Latest Updates
-
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா? -
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது! -
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 28 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது?
Today Rasi Palan 27 October 2024: சூரியனின் ஆசியால் இன்று இந்த ராசிக்காரர்களின் தடைபட்ட வேலைகள் முடிவடையும்..
Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். 2024ம் ஆண்டு அக்டோபர் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 7.45-8.45 மணி வரை. மாலை 3.15-4.15 மணி வரை. ராகு காலம் காலை 4.30-6.00 மணி வரை. குளிகை காலை 3.00-4.30 மணி வரை. எமகண்டம் காலை 12.00-1.30 மணி வரை. சூலம் - மேற்கு திசை. பூராடம், உத்திராடம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இன்று நீங்கள் வேலை தொடர்பாக மேற்கொள்ளும் பயணம் வெற்றியடையும். பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றத்திற்கான பாதை திறக்கப்படும். நிதி ரீதியாக, இன்று சிறப்பாக இருக்கும். ஆனால் யோசிக்காமல் எதிலும் முதலீடுகளை செய்யாதீர்கள். வேலையில் அதிக கவனம் தேவை. வாழ்க்கைத் துணையுடன் குறுகிய தூர பயணத்தை மேற்கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு சிறப்பாக இருக்காது. உங்களின் கவலைகள் அதிகரிக்கும் செய்திகளைப் பெறுவீர்கள். வேலைப்பளு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் உங்களுக்கு இன்று போதுமான ஓய்வெடுக்க நேரம் கிடைக்காது. முக்கிய வேலைகளில் தடைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வீட்டில் வயதானவர்கள் இருந்தால், அவர்களின் உடல்நிலை திடீரென மோசமடையக்கூடும். காதல் உறவுகளில் இனிமை அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உடல் வலியால் சிரமப்படுவீர்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இன்று பணிபுரிபவர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் நிதி தொடர்பான முடிவுகளை புத்திசாலித்தனமாக எடுக்க வேண்டும். வியாபாரத்தில் விரைவில் முன்னேற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடையே அன்பும் ஒற்றுமையும் இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க போதுமான ஓய்வை எடுக்க வேண்டும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இன்று உங்கள் வேலையில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும். கவனக்குறைவு உங்கள் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். ஆனால் அதிக செலவு செய்வதைத் தவிர்க்க வேண்டும். வியாபாரத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பதில் சிரமம் ஏற்படலாம். வேலை சம்பந்தமாக திடீர் பயணங்கள் ஏற்படும். உங்களின் இந்த பயணம் மிகவும் முக்கியமானதாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இன்று பணியிடத்தில் சவால்களை சந்திப்பீர்கள். பொறுமையாக இருக்க வேண்டும். உங்கள் அன்புக்குரியவர்களுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். அவசர அவசரமாக எந்த ஒரு வேலையையும் செய்ய வேண்டாம். எல்லா வேலைகளையும் திட்டமிட்ட முறையில் முடிக்க முயற்சி செய்யுங்கள். காதல் வாழ்க்கை மன அழுத்தம் நிறைந்ததாக இருக்கும். இந்த மன அழுத்தம் உங்களை பலவீனப்படுத்தும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இன்று உறவுகளைப் பொறுத்தவரை மிகவும் சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் சூழ்நிலை சிறப்பாக இருக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். குறைந்த முயற்சியில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். ஆரோக்கிய விஷயத்தில் கவனக்குறைவாக இருக்காதீர்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இன்று பணிபுரிபவர்களுக்கு சற்று சிரமமாக இருக்கும். சட்ட விஷயங்களில் அலட்சிமாக இருக்காதீர்கள். பணியிடத்தில் அவசரமாக செய்யும் வேலையால் பெரிய தவறு செய்து, அதன் விளைவாக உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாவீர்கள். தம்பதிகளுக்கு இடையே பிரச்சனைகள் என்றால் அதை பேசி தீர்க்க முயற்சிக்க வேண்டும். காயம் ஏற்படும் வாய்ப்புள்ளதால், எந்த வேலையையும் அவசரமாக செய்யாதீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இன்று பணியிடத்தில் அதிக மன அழுத்தத்தைத் தவிர்க்க வேண்டும். பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். பணம் தொடர்பான பரிவர்த்தனைகளைச் செய்யும்போது கூடுதல் கவனமாக இருங்கள். வியாபாரிகள் விரைவான லாபம் ஈட்ட தவறான பாதையை பின்பற்றுவதை தவிர்க்கவும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இன்று மாணவர்களுக்கு சாதகமாக இருக்கும். பணியிடத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், உங்கள் பிரச்சனையை தீர்க்க முடியும். விடாமுயற்சியுடன் செயல்படுவீர்கள். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. கடினமான எந்த ஒரு காரியத்தையும் மிக எளிதாக செய்து முடிப்பீர்கள். காதல் வாழ்க்கையில் சில குழப்பங்கள் இருக்கும். உங்கள் தனிப்பட்ட விஷயங்களில் மூன்றாம் நபர் தலையிட அனுமதிக்காதீர்கள். இன்று கண் சம்பந்தமான பிரச்சனைகளை சந்திக்கலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு காதல் நிறைந்த நாளாக இருக்கும். திருமணமாகாதவர்கள் தங்கள் துணையை சந்திக்கலாம். நிதி நிலை வலுவாக இருக்கும். உங்களின் வேலை உரிய நேரத்தில் முடிவடையும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வீட்டின் சூழல் அமைதியாக இருக்கும். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சிறப்பாக இருப்பீர்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இன்று பணியிடத்தில் சூழ்நிலை சாதகமாக இருக்கும். மாணவர்கள் தங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்களைப் பெறுவார்கள். தடைபட்ட வேலைகள் முடிவடையும். அரசு வேலையில் இருப்பவர்கள் விரும்பிய இடமாற்றத்தைப் பெறலாம். உங்கள் துணையுடனான உங்கள் உறவு வலுவாக இருக்கும். இதயம் தொடர்பான நோய் இருந்தால், உங்களை நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இன்று வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஆழமாகலாம். உங்களின் கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அதுவே பிரச்சனையை கொண்டு வந்துவிடும். வேலை தொடர்பான முயற்சிகள் வெற்றி பெறும். உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். இன்று உங்கள் பேச்சு மற்றும் நடத்தையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications