Latest Updates
-
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா? -
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது! -
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 28 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது?
இந்த 4 ராசிக்காரங்க இறந்தாலும் அவங்க அடையாளம் நிலைத்து நிற்கும் சாதனையர்களாக இருப்பார்களாம்...!
ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களும் ஒரு விதத்தில் தனித்துவமானவர்கள். சிலர் மற்றவர்களால் மறக்க முடியாதவர்களாக இருப்பார்கள். அவர்கள் ஒரு இடத்தை விட்டு சென்று விட்டாலும் அங்கிருக்கும் அனைவரும் அவர்களைப் பற்றி பேசிக்கொண்டே இருப்பார்கள். அவர்களின் இருப்பு நீண்ட காலம் நீடிக்கும், மேலும் அவர்கள் வரலாற்றை படிக்க பிறந்தவர்கள் அல்ல வரலாற்றை உருவாக்கப் பிறந்தவர்கள்.
அவர்கள் இறந்தாலும் அவர்களின் பெயர் சொல்லும்படி பெரிய அடையாளத்தை உருவாக்குவார்கள். தாக்கத்தை ஏற்படுத்துவதில் அவர்கள் மற்ற ராசிக்காரர்களை விட பல படிகள் உயர்நது நிற்பார்கள். அவர்கள் மற்றவர்களை வழிநடத்துகிறார்கள் மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கிறார்கள்.அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் ஒரு இடத்திற்குள் நுழைந்து விட்டால் அவர்கள் அந்த இடத்தை ஆழத் தொடங்கி விடுவார்கள். காட்டின் அரசரான சிங்கத்தால் அடையாளப்படுத்தப்படும் இந்த நெருப்பு ராசி மற்றவர்களை வழிநடத்துவதற்காகவே பிறந்தவர்கள். சிம்ம ராசிக்காரர்களின் சக்திவாய்ந்த உள்ளுணர்வு, பிரகாசமான நம்பிக்கை மறுக்க முடியாத அடையாளத்தை விட்டுச்செல்லும். சூரியனால் ஆளப்படும் அவர்கள் சூரியனைப் போலவே பிரகாசமானவர்கள் மற்றும் புறக்கணிக்க முடியாதவர்கள்.
அவர்களின் இயல்பான வசீகரம் அனைவரையும் ஈர்க்கக் கூடியது. அவர்கள் எந்த துறையில் இருந்தாலும், சிம்ம ராசிக்காரரின் செல்வாக்கு மறுக்க முடியாதது. அவர்கள் கவனத்தை ஈர்க்கிறார்கள், அவர்கள் பெரும்பாலும் தங்கள் திறமையை மாற்றத்தை உருவாக்கவும், மக்களை ஒன்றிணைக்கவும் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் உருவாக்கும் தீப்பொறி அவர்கள் சென்ற பின்னாலும் நீடித்திருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் மாற்றம் மற்றும் ஆர்வம் உருவமாக இருப்பார்கள். அவர்கள் வலியை சக்தியாகவும், போராட்டங்களை புரட்சியாகவும், வடுக்களை வலிமையாகவும் மாற்றக் கூடியவர்கள். அவர்கள் ஒருவரின் வாழ்க்கையில் நுழைவதை அவர்கள் அறியாமல் இருக்கலாம், ஆனால் அவர்கள் நுழைந்து விட்டால் அவர்களின் வாழ்க்கை ஒரே மாதிரியாக இருக்காது.
விருச்சிக ராசிக்காரர்கள் உறவுகள், கருத்துக்கள் மற்றும் காரணங்களில் ஆழமாக மூழ்குவதால் அவர்கள் பழகுபவர்களிடம் ஒரு அசைக்க முடியாத தோற்றத்தை விட்டுச் செல்கிறார்கள். அவர்களின் தீவிர உணர்ச்சி நுண்ணறிவு மற்றும் சக்திவாய்ந்த உள்ளுணர்வு அவர்களை ஆழமான, நீடித்த மாற்றத்தை உருவாக்குபவர்களாக மாற்றுகிறது.
மகரம்
மகர ராசிக்காரர்கள் கனவுகளை உருவாக்குபவர்கள். அவர்கள் பெரும்பாலும் தங்கள் சாதனைகளை தம்பட்டம் அடிக்க மாட்டார்கள், மாறாக அடுத்த சாதனையை நோக்கி வேகமாக நகர்வார்கள். ஒழுக்கத்தின் கிரகமான சனியால் நிர்வகிக்கப்படும் மகர ராசிக்காரர்கள் திட்டமிடுவதில் சிறந்தவர்கள் மற்றும் கடின உழைப்பாளிகள்.
அவர்களின் மன உறுதி, பொறுமையான மனநிலையுடன் இணைந்து, உண்மையான, உறுதியான மாற்றத்தை உருவாக்க வழிவகுக்கிறது. அவர்கள் வணிகங்களை உருவாக்குபவர்கள், கொள்கையில் உறுதியுடன் இருப்பவர்கள் அல்லது நீண்ட காலம் நிலைத்து நிற்கும் நிறுவனங்களை உருவாக்குபவர்கள். அவர்கள் மரத்தின் வேரைப் போன்றவர்கள், அவர்கள் பூமிக்கு அடியில் இருந்தாலும் அவர்கள் உருவாக்கியவை நிலைத்து நிற்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் முன்னோக்கிச் சிந்திக்கும் திறன் கொண்டவர்கள், புதுமையானவர்கள் மற்றும் பெரும்பாலும் எதிர்காலத்தைப் பற்றி திட்டமிடக் கூடியவர்கள். கும்ப ராசிக்காரர்கள் விதிமுறைகளை மீறுபவர்கள் மற்றும் புரட்சிகரமான கருத்துக்களை ஊக்குவிக்கிறார்கள். அவர்கள் தங்களுக்கான விதிமுறைகளை உருவாக்குகிறார்கள், மேலும் மற்றவர்களை அவற்றை பின்பற்ற வைக்கிறார்கள்.
அவர்கள் மனிதாபிமான காரணங்களுக்காகப் போராடுபவர்களாக, புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடிப்பவராக அல்லது கலாச்சார நடைமுறைகளை கேள்வி கேட்பவர்களாக இருப்பார்கள். அவர்களின் பார்வை மிகவும் பெரியது, அனைவருக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதில் அவர்கள் தீவிர நம்பிக்கைக் கொண்டுள்ளனர்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
