Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
இன்றைய ராசிபலன் 12 நவம்பர் 2025: இன்று இந்த 3 ராசிக்காரரங்க மனைவியால் ரொம்ப கஷ்டப்படப் போறாங்களாம்...!
Today Rasi Palan: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நிலை ஆகியவற்றால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் இருக்கும்.
அதுவும் இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு நவம்பர் 12-ஆம் தேதி புதன் கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம்
இன்று வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆசியுடன், நிலுவையில் உள்ள சில வேலைகள் நல்ல படியாக முடிவடையும். அலுவலகத்தில் சில சக ஊழியர்கள் உங்கள் எரிச்சலுக்கு காரணமாக இருக்கலாம். வியாபாரிகள் இன்று விரும்பிய லாபத்தைப் பெறலாம். பணம் சம்பந்தமான பிரச்சனைகளை எதிர்கொண்டால் உங்கள் பிரச்சனை தீரும். இன்று உங்கள் வாழ்க்கைத்துணையின் வித்தியாசமான ரூபத்தைப் பார்ப்பீர்கள். இன்று அவசர அவசரமாக எந்த வேலையும் செய்யாதீர்கள், இல்லையெனில் காயம் அடையலாம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் நீலம்.
ரிஷபம்
இன்று உங்கள் திருமண வாழ்க்கையில் பாதகமான சூழ்நிலைகளைச் நீங்கள் சந்திக்க நேரிடலாம். உங்கள் தவறான அணுகுமுறை உங்களிடையே உள்ள தூரத்தை அதிகரிக்கச் செய்யும். உங்கள் வாழ்க்கைத் துணையைப் புறக்கணிக்கும் தவறை செய்யாதீர்கள். பணம் தொடர்பான கவலைகளில் இருந்து விடுபடுவீர்கள். நிதி ஆதாயத்தைப் பெற வலுவான வாய்ப்புள்ளது. இன்று வணிகர்களுக்கு மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் பச்சை.
மிதுனம்
இன்று வேலையில் இருப்பவர்களுக்கு மிகவும் சாதகமான நாளாக இருக்கும். உங்கள் மறைந்திருக்கும் திறன்கள் உங்கள் மேலதிகாரிகளை ஆச்சரியப்படுத்தும். வியாபாரிகளின் பொருளாதார நிலை வலுவடையும். வாழ்க்கைத் துணையுடனான உறவு மேம்படும். குடும்ப உறுப்பினர்களுடன் வாக்குவாதம் செய்ய இது சரியான நேரம் அல்ல. இன்று உங்கள் உடல்நிலை சற்று பாதிக்கப்படும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் ஊதா.
கடகம்
இன்று குடும்ப வாழ்க்கையில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்படும். உங்கள் குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் அலட்சியம் வேண்டாம். வேலை சம்பந்தமான முடிவுகளை அவசரப்பட்டு எடுக்காமல் இருப்பது நல்லது. வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, பொறுமையாக இருக்க வேண்டும். உங்கள் நிதி நிலை சாதாரணமாக இருக்கும். பெரிய செலவுகளைத் தவிர்க்கவும். நாளின் இரண்டாம் பகுதியில் திடீர் உடல்நலக் கோளாறுகள் வரலாம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
சிம்மம்
இன்று உங்களுக்கு பண விஷயத்தில் கலவையளிக்கும் நாளாக இருக்கும். சிலர் தவறான தகவல்களைத் தந்து சிலர் உங்களை தவறாக வழிநடத்த முயற்சி செய்யலாம். அத்தகையவர்களிடம் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. வியாபாரிகளுக்கு இன்று மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்களைப் பெறுவார்கள். இன்று நீங்கள் வேலை தொடர்பான சில நல்ல செய்திகளைப் பெற வலுவான வாய்ப்புள்ளது. வீட்டில் சூழ்நிலை மகிழ்ச்சியாக இருக்கும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் பிங்க்.
