Latest Updates
-
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம்
இந்தியாவில் மக்கள் பாதுகாப்பாக இருக்கும் டாப் 10 நகரங்கள் இதுதான்..சென்னை எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா
Top 10 Safest Cities in India: உலகின் மிகப்பெரிய நாடான இந்தியாவில் கிட்டதட்ட 140 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கிறார்கள். இந்தியாவின் பன்முக கலாச்சாரத்தன்மை அதன் 28 மாநிலங்களிலும் பிரதிபலிக்கிறது. ஒவ்வொரு மாநிலமும் தங்களுக்கென தனி மொழியையும், கலாச்சாரத்தையும் கொண்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்தின் கலாச்சாரமும் வேறுபடுவது போல அதன் குற்ற விகிதங்களும் வேறுபடுகிறது.
அனைத்து மாநிலங்களிலுமே குற்றங்கள் நடந்தாலும் சில மாநிலங்கள் தங்களின் குடிமக்களுக்கு குறைந்தபட்ச பாதுகாப்பை உறுதி செய்கின்றன. ஒரு மாநிலத்தின் பாதுகாப்புதான் அந்த மாநிலத்தின் முன்னேற்றத்திற்கான அடிப்படை ஆதாரமாக இருக்கும். இந்த பதிவில் இந்தியாவில் சிறந்த பாதுகாப்பை உறுதி செய்யும் டாப் 10 நகரங்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

இந்த நகரங்கள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து சிறந்த வாழ்க்கைத் தரத்திற்காக நாடு முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகள், தொழில் வல்லுநர்கள் மற்றும் மாணவர்களை ஈர்க்கின்றன. NCRB அறிக்கையின்படி, இந்தியாவின் முதல் 10 பாதுகாப்பான நகரங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
கொல்கத்தா - மேற்கு வங்கம்
மேற்கு வங்காளத்தில் உள்ள கொல்கத்தா, இந்தியாவின் அனைத்து பெரிய நகரங்களை ஒப்பிடும் போதும் மிகக் குறைந்த குற்ற விகிதங்களைக் கொண்ட பாதுகாப்பான இந்திய நகரமாக உள்ளது. கொல்கத்தாவில் அதிக குற்றப்பத்திரிகை விகிதம் உள்ளது, அதாவது பதிவாகும் பெரும்பாலான குற்றங்கள் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படுகின்றன. இங்கு நடக்கும் குற்றங்களில் கிட்டதட்ட 88% குற்றங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இங்கு நீதிமன்ற நடைமுறையும் சுமூகமாக உள்ளது.
சென்னை - தமிழ்நாடு
நமது தமிழ்நாட்டின் மாநிலத் தலைநகரான சென்னையில், மற்ற பெரிய நகரங்களுடன் ஒப்பிடும்போது மிதமான குற்ற விகிதம் உள்ளது. இங்கு பதிவு செய்யப்படும் குறைந்த குற்றப்பத்திரிகை விகிதங்களே அதிகப்படியான வழக்குகள் அல்லது நடைமுறை தாமதங்களுக்குக் காரணமாக உள்ளது. NCRB அறிக்கையின் படி இங்கு 17% குற்றப்பத்திரிக்கைகள் மட்டுமே பதிவு செய்யப்படுகின்றன. சென்னையின் வலுவான நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் கண்காணிப்பு தொழில்நுட்பத்தின் பரவலான பயன்பாடு ஆகியவை குடிமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பைப் புலப்படுத்துகின்றன.
கோயம்புத்தூர் - தமிழ்நாடு
தமிழ்நாட்டின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோயம்புத்தூர், அதன் தொழில்துறை மற்றும் கல்வி வளர்ச்சிக்கு பெயர் பெற்றது. கோயம்புத்தூரின் குற்ற விகிதம் சென்னையை விட அதிகமாக உள்ளது, ஆனால் அதன் வலுவான குற்றப்பத்திரிகை விகிதம், வழக்குகளைத் தொடர்வதில் சட்டத்துறை முன்முயற்சியுடன் செயல்படுகிறது என்பதைக் காட்டுகிறது. இங்கு கிட்டதட்ட 87% குற்றங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இங்கு சமூக விழிப்புணர்வு மற்றும் திறமையான காவல் துறை சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
சூரத் - குஜராத்
குஜராத் மாநிலத்தின் சூரத் வேகமாக வளர்ந்து வரும் இந்திய நகரங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த நகரத்தில் அதிக அளவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவது, நகரத்தில் நீதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் உறுதியான நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. சூரத்தில் கிட்டதட்ட 84% குற்றங்கள் பதிவு செய்யப்படுகின்றன.
