Latest Updates
-
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்?
Today Rasi Palan 25 October 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கோபத்தை கட்டுப்படுத்தணும்....
Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். 2024ம் ஆண்டு அக்டோபர் 25ம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 9.15-10.15 மணி வரை. மாலை 4.45-5.45 மணி வரை. ராகு காலம் காலை 10.30-12.00 மணி வரை. குளிகை காலை 7.30-9.00 மணி வரை. எமகண்டம் காலை 3.00-4.30 மணி வரை. சூலம் - மேற்கு திசை. கேட்டை, மூலம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இன்று உங்களைத் தேடி பணம் வரும். நிதி நிலை வலுவடையும். அலுவலகத்தில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். அதே சமயம் பணியிடத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கும். வீட்டின் சூழ்நிலை நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இன்று அலுவலகத்தில் சில முக்கிய பொறுப்புக்களைப் பெறுவீர்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். திருமண வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்படலாம். நிதி நிலை வலுவாக இருக்கும். வேலை தொடர்பாக எடுக்கும் எந்த முடிவும் சரியானதாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில் உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க போதுமான ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்படுகிறது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இன்று குடும்ப உறுப்பினர்களுடன் பிரச்சனைகளை சந்திக்கலாம். அதற்கு உங்கள் கோபம் காரணமாக இருக்கலாம். எனவே இன்று உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். வணிகர்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். உங்கள் பேச்சு மற்றும் நடத்தையில் கவனம் செலுத்துங்கள். நீண்ட நேரம் பசியுடன் இருப்பதைத் தவிர்க்கவும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இன்று நிதி நிலை வலுவாக இருக்கும். பல வழிகளில் இருந்து வருமானத்தைப் பெறுவீர்கள். தனிப்பட்ட விஷயங்களில் மூன்றாம் நபரை அதிகம் தலையிட அனுமதிக்காமல் இருந்தால் நல்லது. காதல் வாழ்க்கையில் சில பிரச்சனைகள் வரலாம். நீங்கள் எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்களோ, அவ்வளவு சிறந்த முடிவுகளைப் பெறுவீர்கள். வீட்டின் சூழல் நன்றாக இருக்காது. ஆரோக்கியம் சற்று மோசமாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இன்று சிக்கிய பணத்தைப் பெறுவீர்கள். உங்கள் பிள்ளைகளின் சிறப்பான முன்னேற்றத்தைக் கண்டு பெருமைப்படுவீர்கள். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் நல்ல ஒருங்கிணைப்பைப் பேண முயற்சி செய்யுங்கள். வேலைகளில் முழு கவனம் செலுத்துங்கள். இன்று உங்கள் எதிரிகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். இதனால் உங்களின் வேலைகளில் இடையூறுகளை சந்திக்கலாம். நீங்கள் தொடர்ந்து தலைவலி பிரச்சனையை எதிர்கொண்டால், நீங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! நீங்கள் பரம்பரை தொழிலை செய்து வந்தால், இன்று உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இன்று உங்கள் மனைவி உடல்நலம் குறித்து கவலைப்படலாம். திருமண வாழ்க்கையில் அன்பும் உற்சாகமும் நிலைத்திருக்கும். பரஸ்பர புரிதல் சிறப்பாக இருக்கும். வேலையில் முன்னேற்றத்தைக் காண கடினமாக உழைக்க வேண்டும். வேலை தொடர்பான முடிவுகளை எடுப்பதில் சிரமம் ஏற்படலாம். பெரிய முதலீடுகளை செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இன்று நிதி நிலையில் பெரிய உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வேலை சம்பந்தமான முடிவுகளை புத்திசாலித்தனமாக எடுப்பீர்கள். வியாபாரிகள் அவசரப்பட்டு நிதி பரிவர்த்தனை செய்ய வேண்டாம். உறவுகளில் ஒருங்கிணைப்பு சிறப்பாக இருக்கும். பாதகமான சூழ்நிலைகளில் அன்புக்குரியவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இன்று வீண் கவலைகளால் சூழப்படுவீர்கள். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் முக்கியமான பணிகளில் சரியாக கவனம் செலுத்த முடியாது. நாளின் இரண்டாம் பகுதியில் திடீரென்று சிறிது தூரம் பயணிக்க வேண்டியிருக்கும். ஆரோக்கியத்தைப் புறக்கணிப்பதைத் தவிர்க்கவும். கடந்த காலத்தில் செய்த கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். புதிய வேலையைத் தொடங்குவதில் அவசரப்பட வேண்டாம். தனிப்பட்ட அல்லது தொழில் வாழ்க்கையில் பொறுப்புகள் அதிகரிக்கலாம். சில சிரமங்களையும் சந்திக்க வேண்டி வரும். நீங்கள் ஒற்றைத் தலைவலியால் அவதிப்பட்டால் இன்று கவனமாக இருங்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இன்று ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். பெற்றோரின் ஆதரவுடன், உங்களின் சில முக்கிய பிரச்சனைகளை தீர்க்கும் வாய்ப்பு உள்ளது. வியாபாரிகளுக்கு நல்ல நாள். குறைந்த முயற்சியில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். வேலை சம்பந்தமான எந்த முக்கிய பிரச்சனையும் தீரும். அரசு வேலைக்கு முயற்சி செய்தால் சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். வீட்டுப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் அன்புக்குரியவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, தோள்பட்டை சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இன்று எதிர்மறை எண்ணங்களிலிருந்து விலகி இருங்கள், இல்லையெனில் உங்கள் பிரச்சனைகள் குறைவதற்கு பதிலாக அதிகரிக்கலாம். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். சில முக்கிய வேலைகளில் தடைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு நிதி இழப்பு ஏற்படலாம். நேரத்தைக் கவனியுங்கள் இல்லையெனில் உங்களுடைய முக்கியமான சில வேலைகள் இன்று முழுமையடையாமல் இருக்கும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். ஒருவருக்கொருவர் அன்பும் பாசமும் அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நரம்பு சம்பந்தமான பிரச்சனை வரலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இன்று வேலை தொடர்பான பயணங்கள் வெற்றி பெறும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கடந்த காலத்தில் செய்யப்பட்ட எந்த முதலீடும் சாதகமான பலனைத் தரும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வாயு, மலச்சிக்கல், அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகளை சந்திக்கலாம்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இன்று வியாபாரிகளுக்கு முக்கியமான நாளாக இருக்கும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். பணப்பற்றாக்குறையால் எந்த வேலையும் முடங்கினால், இன்று வேலை வெற்றிகரமாக தொடங்கப்படும். உறவுகளில் அன்பும் இனிமையும் நிலைத்திருக்கும். பெற்றோரின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











