Latest Updates
-
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்!
Today Rasi Palan 22 January 2025: இன்று இந்த ராசிக்காரங்க வாகனம் ஓட்டும் போது கவனமா இருக்கணும்...
Today Rasi Palan: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நிலை ஆகியவற்றால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் இருக்கும்.
அதுவும் இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் தேதி புதன்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 9.15-10.15 மணி வரை. மாலை 4.45-5.45 மணி வரை. ராகு காலம் காலை 12.00-1.30 மணி வரை. குளிகை காலை 10.30-12.00 மணி வரை. எமகண்டம் காலை 7.30-9.00 மணி வரை. சூலம் - வடக்கு திசை. உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இன்று குழப்பமான நாளாக இருக்கும். நம்பிக்கையின்மையை நீங்கள் உணரலாம். நிறைய சவால்களை தொழிலில் சந்திப்பீர்கள். இருப்பினும் திறமை மற்றும் தலைமைத்துவ திறனால் சிறப்பாக சமாளிப்பீர்கள். நிதி ரீதியாக சற்று கவனமாக இருக்க வேண்டும். பணம் தொடர்பான முடிவுகளை இன்று எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இன்று பண பரிவர்த்தனைகளில் அவசரப்பட வேண்டாம். பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த பயணத்தின் போது சில மோசமான சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது. உங்கள் பெற்றோரின் ஆரோக்கிய சிறப்பாக இருக்கும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இன்று முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் வருத்தப்படுவீர்கள். எந்த முக்கிய முடிவையும் சிந்தித்து எடுக்க வேண்டும். வருமானம் சிறப்பாக இருக்கும். இன்று எந்த ரிஸ்க்கையும் எடுக்க வேண்டாம். பழைய நோய் மீண்டும் தலைத்தூக்கலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு பல நல்ல விஷயங்கள் நடக்கும். இதனால் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். புதிய வீடு, வாகனம், நிலம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கலாம். முன்னேற்றத்திற்கான பாதை திறக்கப்படும். சமூக பணிகளில் அதிகம் ஈடுபடுவீர்கள். இதனால் நல்ல ஆதாயத்தைப் பெறுவீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இன்று உங்கள் எதிரிகள் ரகசியமாக உங்களுக்கு எதிராக செயல்படுவார்கள். இருப்பினும் அவர்கள் வெற்றி பெற முடியாது. நடத்தை சிறப்பாக இருந்தால், சமூகத்தில் மதிப்பு உயரும். அதிர்ஷ்டத்தின் ஆதரவால் தொழிலை மேம்படுத்தும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வியாபாரிகளுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இன்று திருமணமாகாதவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை சந்திக்கலாம். பணியிடத்தில் உங்கள் செயல்திறன் பாராட்டப்படும். இருப்பினும் சற்று பொறுமையாக இருக்க வேண்டும். உடல் வலியை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இன்று சிறப்பான நாளாக இருக்கும். அலுவலகத்தில் உயர்அதிகாரிகள் மற்றும் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியத்திற்காக நிறைய செலவுகளை செய்ய வேண்டியிருக்கும். மோதலைத் தவிர்த்து, பொறுமையாக இருக்க வேண்டும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பணியிடத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இன்று உங்கள் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். அரசியலில் இருப்பவர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். குழந்தைகளைப் பற்றிய கவலை இருக்கும். தெரியாத பயம் ஆட்டிப்படைக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இன்று உறவுகள் வலுவடையும். பணியிடத்தில் உங்களுடன் சேர்ந்து பணிபுரிய பலரும் விரும்புவார்கள். விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். விலையுயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாதீர்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இன்று எந்த வேலையும் செய்ய ஆர்வம் இருக்காது. சோம்பல் அதிகமாக இருக்கும். வேலை தொடர்பாக பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும் வாய்ப்புள்ளது. குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இன்று பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். உங்களின் அனைத்து திட்டங்களும் நல்ல பலனைத் தரும். ஆனால் மாணவர்கள் கடினமாக உழைக்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கண் மற்றும் தலைவலி பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகளை சந்திக்கலாம்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இன்று சாதகமான நாளாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். அலுவலகத்தில் சிறப்பான செயல்திறனைக் காட்டுவீர்கள். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. முதலீடுகளை செய்ய சிறந்த நாள். இருப்பினும், ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications