இந்த 4 ராசிக்காரங்க உயிரே போனாலும் யாருகிட்டயும் மன்னிப்பு கேட்கமாட்டார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?

வாழ்க்கையில் எந்த சூழ்நிலையிலும் யாரிடமும் மன்னிப்பு கேட்காத ஒருவரை நீங்கள் சந்தித்து உள்ளீர்களா? அவர்களே தவறு செய்திருந்தாலும் கூட, அது நிரூபிக்கப்பட்டால் கூட அவர்கள் ஒருபோதும் அவர்களின் தவறுகளுக்காக மன்னிப்பு கேட்க மாட்டார்கள், தங்கள் நிலையிலிருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டார்கள். அவர்களின் இந்த பிடிவாதத்திற்கும், மன்னிப்பு கேட்காத குணத்திற்கும் அவர்கள் பிறந்த ராசி காரணமாக இருக்கலாம்.

ஜோதிடத்தின் படி குறிப்பிட்ட ராசிகளில் பிறந்தவர்களிடம் இந்த பிடிவாதக் குணம் இயற்கையாகவே அதிகமிருக்கும். அவர்களின் இந்த பிடிவாதமும், முரண்பாடுகளும் அவர்களுக்கு வாழ்க்கையில் பல சிக்கல்களை ஏற்படுத்தும். அவர்களுடன் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை தீர்ப்பது மிகவும் கடினம், அதனால் அவர்கள் பெரும்பாலும் வாழ்க்கையை தனிமையில் கழிப்பார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிகளில் பிறந்தவர்கள் உயிரே போனாலும் மற்றவர்களிடம் மன்னிப்பு கேட்க மாட்டார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

Top 4 Zodiac Signs Who Never Say Sorry to Anyone

சிம்மம்

சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்காரர்கள் இயற்கையான தற்பெருமை மற்றும் தன்னம்பிக்கைக் கொண்டவர்கள். அவர்களின் வசீகரமும், கம்பீரமும் அவர்களை நேசிக்கத்தக்கவர்களாக மாற்றினாலும், அவர்களின் ஈகோ பெரும்பாலும் அவர்கள் தவறுகளை ஒப்புக்கொள்வதைத் தடுக்கிறது. சிம்ம ராசிக்காரர்கள் அவர்கள் தவறு செய்துவிட்டதாக அவர்களுக்கேத் தெரிந்தாலும், மன்னிப்பு கேட்பதை விட அதை நியாயப்படுத்துவதே சிறந்தது என்று நம்புவார்கள்.

சிம்ம ராசிக்காரர்கள் மன்னிப்பு கேட்கத் தயங்குவதற்குக் காரணம், அது அவர்களை பலவீனமானவர்களாக மாற்றும் என்ற அவர்களின் பயம்தான். அவர்கள் அனைவராலும் பாராட்டப்படுவதை விரும்புகிறார்கள், மேலும் அவர்கள் தவறு என்று ஒப்புக்கொள்வதோ அல்லது மன்னிப்பு கேட்பதோ அவர்களின் கம்பீரமான தோற்றத்திற்கு பெரிய அடியாக இருக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

மேஷம்

ராசி சக்கரத்தின் முதல் ராசியான மேஷ ராசிக்காரர்கள் மிகவும் துணிச்சலானவர்கள், அதிகம் உணர்ச்சிவசப்படுபவர்கள் மற்றும் வலுவான மனஉறுதி கொண்டவர்கள். எந்த விஷயமாக இருந்தாலும் அவர்கள் முதலில் செய்து விட்டு அதன் பின்னரே யோசிப்பார்கள், இது மோதல்களுக்கு வழிவகுக்கும். ஆனால் மன்னிப்பு கேட்கும் விஷயத்தைப் பொறுத்தவரை, மேஷ ராசிக்காரர்கள் தாங்கள் செய்யும் தவறுகளை ஒருபோதும் தவறாகவே கருத மாட்டார்கள்.

