Latest Updates
-
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்...
இந்த 4 ராசிகளில் பிறந்த பெண்கள் மற்றவர்களின் உயிரை எடுப்பதற்கே பிறந்தவர்களாம்... இவங்கள சமாளிக்கவே முடியாது...
ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களுமே ஒரு விதத்தில் தனித்துவமானவர்கள்தான். சில ராசிக்காரர்களிடம் நேர்மறை குணங்கள் அதிகமாக இருக்கும்போது சில ராசிக்காரர்களிடம் எதிர்மறை குணங்கள் அதிகமாக இருக்கும். இந்த எதிர்மறை குணத்தால் அவர்கள் அனைவரின் வெறுப்பையும் சம்பாதிப்பார்கள். குறிப்பாக இந்த ராசிகளில் பிறந்த பெண்கள் எப்போதும் மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுப்பவர்களாகவும். எரிச்சலை ஏற்படுத்துபவர்களாகவும் இருப்பார்கள்.
சில சமயங்களில் இவர்கள் இதை தெரிந்தும் பல சமயங்களில் தெரியாமலும் செய்கிறார்கள். பெரும்பாலும் அவர்கள் மற்றவர்களால் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறார்கள். இந்த பதிவில் எப்போதும் மற்றவர்களால் வெறுக்கப்படும் அல்லது மற்றவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் பெண் ராசிக்காரர்கள் யாரென்று தெரிந்து கொள்ளலாம்.

மிதுனம்
மிதுன ராசி பெண்கள் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்கள். அவர்களின் இரட்டை இயல்பு அவர்களை சூழலுக்கு ஏற்ப மாறிக்கொள்பவராகவும், திறந்த மனதுடையவர்களாகவும், மோசமான நகைச்சுவை உணர்வுடையவர்களாகவும், ஒரே நேரத்தில் பல விஷயங்களைப் பற்றி சிந்திக்கக் கூடியவர்களாகவும் மாற்றுகிறது.
மற்றவர்கள் உண்மையை நிலையானதாகக் கருதினாலும், மிதுன ராசி பெண்கள் பல்வேறு கண்ணோட்டங்கள் என்னென்ன பலன்களை வழங்க முடியும் என்பதைக் காண முடியும். இருப்பினும், விரைவாகவும் அடிக்கடியும் தங்கள் மனதை மாற்றிக்கொள்ளும் அவர்களின் குணம் குழப்பமானதாகவோ, வெறுப்பூட்டுவதாகவோ இருக்கும் இதனால் அவர்கள் எப்போதும் வெறுக்கப்படுபவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பார்கள்.
விருச்சிகம்
மாற்றத்தின் கிரகமான புளூட்டோவால் ஆளப்படும் விருச்சிக ராசி பெண்கள், மற்றவர்களுக்கு உணர்ச்சிரீதியான காயத்தை ஏற்படுத்துவார்கள், அவர்களின் செயல்கள் எப்போதும் ஆழமான எதிர்வினைகளைத் தூண்டும். பொதுவாகவே விருச்சிக ராசிக்காரர்கள் பழிவாங்கும் எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள், அதேசமயம் இந்த ராசி பெண்கள் தீவிரமாக பழிவாங்குபவர்களாக இருப்பார்கள்.
அவர்களின் மற்ற திறமைகள் அனைவரையும் அவர்களை நோக்கி ஈர்க்கும், ஆனால் அவர்களின் மற்ற குணங்கள் எவ்வளவு விரைவாக அவர்களுக்கு நண்பர்கள் சேர்கிறார்க்ளோ அவ்வளவு விரைவில் அவர்களை அவர்களிடமிருந்து விரட்டி விடும். அவர்கள் தங்கள் வார்த்தைகளால் அனைவரையும் காயப்படுத்துவார்கள். அவர்களின் மோசமான வார்த்தைகளை தாங்கிக் கொண்டு அவர்களுடன் இருப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.
மகரம்
மகர ராசி பெண்கள் மற்றவர்களுக்குக் கடுமையானவர்களாகத் தோன்றலாம். ஒழுக்கம், கர்மா மற்றும் சமநிலையின் கிரகமான சனிபகவான் அவர்களை ஆள்கிறார். இந்த பூமி ராசி நம்பகத்தன்மை, பாதுகாப்பு மற்றும் ஒழுக்கத்தை விரும்புகிறது. இருப்பினும், அவர்கள் தாங்கள் பழகும் அனைவரிடமும் அவர்கள் எதிர்பார்க்கும் தரமும், ஒழுக்கமும் இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள்.
ஆனால் அனைவராலும் அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியாது. அவர்களின் எதிர்பார்ப்புகளை ஒருவர் பூர்த்தி செய்யாத போது அவர்கள் மிகவும் கடுமையாக நடந்து கொள்வார்கள். அவர்கள் தங்களுக்கு பிடிக்காதவர்களை கடுமையாக வெறுப்பார்கள், எனவே அதேயளவு வெறுப்பை அவர்கள் மீண்டும் சம்பாதிப்பார்கள்.
கன்னி
கன்னி ராசி பெண்கள் புத்திசாலிகள் ஆனால் அதேசமயம் மிகவும் கடுமையானவர்கள். அவர்கள் அனைத்து விஷயங்களையும் கவனிப்பார்கள், சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட கவனம் செலுத்துவார்கள். இது சிலசமயங்களில் பயனுள்ளதாக இருந்தாலும் பல சமயங்களில் உடனிருப்பவர்களை உச்சகட்ட எரிச்சலுக்கு அழைத்துச் செல்லும்.
புத்திசாலித்தனத்தின் கிரகமான புதனால் ஆளப்படும் இந்த ராசி பெண்கள், எப்போதும் மற்றவர்களை கட்டுப்படுத்த விரும்புகிறார்கள் மற்றும் தங்களின் புத்திசாலித்தனத்தை எப்போதும் உலகத்துக்கு வெளிப்படுத்த விரும்புவார்கள். அதற்காக அவர்கள் எடுக்கும் முயற்சிகள் எப்போதும் அவர்களுக்கு மற்றவர்களின் வெறுப்பை பெற்றுக் கொடுக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












