Latest Updates
-
சனி மங்கள யோகம்: இன்று முதல் 3 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது! -
சரவணபவன் ஸ்டைல் வெள்ளை குருமா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. பூரி, சப்பாத்திக்கு அள்ளும்! -
இன்றைய ராசிபலன் 03 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
குருபகவான் உருவாக்கும் ஹன்ஸ் மகாபுருஷ யோகத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஆடிப் பெருக்கு ஸ்பெஷல் பாசிப்பருப்பு பாயாசம் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தாறுமாறா இருக்கும் -
இந்தியாவின் லண்டன் என்று அழைக்கப்படும் அழகிய நகரம் எது தெரியுமா? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
கோங்குரா முட்டை குழம்பு ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - ஹோடடலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
Aadi Perukku 2026: ஆடிப் பெருக்கு ஏன் கொண்டாடப்படுகிறது? ஆடிப் பெருக்கின் வரலாறும், முக்கியத்துவமும் -
கோலாப்பூரி மட்டன் மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
செவ்வாய் இன்று மிதுன ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி என்ன?
இந்த 4 ராசி பெண்கள்தான் உலகின் மிகவும் அன்பான சகோதரிகளாம்... உங்க அக்கா/தங்கச்சி ராசி என்ன?
ஒரு சகோதரி இருப்பது என்பது வாழ்க்கையில் மிகவும் சுவாரஸ்யமான மற்றும் மறக்க முடியாத அனுபவங்களை வழங்கக்கூடியதாகும். ஒரு சகோதரி எப்போதும் நமக்கு ஆதரவாக இருப்பார்கள், ஒருபோதும் நம்மை விட்டு விலக மாட்டார்கள், அனைத்து கடினமான சூழ்நிலைகளிலும் நமக்குத் துணையாக இருப்பார்கள்.
சகோதரர்-சகோதரிகளுக்கு இடையே சில சமயங்களில் தடைகளை சந்தித்தாலும், தேவைப்படும் நேரங்களிலும், நம்முடைய கடினமான நாட்களிலும் கைவிடாமல் துணையாக இருப்பார்கள். அதனால்தான் சகோதரி அம்மாவின் மறு உருவம் என்று அழைக்கப்படுகிறார்கள். உங்கள் சகோதரியின் ராசியைப் பொறுத்து அவர்கள் எப்படிப்பட்ட சகோதரிகளாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.. ஜோதிடத்தின் படி சில ராசிகளில் பிறந்த பெண்கள் சிறந்த சகோதரிகளாக இருப்பார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கடகம்
கடக ராசியில் பிறந்த பெண்கள் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர். சந்திரனால் ஆளப்படும் கடக ராசி பெண்கள் ஆழ்ந்த வளர்ப்பு மற்றும் பாதுகாப்பு உணர்வு கொண்டவர்கள். அவர்களுக்கு இயற்கையாகவே தாய்மை உள்ளுணர்வு அதிகமாக இருப்பதால், அவர்கள் எப்போதும் தங்கள் உடன் பிறந்தவர்களை தாய் போல அரவணைக்கிறார்கள், அவர்களுக்கு தேவைப்படும் போது ஆலோசனை வழங்கி, அவர்களை ஒருபோதும் தனியாக சவால்களை எதிர்கொள்ள விட மாட்டார்கள். சூழ்நிலை எதுவாக இருந்தாலும், அவர்கள் தங்கள் உடன் பிறந்தவர்களுக்காக பாதுகாப்பு கவசமாக இருப்பார்கள்.
துலாம்
துலாம் ராசியில் பிறந்த பெண்கள் இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளனர். இந்த ராசியில் பிறந்த பெண்கள் நல்லிணக்கம் மற்றும் நியாயத்தன்மைக் கொண்டவர்கள், சகோதர சகோதரிகளிடையே அமைதியைப் பேணுவதில் அவர்களை நம்பமுடியாத அளவிற்கு திறமை வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள்.
அவர்கள் தங்கள் வசீகரம் மற்றும் ராஜதந்திரத்தால் குடும்பத்தில் ஏற்படும் வாக்குவாதங்களைச் சமாளித்து, எப்போதும் மகிழ்ச்சியான சூழலை வீட்டில் பராமரிக்கக் கூடியவர்கள். துலாம் ராசி பெண்கள் தங்கள் அன்புக்குரியவர்களிடம் விசுவாசம் மற்றும் அர்ப்பணிப்பு கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் எப்போதும் உடன்பிறந்தவர்களுக்கு பக்க பலமாக இருக்கும் பாசக்கார சகோதரிகளாக இருப்பார்கள்.
மீனம்
மீன ராசி பெண்கள் இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்கள், அவர்கள் சிறந்த சகோதரிகளாக இருப்பார்கள். அவர்களின் சக்திவாய்ந்த உள்ளுணர்வு மற்றும் பச்சாதாப இயல்பு அவர்களை மற்றவர்களின் உணர்ச்சிகளுடன் ஆழமாக இணைய வைக்கிறது. அவர்கள் தங்கள் உடன் பிறந்தவர்கள் தவறு செய்தால் கூட அவர்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் . அவர்களின் தன்னலமற்ற அன்பும் குடும்பத்திற்காக தியாகம் செய்ய விருப்பமும் அவர்களை சிறந்த பராமரிப்பாளர்களாக மாற்றுகின்றன. வாழ்க்கையின் ஏற்ற தாழ்வுகளில் தங்கள் உடன்பிறப்புகளை ஆதரிக்கவும், ஊக்குவிக்கவும் அவர்கள் எப்போதும் தயாராக இருப்பார்கள்.
ரிஷபம்
இந்த பட்டியலில் கடைசி இடத்தில் இருப்பவர்கள் ரிஷப ராசி சகோதரிகள். ரிஷப ராசி பெண்கள் உறுதியானவர்கள், நம்பகமானவர்கள் மற்றும் தங்கள் உடன்பிறப்புகளை கடுமையாக பாதுகாப்பவர்கள். அவர்கள் எந்த சூழ்நிலையிலும் தங்கள் உடன் பிறந்தவர்களைப் பாதுகாப்பார்கள், அவர்களுக்கு உதவி தேவைப்படும்போது எப்போதும் அவர்களுக்கு உதவி செய்ய காத்திருப்பார்கள்.
அவர்கள் தங்களின் புத்திக்கூர்மையாலும், மன உறுதியாலும், அவர்கள் உறுதியான மற்றும் பயனுள்ள ஆலோசனைகளை வழங்க முடியும். அவர்கள் தன்னால் உடன் பிறந்தவர்களுக்கு மட்டுமல்ல தங்களின் குடும்பத்திற்கே பாதுகாவலர்களாக இருக்கிறார்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