அவர்கள் செய்த தவறுகளுக்கு ஏராளமான ஆதாரங்கள் இருந்தாலும், அவர்கள் தவறு என்று ஒப்புக்கொள்ள விரும்ப மாட்டார்கள். மன்னிப்பு கேட்பது அவர்களை பலவீனமாக உணர வைக்கும், எனவே அவர்கள் பெரும்பாலும் தங்கள் தவறுகளை நியாயப்படுத்தவோ அல்லது பழியை மற்றவர்கள் மீது சுமத்தவோ முயற்சிப்பார்கள். இது ஆரோக்கியமான உறவுகளைப் பேணுவதை அவர்களுக்கு மிகவும் கடினமாக்கலாம்.

Top 4 Zodiac Signs Who Never Say Sorry to Anyone

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் தீவிரமானவர்கள் மற்றும் அதிகம் உணர்ச்சிவசப்படுபவர்கள், ஆனால் நம்பமுடியாத அளவிற்கு பிடிவாதக்காரர்களும் கூட. அவர்கள் தாங்கள் செய்யும் செயல்களில் எப்போதும் நியாயம் இருப்பதாக உணரும்போது, ​​அவர்கள் ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் எப்போதும் தவறு செய்யவே மாட்டார்கள், அப்படி தவறு செய்திருந்தாலும், தவறை நேரடியாக ஒப்புக்கொள்வதற்குப் பதிலாக, அதை மறைப்பதற்கே அதிகம் முயலுவார்கள்.

விருச்சிக ராசிக்காரர்கள் மன்னிப்பு கேட்பதைத் தவிர்க்கக் காரணம் அவர்களின் தற்பெருமை மற்றும் பலவீனம் குறித்த பயமாகும். மன்னிப்பு கேட்பது என்பது அவர்களை உணர்ச்சிரீதியாக பலவீனப்படுத்தும் என்று நம்புகிறார்கள், மேலும் அவர்கள் எப்போதும் அதிகாரம் தங்கள் கையிலிருக்க வேண்டுமென்று. தங்களின் தவறை ஒப்புக்கொள்வது அதிகாரத்தை தங்களிடமிருந்து பறிக்கும் என்று அவர்கள் பயப்படுகிறார்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் மிகவும் ஒழுக்கமானவர்கள், எதார்த்த நடைமுறை கொண்டவர்கள் மற்றும் மனஉறுதி கொண்டவர்கள், ஆனால் அவர்கள் மிகவும் கண்டிப்பானவர்களாகவும், சுயநீதி உணர்வு கொண்டவர்களாகவும் இருக்கலாம். அவர்கள் தங்கள் முடிவுகளில் எப்போதும் உறுதியாக இருக்கிறார்கள், மேலும் பெரும்பாலும் தங்கள் வழியே சிறந்த வழி என்று நினைக்கிறார்கள். இதனால் மகர ராசிக்காரர்கள் எப்போதும் மன்னிப்பு கேட்காமல் பிடிவாதமாக இருப்பார்கள்.

அவர்களுக்கு, தவறை ஒப்புக்கொள்வது என்பது தங்களின் தோல்வியை ஒப்புக்கொள்வது போன்றது, இது அவர்களின் ஒழுக்கத்தையும், லட்சியத்தையும் கேள்வி கேட்பதாக அவர்கள் கருதுகிறார்கள். அவர்கள் மன்னிப்பு கேட்பதை விட நிலைமையை சரிசெய்வதையோ அல்லது தங்களின் செயல்கள் சரி என்று நிரூபிப்பதையோ விரும்புகிறார்கள். அவர்களின் மன்னிப்பு கேட்காத குணம் அவர்களின் ஒழுக்கத்தின் மீதான பிடிவாதத்திலிருந்து உருவாகிறது.

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Desktop Bottom Promotion