்த நிமிடமே அவர்கள் பெரிய கொடுமைக்காரர்களாக மாறலாம். அவர்களின் இரட்டை முகம் கொண்ட ஆளுமையைக் கண்டறிவது மிகவும் கடினம், ஏனெனில் அவர்கள் மற்றவர்களுடன் சேர்ந்து ஒருவரை மோசமாக கிண்டல் செய்வார்கள் அல்லது கொடுமைப்படுத்துவார்கள், பின்னர் மற்றவர்கள் இல்லாத போது பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறுவார்கள். அவர்கள் இரு தரப்பிலிருந்தும் வேடிக்கை பார்க்க விரும்புவார்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் மற்றவர்களை கேலி செய்வதை அதிகம் விரும்புகிறார்கள், ஏனென்றால் அது அவர்களுக்கு வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் இருக்கும். அவர்கள் மற்றவர்களின் உணர்வுகளை ஒருபோதும் மதிக்க மாட்டார்கள் அல்லது கருத்தில் கொள்ள மாட்டார்கள், அது அவர்களை மகிழ்விக்கும் என்பதால், அவர்கள் அதை தொடர்ச்சியாக செல்வார்கள். அவர்கள் மற்றவர்களுக்கு உடல்ரீதியாக தீங்கு விளைவிக்க மாட்டார்கள், ஆனால் நிச்சயமாக அவர்கள் மற்றவர்களின் உணர்வுகளை காயப்படுத்துவார்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் அவர்களின் மகிழ்ச்சி என்று வந்துவிட்டால் எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டார்கள். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி அவர்கள் கவலைப்படாததால், அவர்கள் யாரை வேண்டுமென்றாலும் மிகவும் மோசமாகவும், கொடூரமாகவும் நடத்தலாம். அவர்களுக்கு மிகக் குறைந்த அளவே இரக்கம் இருக்கும், மேலும் ஒருவரை காயப்படுத்துவதற்கான காரணங்களை அவர்கள் தேடிக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் மற்றவர்களை காயப்படுத்த விரும்புவதில்லை, ஆனால் அவர்களை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள். அதற்காக எதையும் செய்வார்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
