Latest Updates
-
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, தன் பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்.. -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான்
இந்த 4 ராசிக்காரங்க காதலில் எப்போதும் விட்டுக்கொடுக்கும் தியாகிகளாக இருப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களும் ஒரு விதத்தில் தனித்துவமானவர்களாக இருப்பார்கள். அவர்களின் தனித்துவம் அவர்களின் காதல் உறவுகளிலும் வெளிப்படும். சிலர் தங்கள் காதலில் எப்போதும் அதிகாரம் எப்போதும் தங்கள் கையில் இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கும் அதே நேரத்தில் சிலர் தங்கள் துணைக்காக அனைத்தையும் விட்டுக்கொடுப்பவர்களாக இருப்பார்கள்.
ஜோதிடத்தின் படி சில ராசிகளில் பிறந்தவர்களிடம் இந்த தன்னலமனற்ற அன்பும், காதலில் தீவிர அர்ப்பணிப்பும் இருக்கும். அவர்கள் தங்கள் துணை மீது விதிவிலக்கான அன்பு கொண்டிருப்பதுடன் அவர்களுக்காக எதையும் செய்பவர்களாக இருப்பார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிகளில் பிறந்தவர்கள் காதலில் விட்டுக்கொடுக்கும் தியாகியாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
ராசி சக்கரத்தின் முதல் ராசியான மேஷ ராசிக்காரர்கள் பெரும்பாலும் ஆர்வம், லட்சியம் மற்றும் தைரியத்துடன் தொடர்புடையவர்கள். இருப்பினும், அவர்களின் ஆக்ரோஷமான குணத்திற்கு பின்னால் அவர்களின் அன்புக்குரியவர்களுக்காக எதையும் செய்யும் ஒரு அன்பான இதயம் உள்ளது. மேஷ ராசிக்காரர்கள் தங்கள் துணையின் நல்வாழ்விற்காகவும், மகிழ்ச்சிக்காகவும் எதையும் தியாகம் செய்யத் தயாராக உள்ளனர்.
அவர்களின் துணிச்சலான இயல்பு அவர்களை சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்ள வைக்கிறது. அது தங்கள் அன்புக்குரியவர்களுக்காக துணை நிற்பதாக இருந்தாலும் சரி அல்லது காதலை பராமரிக்க தனிப்பட்ட தியாகங்களைச் செய்வதாக இருந்தாலும் சரி, அவர்கள் தங்கள் துணையின் மகிழ்ச்சியை உறுதிப்படுத்த எதையும் செய்வார்கள்.
கடகம்
சந்திரனால் ஆளப்படும் கடக ராசிக்காரர்கள், தீவிர உணர்வுகளும் மற்றும் அக்கறையான இயல்பும் கொண்டவர்கள். இந்த ராசியில் பிறந்தவர்கள் உள்ளார்ந்த பச்சாதாபம் மற்றும் இரக்க உணர்வைக் கொண்டுள்ளனர். அவர்கள் தங்கள் துணைக்கு உணர்ச்சிபூர்வமான ஆதரவையும், பாதுகாப்பையும் வழங்க அதிக முயற்சி எடுப்பார்கள்.
கடக ராசியின் தியாக இயல்பு, தங்கள் துணையின் தேவைகளை தங்கள் சொந்த தேவைகளுக்கு மேலாக நினைக்கும் திறனில் வெளிப்படுகிறது. தங்கள் அன்புக்குரியவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் அன்பான சூழலை உருவாக்க அவர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வார்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையின் அனைத்து விஷயங்களிலும் நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை பராமரிக்க விரும்புகிறார்கள். துலாம் ராசிக்காரர்கள் தங்கள் உறவுகளில் அமைதி மற்றும் சமநிலையைப் பேணுவதற்கு சமரசம் மற்றும் தியாகம் செய்ய எப்போதும் தயாராக இருப்பார்கள்.
உறவில் மோதல்களைத் தவிர்க்கவும், தங்கள் உறவு மகிழ்ச்சியாக இருப்பதை உறுதி செய்யவும் அவர்கள் தியாகங்களைச் செய்யத் தயாராக உள்ளனர். தங்கள் துணையின் ஆசைகள் மற்றும் தேவைகளுக்கு தங்கள் விருப்பங்களை விட முக்கியத்துவம் கொடுக்கும் துலாம் ராசிக்காரர்களின் திறன், காதலுக்காக தன்னலமின்றி விட்டுக்கொடுக்கும் திறனை அவர்களுக்கு வழங்குகிறது.
விருச்சிகம்
தீவிரம் மற்றும் அதீத ஆர்வத்துடன் தொடர்புடைய விருச்சிக ராசிக்காரர்கள், தங்கள் துணையின் மீது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு கொண்டவர்களாக இருப்பார்கள். விருச்சிக ராசிக்காரர்கள் தங்கள் அன்புக்குரியவர்களை கடுமையாகப் பாதுகாப்பார்கள், மேலும் அவர்களைப் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க எப்படிப்பட்ட தியாகத்தையும் செய்யத் தயாராக இருப்பார்கள்.
உறவுகளில் அவர்களின் விசுவாசத்திற்கும், நேர்மைக்கும் எல்லையே இல்லை, மேலும் அவர்கள் தங்கள் துணையை ஆதரிக்கவும் மேம்படுத்தவும் அதிக முயற்சி எடுப்பார்கள். அதற்காக அவர்கள் விட்டுக்கொடுக்கவும், தியாகம் செய்யவும் தயாராக இருப்பார்கள். விருச்சிக ராசிக்காரர்கள் அன்பின் ஆழத்தைப் புரிந்துகொள்கிறார்கள், எனவே அதை பாதுகாக்க கடுமையாக முயற்சிப்பார்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
