Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
Today Rasi Palan 23 June 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசர அவசரமாக வேலைகள் செய்வதைத் தவிர்க்கணும்...
Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். 2024ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 10.30-11.30 மணி வரை. மாலை 3.30-4.30. ராகு காலம் காலை 4.30-6.00 மணி வரை. குளிகை காலை 3.00-4.30 மணி வரை. எமகண்டம் காலை 12.00-1.30 மணி வரை. சூலம் - மேற்கு திசை. கார்த்திகை, ரோஹிணி நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, இன்று நீங்கள் சில புதிய சவால்களை சந்திப்பீர்கள். இன்று முடிவுகளை மிகவும் சிந்தனையுடன் எடுக்கவும். மோசமான உடல்நலம் காரணமாக, உங்கள் மனம் எரிச்சலுடன் இருக்கும். மேலும் உங்களைச் சுற்றியுள்ளவர்களுடன் உங்களுக்கு வாக்குவாதங்கள் ஏற்படலாம். வியாபாரிகளின் சில முக்கிய வேலைகள் பணப்பற்றாக்குறையால் பாதியில் நிற்க வாய்ப்புள்ளது. இன்று உங்கள் எதிரிகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். அலுவலகத்தில் உங்கள் மேலதிகாரியிள் மனநிலை சரியில்லாமல் இருக்கும். எனவே, சிறு தவறு கூட நேராமல் பார்த்து கொள்ளுங்கள். குடும்ப உறுப்பினர்களின் உணர்ச்சிபூர்வமான ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவை நன்றாக வைத்திருக்க முயற்சியுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நேரம்: காலை 5:15 மணி முதல் காலை 9:50 மணி வரை
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, இன்று உங்களின் நீண்ட கால விருப்பம் நிறைவேறலாம். அதனால், நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வணிகர்கள் பெரிய ஒப்பந்தம் செய்ய வாய்ப்பு கிடைக்கும். ஆனால் , அவசரப்பட வேண்டாம். நீங்கள் உங்கள் வேலையை மாற்ற விரும்பினால், இந்த நேரம் அதற்கு சாதகமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே அன்பும் ஒற்றுமையும் இருக்கும். குழந்தைகளுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
உங்கள் வாழ்க்கைத் துணை மிகவும் நல்ல மனநிலையில் இருப்பார். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்கள் மன உளைச்சல் குறைந்து புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 25
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:30 மணி முதல் மதியம் 12 மணி வரை
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, இன்று உங்கள் உறவுகளில் இனிமை அதிகரிக்கும். பாதகமான சூழ்நிலைகளில் உங்கள் அன்புக்குரியவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். இன்று உங்களின் சில பெரிய பிரச்சனைகளும் தீர்க்கப்படலாம்.
வேலை நிமித்தமாக நீண்ட தூரம் பயணம் செல்ல வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்களே, இன்று அலுவலகத்தில் உங்கள் நிலை வலுவாக இருக்கும். இன்று உயர் அதிகாரிகள் உங்கள் செயல்பாடுகளால் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள். உங்கள் கடின உழைப்பு பாராட்டப்படும். குடும்பத்தின் இளைய உறுப்பினர்களுடனான உறவுகள் வலுவாக இருக்கும். பல முயற்சிகளுக்குப் பிறகு, உங்கள் துணையுடனான உறவு மேம்படும். திருமண வாழ்க்கையில் அதிக கவனம் தேவை. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம். நீண்ட நேரம் பட்டினி கிடப்பதைத் தவிர்க்க வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் காலை 11 மணி வரை
கடகம்
கடக ராசிக்காரர்களே, தொழில், வியாபாரம் தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கு இன்று சாதகமான நாள். உங்கள் அன்புக்குரியவர்களின் ஆதரவையும் பெறுவீர்கள். பணம் சம்பந்தமாக உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தால் இன்று உங்கள் பிரச்சனை தீரும். வியாபாரிகளின் நிலுவையில் உள்ள சில வேலைகள் முடிவடைய வாய்ப்புள்ளது. இன்று நீங்கள் நிதி நன்மைகளைப் பெறலாம். அலுவலகத்தில் வீணாக பேசி நேரத்தை வீணாக்காதீர்கள். இன்றே நீங்கள் முடிக்க வேண்டிய சில முக்கியமான பணிகள் உள்ளன. உங்கள் குழந்தைகளிடம் மிகவும் கண்டிப்புடன் இருக்காதீர்கள். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இன்று உங்களுக்கு நீர்ச்சத்து குறைபாடு இருக்கலாம். போதுமான அளவு தண்ணீர் குடிக்க அறிவுறுத்தப்படுகிறது.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நேரம்: காலை 4 மணி முதல் காலை 9:20 மணி வரை