கன்னி
இன்று உங்கள் தொழிலில் புதிய திருப்பம் ஏற்படும். உங்கள் முன்னேற்றத்தில் ஏதேனும் தடைகள் இருந்தால் அது இன்று விலகும். உங்கள் கடின உழைப்புக்கு சரியான பலன் கிடைக்க வாய்ப்புள்ளது. நீங்கள் சொந்த வியாபாரத்தைத் தொடங்க திட்டமிட்டால், உங்கள் திட்டம் முன்னேறும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். இன்று நீங்கள் அதிகமாக சேமிக்க முடியும். இன்று உடல்நலம் சற்று பலவீனமாக இருக்கும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.
துலாம்
உங்கள் வீட்டின் அமைதியை காக்க, குடும்ப பிரச்சனைகளை வெளியாட்களுடன் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்கவும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். உங்கள் வருமானத்திற்கு ஏற்றார் போல செலவு செய்தால் அதிகமாக சேமிக்க முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு இன்று அலுவலகத்தில் நல்ல செய்திகள் கிடைக்கும். உயர் அதிகாரிகள் உங்களின் செயல்பாடுகளில் திருப்தி அடைவார்கள். தொழிலதிபர்கள் பொருளாதார ரீதியாக பலன் பெறலாம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் கருப்பு.
விருச்சிகம்
இன்று வியாபாரிகளுக்கு சிரமமான நாளாக இருக்கும். இன்று நீங்கள் முக்கிய வணிக முடிவுகளை எடுப்பதில் சில சவால்களைச் சந்திக்க நேரிடும். இன்று எந்த வித அவசரமும் காட்டாமல் இருந்தால் நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகளின் முழு ஆதரவும் கிடைக்கும். இன்று நீங்கள் உங்கள் எல்லா வேலைகளையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். குடும்ப வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். இன்று நீங்கள் பணம் சம்பாதிக்க நல்ல வாய்ப்பு கிடைக்கும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் மெரூன்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று பல வேலைகள் நிறைந்த பிஸியான நாளாக இருக்கும். வேலைகளை முடிக்க நிறைய பயணங்கள் செய்ய வேண்டியிருக்கும். ஒரு புதிய நண்பரை சந்திப்பதால் உற்சாகம் அதிகரிக்கும். உங்கள் மனைவியின் சில வார்த்தைகள் உங்களை வருத்தப்படுத்தலாம். உங்கள் குழந்தைகளின் செயல்பாடுகளில் கவனம் செலுத்துவது நல்லது. இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு நிதிரீதியாக இன்று சாதகமான நாளாக இருக்கும். எந்தவொரு முடிவையும் பதட்டத்தில் எடுப்பதைதத் தவிர்க்க வேண்டும். வேலையில் மாற்றங்களைக் கொண்டுவர எடுக்கும் முயற்சிகள் பலனளிக்கும். சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்புகள்தேடி வரும். இருப்பினும், சிறிய விஷயங்களுக்காக அதிகம் கோபப்படுவதைத் தவிர்க்க வேண்டும். உங்கள் அலுவலகப் பணிகளை கவனமாக செய்ய வேண்டியது அவசியம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் ஊதா.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று பல சவால்களை சந்திக்க நேரிடும். உங்கள் நேரத்தை வீணாக்குவதைத் தவிர்க்கவும், ஏனெனில் இது அதிக பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். வேலை தேடும் இளைஞர்களுக்கு சில நல்ல செய்திகள் கிடைக்கக்கூடும். பண விஷயங்களில் கவனம் செலுத்துவதும், உங்கள் பொறுப்புகளை புறக்கணிக்காமல் இருப்பதும் மிக முக்கியம். சில முக்கியமான நபர்களைச் சந்திக்கும் வாய்ப்பு உருவாகலாம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் ப்ரவுன்.
மீனம்
இன்று மீன ராசிக்காரர்களுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். உங்களுக்குள் மறைந்திருக்கும் திறமை இன்று வெளிவரும். வேலையில் நிலவி வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நீங்கள் யாரிடமாவது கடன் வாங்கியிருந்தால், அவர்கள் உங்களிடம் திரும்பக் கேட்கலாம். தாயின் உடல்நிலையில் முழு கவனம் செலுத்த வேண்டியிருக்கும். உங்கள் பொறுப்புகள் அதிகரிப்பதால் சற்று கவலை அடைவீர்கள். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications