Latest Updates
-
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
Today Rasi Palan 19 December 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்க்கணும்..
Today Rasi Palan: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நிலை ஆகியவற்றால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் இருக்கும்.
அதுவும் இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி வியாழக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 10.45-11.45 மணி வரை. ராகு காலம் காலை 1.30-3.00 மணி வரை. குளிகை காலை 9.00-10.30 மணி வரை. எமகண்டம் காலை 6.00-7.30 மணி வரை. சூலம் - தெற்கு திசை. மூலம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இன்று சாதகமாக இருக்கும். சட்ட விஷயங்களில் வெற்றி கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் அசால்ட்டாக இருந்தால், எதிர்காலத்தில் தொழிலில் சிக்கல்களை சந்திக்க நேரிடும். மார்க்கெட்டிங் துறையில் பணிபுரிபவர்கள் தங்கள் பணியில் முழு கவனம் செலுத்த வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இன்று அவசர முடிவுகள் எடுப்பதால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் சில ஏற்ற தாழ்வுகளால் பிரச்சனைகள் ஏற்படும். இழந்த பணத்தை பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வேலைகள் அனைத்தும் சரியாக முடிவடையும். இன்று எந்த விவாதத்திலும் ஈடுபடாமல் இருக்க வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இன்று ஏற்ற தாழ்வுகள் நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் தேவைகளை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். வியாபாரத்தில், எதிர்காலத்திற்கான சில பெரிய திட்டங்களை செய்யலாம். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். அப்போது தான் வெற்றி பெற முடியும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இன்று எதிலும் அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும். உங்கள் முடிவெடுக்கும் திறன் சிறப்பாக இருக்கும். எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் வயிறு தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கும். சில புதிய வேலைகளை இன்று முயற்சி செய்வது நல்லது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இன்று கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும், இல்லையெனில் திருப்பிச் செலுத்துவதில் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். சொத்தில் முதலீடு செய்வது உங்களுக்கு நல்லது. பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடனான உறவு மேம்படும். வீட்டின் தூய்மை மற்றும் பராமரிப்பில் முழு கவனம் செலுத்துவீர்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இன்று உங்கள் வேலையில் உள்ள சிரமங்கள் குறையும். தொண்டுகளில் ஆர்வம் அதிகரிக்கும். உங்கள் செலவுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். வியாபாரத்தில் கூட்டு சேர்க்காதீர்கள். இல்லையெனில் உங்கள் வேலையை முடிப்பதில் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இன்று சட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். உங்களின் சில பிரச்சனைகள் எளிதில் தீர்க்கப்படும். பணம் தொடர்பான திட்டங்களில் முழு கவனம் செலுத்த வேண்டும். உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். காதல் வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் தீர்க்கப்படும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இன்று நிதி ரீதியாக நல்ல நாளாக இருக்கும். உங்களது ஏதேனும் வேலை பணத்தால் நிலுவையில் இருந்தால், இன்று அது முடிவடையும். மாணவர்கள் படிப்பில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். வீட்டு சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். முக்கியமான சில வேலைகள் முடிவடையும். எதற்கும் தேவையில்லாமல் கோபப்படுவதை தவிர்க்க வேண்டும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இன்று அன்றாட வழக்கத்தில் முழு கவனம் செலுத்த வேண்டிய நாளாக இருக்கும். சில விஷயங்களில் டென்ஷன் இருக்கும். பணியிடத்தில் உடன் வேலை செய்வோருடன் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும், அப்போதுதான் உங்கள் வேலை எளிதில் முடிவடையும். பழைய நண்பர் ஒருவர் உங்களை சந்திக்க வருவார்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இன்று நீங்கள் சிந்தித்து வேலையை முடிக்கும் நாளாக இருக்கும். பொறுமையுடனும், தைரியத்துடனும் பணியாற்ற வேண்டும். அவசரப்பட்டால் தவறு நேரிடும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். மாணவர்கள் சில புதிய வேலைகளில் ஆர்வம் காட்டலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இன்று எந்த ஒரு முடிவையும் சிந்தித்து எடுக்கும் நாளாக இருக்கும். அனுபவசாலிகளின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கலாம். பெண் நண்பர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இன்று நீண்டகாலமாக நிலுவையில் உள்ள சில வேலைகளை முடிக்கும் நாளாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். வேலையில் எதிர்மறையான எண்ணங்களை மனதில் வைத்துக் கொள்ளாதீர்கள். இல்லையெனில் அதை முடிப்பதில் சிக்கல்கள் ஏற்படலாம். கவனக்குறைவால், ஒரு பெரிய திட்டம் உங்கள் கைகளில் இருந்து நழுவக்கூடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