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, உங்கள் வாழ்வில் சில சாதகமான மாற்றங்கள் ஏற்படலாம். நீங்கள் திடீரென்று சில பெரிய வெற்றிகளைப் பெறலாம். சில புதிய மற்றும் செல்வாக்கு மிக்க நபர்களை நீங்கள் சந்திக்கலாம். அதனால், உங்கள் நட்பு வட்டம் அதிகரிக்கும். வணிகர்கள் சந்தையில் சிக்கிய பணத்தை திரும்பப் பெறுவதில் வெற்றி பெறுவார்கள். நிதி பரிவர்த்தனைகளை மிகவும் சிந்தனையுடன் செய்ய வேண்டும். இன்று அலுவலகச் சூழல் நன்றாக இருக்கும். உங்கள் வேலை சுமூகமாக முடியும். உயர் அதிகாரிகளுடன் முக்கியமான விவாதம் நடத்தலாம். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, உங்கள் நடத்தையில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்களுக்கு தசைப்பிடிப்பு பிரச்சனை இருக்கலாம். கனமான பொருட்கள் தூக்குவதைத் தவிர்க்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 24
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை
கன்னி
கன்னி ராசிக்காரர்களே, இன்று அவசரமாக எந்த முடிவையும் எடுக்காதீர்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் எந்த வெளியாட்களும் அதிகமாக தலையிட அனுமதிக்காதீர்கள். கண்மூடித்தனமாக பிறரை நம்புவதைத் தவிர்க்கவும். வணிகர்களின் சில முக்கிய வேலைகள் பாதியில் தடைபடலாம். அலுவலகத்தில் சில கடினமான வேலைகள் உங்களுக்கு ஒதுக்கப்படலாம். நேர்மறையாக இருக்க முயற்சிப்பது நல்லது. வீட்டில் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் ஏற்படும். இன்று வீட்டில் பதற்றமான சூழல் இருக்கும். உங்கள் காதல் துணை உங்களுக்கு எவ்வளவு சிறப்பு வாய்ந்தவர்கள் என்பதை உணருங்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். இதெல்லாம் உங்கள் கவனக்குறைவின் விளைவு.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மதியம் 2:15 மணி வரை
துலாம்
துலாம் ராசிக்காரர்களே, உறவுகளில் இனிமையையும் வலிமையையும் பராமரிக்க, நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். கோபத்தை விலக்கி வையுங்கள். சிறிய விஷயங்களைப் பற்றி கவலைப்படாமல், உங்கள் பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சியுங்கள். புதிய வேலையைத் தொடங்குவதற்கு முன்பு, நிலுவையில் உள்ள பழைய வேலைகளை முடிக்க முயற்சியுங்கள். நிதி நிலைமை மோசமடையலாம். உத்தியோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். இன்று வேலைப்பளுவும் குறையும். இன்று குடும்ப உறுப்பினர் ஒருவரிடமிருந்து நல்ல செய்தி கிடைக்கும். உங்களின் பரபரப்பான வேலைக்கு மத்தியிலும், உங்கள் வாழ்க்கைத் துணைக்கு போதுமான நேரத்தைக் கொடுக்க முடியும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, அதிகம் கவலைப்படும் உங்கள் பழக்கத்தால், உடல்நலம் பாதிக்கப்படலாம். உங்களுக்கு தூக்கமின்மை பிரச்சனை இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
அதிர்ஷ்ட எண்: 21
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:10 மணி முதல் மதியம் 2 மணி வரை
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, உங்களை நிரூபிக்க நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். புதிய திட்டங்கள் தீட்டுவதற்கு இன்று சாதகமான நாள் அல்ல. பணப்பிரச்சனைகளால் மனம் அமைதியற்று இருக்கும். வணிகர்கள் தங்கள் வணிகத் திட்டங்களை ரகசியமாக வைத்திருக்கவும். இல்லையெனில், வேறு யாராவது பயன்படுத்திக் கொள்ளலாம். உத்தியோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகளின் கண்டிப்பான அணுகுமுறை உங்களைத் தொந்தரவு செய்யலாம். மனதில் பல வகையான எண்ணங்கள் வரலாம். சில விருந்தினர்கள் திடீரென்று வீட்டிற்கு வரலாம். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். திருமணமாகாதவர்களின் திருமணம் பற்றிய பேச்சு வரலாம். உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த, நீங்கள் உங்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். உங்கள் தினசரி வழக்கத்தில் உடற்பயிற்சியைச் சேர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 32
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:20 மணி முதல் மதியம் 2:55 மணி வரை
தனுசு
தனுசு ராசிக்காரர்களே, உங்களின் அனைத்து வேலைகளும் திட்டமிட்டபடி முடிக்கப்படும். நீங்கள் ஏதேனும் கூடுதல் பொறுப்பை ஏற்றுக்கொண்டால், அதை சரியான நேரத்தில் முடிக்க முயற்சிக்கவும். கேலி செய்யும் போது கூட, மற்றவர்களின் மனதை புண்படுத்தும் வகையில் எதையும் பேசாதீர்கள். தொழிலதிபர்களுக்கு இன்று நேரம் சாதகமாக இருக்கும். எடுக்கும் அனைத்து முடிவிலும் தகுந்த பலன் கிடைக்கும். தடைபட்ட திட்டங்களுக்கான வேலையைத் தொடங்க இன்று நல்ல நாள். உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றலாம். வீட்டில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையிடமிருந்து அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். உங்கள் காதலைப் பற்றி குடும்பத்தார் இன்று தெரிந்துகொள்ளலாம். இன்று ஆரோக்கியம் குறையலாம். உங்களுக்கு அஜீரணம், வாயு, அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகள் இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:30 மணி முதல் இரவு 8 மணி வரை
மகரம்
மகர ராசிக்காரர்களே, உங்கள் முக்கிய முடிவுகளை முழு நம்பிக்கையுடன் எடுப்பீர்கள். தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் சரி, தொழில் வாழ்க்கையாக இருந்தாலும் சரி, உங்கள் பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். பணம் சம்பந்தமாக எடுக்கும் எந்த முடிவும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். சொத்து சம்பந்தமான வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறலாம். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். இன்று உங்கள் மேலதிகாரி உங்கள் கடின உழைப்பைக் கவனிப்பார். குடும்ப உறுப்பினர்களுடன் பேசும் போது வார்த்தைகளை சிந்தனையுடன் பயன்படுத்தவும். உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சிறப்பாக இருக்கும். நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாக உணர்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மதியம் 2:20 மணி வரை
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, தவறான செயல்கள் மற்றும் வார்த்தைகளில் இருந்து விலகி இருங்கள். இந்த நேரம் உங்களுக்கு மிகவும் முக்கியமானது, எனவே அதை நன்றாகப் பயன்படுத்துங்கள். பாதகமான சூழ்நிலைகளில் கூட உங்கள் மன உறுதியை வீழ்ச்சியடைய விடாதீர்கள். தொழிலதிபர்கள் பெரிய முதலீடுகளைச் செய்வதற்கு ஏற்ற நாள் அல்ல. இன்று பண விஷயங்களில் அவசரத்தைத் தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும். குடும்ப உறுப்பினருடன் உங்களுக்கு வாக்குவாதம் ஏற்படலாம். கோபமாக இருந்தாலும் உங்கள் வார்த்தைகளை நியாயமாக பயன்படுத்துங்கள். உங்களுக்கிடையே சில மனக்கசப்புகள் இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, எந்தவொரு வேலையையும் அவசர அவசரமாக செய்யாதீர்கள். இல்லையெனில் காயம் அடையலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:30 மணி முதல் இரவு 9 மணி வரை
மீனம்
மீன ராசிக்காரர்களே, கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு, தற்போதைய வேலையை மேம்படுத்த முயற்சிக்கவும். உங்கள் பெரியவர்களின் வார்த்தைகளை அலட்சியம் செய்வதைத் தவிர்க்கவும். மாணவர்கள் படிப்பில் தீவிரமாக இருக்க வேண்டும். தொழிலதிபர்களின் சில முக்கிய வேலைகளில் தடைகள் ஏற்படலாம். உங்களுக்கு நிதி இழப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது. சிந்தித்து முடிவுகளை எடுக்க வேண்டும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியருடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். அலுவலகத்தில் மோதல்களைத் தவிர்க்கவும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையிடமிருந்து ஆச்சரிய பரிசு பெறலாம். நீங்கள் தனிமையில் இருந்து, உங்கள் துணையைத் தேடினால், இன்று உங்கள் தேடல் முடிவடையும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை அதிக பணிச்சுமையால் சோர்வாக உணர்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பீச்
அதிர்ஷ்ட எண்: 30
அதிர்ஷ்ட நேரம்: மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