புனே - மஹாராஷ்ரா
புனே இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் நகரமாக உள்ளது. மகாராஷ்டிராவின் கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்ப மையமாக புனே உள்ளது. இது வழக்கமான நகர்ப்புற பாதுகாப்பு பிரச்சினைகளை எதிர்கொள்கிறது, இருப்பினும், அதிக குற்றப்பத்திரிகை விகிதம், வேகமாக குற்றங்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைக் காரணாமாக இது பாதுகாப்பான நகரங்களில் ஒன்றாக இருக்கிறது. இங்கு 80% குற்றங்கள் மீது குற்றப்பத்திரிகை பதிவு செய்யப்படுகிறது.
ஹைதராபாத் - தெலுங்கானா
தெலுங்கானாவின் தலைநகரான ஹைதராபாத்தில் அதிக குற்ற விகிதம் உள்ளது, சொல்லப்போனால் இந்தியாவில் அதிக குற்றங்கள் நடக்கும் மாநிலங்களில் இதுவும் உள்ளது. ஆனால் நிலையான குற்றப்பத்திரிகையை பராமரிப்பதன் மூலம் இங்கு குற்றங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வளர்ந்த தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் காவல் துறையும் இங்கு குற்ற விகிதங்களை குறைவாக வைத்திருக்க தொடர்ந்து முயன்று வருகின்றன. இங்கு 65% குற்றங்கள் பதிவு செய்யப்படுகின்றன.
பெங்களூரு - கர்நாடகா
கர்நாடகாவில் தலைநகரமான பெங்களூரு இந்தியாவின் ஐடி தலைநகரம் என்றும் அழைக்கப்படுகிறது. நகரமயமாக்கல் மற்றும் வேகமான வளர்ச்சி, குற்றங்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகை தாக்கல் மற்றும் காவல் துறையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான விகிதத்தை அதிகரிக்ககிறது, இது நகரத்தின் பாதுகாப்பை அதிகரிக்கிறது. குற்றங்கள் தொடர்ந்து நடந்து வந்தாலும், இங்கு அதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படுகின்றன. பெங்களூரில் நடக்கும் குற்றங்களில் 68% குற்றங்கள் மீது குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யப்படுகிறது.
அகமதாபாத் - குஜராத்
குஜராத்தின் மற்றொரு பெரிய நகரமான அகமதாபாத்தில் அதிக குற்ற விகிதம் உள்ளது. அதேநேரம் இங்கு குற்றப்பத்திரிகை விகிதமும் மிகவும் அதிகமாக உள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியின் ஆதரவுடன் காவல்துறை நீதியைக் காப்பாற்றுவதில் முனைப்புடன் உள்ளது. இங்கு கிட்டதட்ட 88% குற்றங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகின்றன.
மும்பை - மகாராஷ்டிரா
மும்பை இந்தியாவின் பொருளாதார மையமாக உள்ளது. மும்பை காவல் துறை இந்தியாவின் சிறந்த காவல் துறைகளில் ஒன்று என பெயரெடுத்துள்ளது, ஏனெனில் மும்பை காவல்துறை குற்றங்களைத் தடுப்பதிலும் கண்டறிவதிலும் கவனம் செலுத்துகிறது மற்றும் நகரம் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் இருப்பதை உறுதி செய்கிறது. இங்கு 77% குற்றங்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுகிறது.
கோழிக்கோடு - கேரளா
கடவுளின் தேசமான கேரளாவின் கோழிக்கோடு நகரம் அதிக குற்ற விகிதத்தையும், முதல் பத்து நகரங்களில் அதிக குற்றப்பத்திரிகை விகிதத்தையும் கொண்டுள்ளது. இங்கு 89% குற்றங்கள் மீது குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யப்படுகிறது. இது கேரளாவின் காவல்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கைக்கான சான்றாகவும் உள்ளது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












