Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
இந்த 4 ராசி பெண்களால் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியாதாம்... இவர்களின் கோபம் பேரழிவை ஏற்படுத்தும்...!
கோபம் என்பது ஒரு இயல்பான மனித உணர்வாகும், மனிதராக பிறந்த அனைவருமே கோபப்படத்தான் செய்வார்கள். சிலருக்கு கோபம் அவர்களின் சுயமரியாதையை பாதுகாக்கும் கவசமாக இருக்கும். கோபத்தை சரியாக பயன்படுத்தினால் அது ஒருவரை காப்பாற்றும் ஆயுதமாக இருக்கும், அதேசமயம் கோபம் அதிகமாகும் போது அது ஒருவரை அழிக்கும் ஆயுதமாக மாறும்.
ஜோதிடத்தின் படி சில ராசிக்காரர்கள் தங்களின் கோபத்தை கவசமாக பயன்படுத்துவார்கள், ஆனால் சில ராசிக்காரர்களின் கோபம் அடுத்தவர்களை மட்டுமின்றி அவர்களையே அழிப்பதாக இருக்கும். குறிப்பாக இந்த ராசிகளில் பிறந்த பெண்களின் கோபம் பேரழிவை ஏற்படுத்துவதாக இருக்கும். அவர்கள் அமைதியிலிருந்து கோபமான மனநிலைக்கு சில நொடிகளில் சென்று விடுவார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிகளில் பிறந்த பெண்களின் மிகவும் ஆபத்தானதாக இருக்கும் என்று தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசி பெண்கள் தைரியம் மற்றும் ஆக்ரோஷத்தின் கிரகமான செவ்வாய் கிரகத்தால் ஆளப்படுகிறார்கள், இதுவே அவர்களின் வெடிக்கும் கோபத்திற்கான காரணமாக இருக்கிறது. அவர்கள் அடிக்கடி மனநிலை மாற்றங்களுக்கு ஆளாவார்கள், சில சமயம் அமைதியாக இருப்பார்கள், அதேசமயம் சில நொடிகளில் வெடித்துச் சிதறும் அளவிற்கு கோபப்படுவார்கள். மேஷ ராசிக்காரர்கள் தங்கள் அதிகாரம் அல்லது சுதந்திரத்திற்கு இடையூறு ஏற்படும் போது கடுமையாக கோபப்படுவார்கள்.
மேஷ ராசி பெண்கள் எளிதில் உணர்ச்சிவசப்படுவார்கள், திட்டமிட்டபடி விஷயங்கள் நடக்காதபோது, அவர்கள் தங்களுக்கு பிடித்தவர்களிடம் கூட கடுமையாகப் பேசுவார்கள். அவர்களிடம் உள்ள ஒரு நல்ல குணம் என்னவெனில் அவர்கள் நீண்ட காலம் வெறுப்புணர்வை வைத்திருக்க மாட்டார்கள், ஆனால் அவர்களின் தற்காலிக கோபம் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
ரிஷபம்
ரிஷப ராசி பெண்கள் பொதுவாக அமைதியானவர்களாக இருப்பார்கள், ஆனால் எல்லைகள் மீறப்படும் போது அவர்களின் கோபம் பேரழிவை ஏற்படுத்தக்கூடும். அவர்களின் பிடிவாதமான தன்மை, குறிப்பாக அவர்கள் துரோகம் செய்யப்பட்டதாகவோ அல்லது அவமதிக்கப் பட்டதாகவோ உணர்ந்தால், அவர்கள் நீண்ட நேரம் தங்கள் கோபத்தை மறைத்து வைத்திருப்பார்கள்.
அவர்கள் எளிதில் மறந்துவிட மாட்டார்கள், மேலும் அவர்களின் உள்ளுக்குள் இருக்கும் கோபம் சரியான சமயத்தில் வெளிப்பட்டு எதிரில் இருப்பவர்களை வீழ்த்தும். அவர்களை கோபப்படுத்தியவர்கள் எவ்வளவு நெருக்கமானவராக இருந்தாலும் அதற்கான தண்டனையை அவர்கள் அனுபவித்தே தீர வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசி பெண்கள் அவர்களின் அரச குணங்களுக்கு பெயர் பெற்றவர்கள், மேலும் அவர்கள் புறக்கணிக்கப்படுவதையோ அல்லது அவமதிக்கப்படுவதையோ ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். தங்கள் மனம் புண்படுத்தப்பட்டதாக உணரும்போது, அவர்களின் கோபம் விரைவாக அதிகரிக்கும்.
அவர்களின் சுயமரியாதை பெரும்பாலும் அவர்களின் ஆக்ரோஷத்திற்கு அடிப்படையாக இருக்கிறது, இதனால் அவர்களின் கோபம் தீவிரமான இருக்கும் ஆனால் குறுகிய காலமே நீடிக்கும். அவர்களின் கோபம் பெரும்பாலும் அவர்களுடைய இமேஜை பராமரிக்கவும், தங்கள் சுயமரியாதையைப் பாதுகாக்கவும் வேண்டிய அவசியத்திலிருந்து உருவாகிறது. இவற்றுக்கு பாதிப்பு ஏற்படுத்துபவர்கள் அவர்களால் கடுமையாக தாக்கப்படலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசி பெண்கள் தங்கள் தீவிரத்திற்கும் உணர்ச்சி ஆழத்திற்கும் பெயர் பெற்றவர்கள், மேலும் அவர்களின் கோபமும் அதே அளவு தீவிரமாக இருக்கும். துரோகம் செய்யப்படும்போது, அவர்கள் ஒருபோதும் யாரையும் மன்னிக்க மாட்டார்கள், மேலும் பல ஆண்டுகள் அவர்கள் மனதிற்குள் பகையை சுமந்து கொண்டிருப்பார்கள்.
விருச்சிக ராசி பெண்கள் கோபத்தை ரகசியமாக வைத்திருப்பார்கள், எனவே அவர்கள் கோபமாக இருக்கும்போது, அவர்கள் கோபமாக இருப்பதை யாராலும் தெரிந்து கொள்ள முடியாது. விருச்சிக ராசிக்காரர்கள் கோபத்தை மிகவும் ஆழமாக உணர்கிறார்கள், அவர்கள் காயப்படும்போது அல்லது ஏமாற்றப்படும்போது, அவர்கள் ஒரு மோசமான எதிர்வினைகளை ஏற்படுத்துவார்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
