Latest Updates
-
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது...
Today Rasi Palan 10 July 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் நற்செய்திகளால் மனமகிழ்ச்சி அதிகரிக்கும்...
Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். 2024ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி புதன்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 9.15-10.15 மணி வரை. மாலை 4.45-5.45. ராகு காலம் காலை 12.00-1.30 மணி வரை. குளிகை காலை 10.30-12.00 மணி வரை. எமகண்டம் காலை 7.30-9.00 மணி வரை. சூலம் - வடக்கு திசை. மூலம், பூராடம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, கூடா நட்பைத் தவிர்ப்பது நல்லது. இல்லையெனில், அது உங்கள் வாழ்க்கையில் மோசமான விளைவை ஏற்படுத்தும். தினமும் யோகா மற்றும் தியானம் செய்வது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது உங்கள் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். தொழிலதிபர்கள் புதிய வேலையைத் தொடங்கும் முன்பு, கண்டிப்பாக முன் அனுபவமுள்ளவர்களைக் கலந்தாலோசிக்கவும். உத்தியோகஸ்தர்கள் நிலுவையில் உள்ள வேலைகளை விரைவில் முடிக்க முயற்சியுங்கள். இல்லையெனில், மேலதிகாரியின் கோபத்தைச் சந்திக்க நேரிடும். குடும்ப உறுப்பினர் ஒருவரிடமிருந்து ஆச்சரியத்தைப் பெறுவீர்கள். பாதகமான சூழ்நிலைகளில் உங்கள் துணையின் ஆதரவைப் பெறுவீர்கள். இன்று ஆரோக்கியம் பலவீனமாக இருக்கும். குறிப்பாக, மேஷ ராசி பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
அதிர்ஷ்ட எண்: 15
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, தனிப்பட்ட வாழ்க்கையில் சில குழப்பங்கள் இருக்கும். பரஸ்பர வேறுபாடுகள் ஆழமாகலாம். அதனால், உறவுகளை பராமரிப்பதில் சிரமப்படுவீர்கள். இன்று நீங்கள் சில மதிப்புமிக்க பொருட்களை இழக்க நேரிடலாம். நீங்கள் ஒரு பெரிய தொழிலதிபராக இருந்தால், உங்கள் ஊழியர்களுடனான உங்கள் நடத்தையைப் பேணுங்கள். உத்தியோகஸ்தர்கள் முக்கியமான பணிகளில் கவனம் செலுத்துங்கள். உங்கள் எந்த வேலையையும் முடிக்காமல் விடாதீர்கள். தந்தையின் வார்த்தைகளை அலட்சியம் செய்வதைத் தவிர்க்கவும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கசப்பான மற்றும் இனிமையான வாக்குவாதங்கள் இருக்கலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்களுக்கு எலும்பு சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு மிகவும் இனிமையான நாளாக இருக்கும். கடந்த காலத்தில் எடுத்த முடிவின் நல்ல பலனைப் பெறலாம். வியாபாரிகளின் தடைபட்ட பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பெரிய திட்டத்தில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். நீங்கள் கடினமாக உழைத்தால், விரைவில் பெரிய வெற்றியை அடைவீர்கள். இன்று வீட்டில் சூழ்நிலை நன்றாக இருக்காது. சர்ச்சைக்குரிய விஷயங்களைப் பற்றி பேசுவதைத் தவிர்க்கவும். உங்கள் வாழ்க்கைத் துணையை உடனான பிரச்சனையை தீர்ப்பதில் புத்திசாலித்தனமாக செயல்படுங்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வானிலை மாற்றத்தால் பிரச்சனை வரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் காலை 11 மணி வரை
கடகம்
கடக ராசிக்காரர்களே, உங்கள் தன்னம்பிக்கையான செயல்பாடு உங்களுக்கு பெரிய வெற்றியைத் தரும். வீட்டின் பெரியோர்களின் வழிகாட்டுதலைப் பெறுவீர்கள். பணம் சம்பந்தமான பிரச்சனைகளை இன்று தீர்க்க முடியும்.
தொழிலதிபர்கள் எந்தவொரு புதிய வேலையைத் தொடங்கும் முன்பு, சரியான தகவலைப் பெற வேண்டியது அவசியம். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும். இன்று நீங்கள் கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும். குடும்ப உறவுகளில் இனிமை அதிகரிக்கும். இன்று உங்கள் அன்புக்குரியவர்களுடன் மறக்கமுடியாத நேரத்தைச் செலவிடுவீர்கள். உங்கள் காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், ஒவ்வாமை அல்லது ஏதேனும் தொற்று ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:20 முதல் இரவு 7 மணி வரை
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது, நிதானமாக இருப்பதோடு, கவனமாக சிந்தித்த பிறகே முடிவுகளை எடுங்கள். வேலை சம்பந்தமான பிரச்சனைகள் தீரும். உங்கள் வேலையில் சரியாக கவனம் செலுத்துவீர்கள். தொழிலதிபர்கள் நிதி விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்கவும். புதிய திட்டத்தில் வேலை தொடங்க இன்று நல்ல நாள். நீங்கள் அரசு வேலைக்காக முயற்சிக்கிறீர்கள் என்றால், இன்று சில முக்கிய செய்திகளைப் பெறலாம். குடும்பத்தில் சிலரின் எதிர்ப்பைச் சந்திக்க நேரிடும். கோபத்தையும் அவசரத்தையும் தவிர்க்க வேண்டும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். உடல்நலம் தொடர்பான விஷயத்தில் எந்த வித சமரசமும் செய்து கொள்ள வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 19
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை
கன்னி
கன்னி ராசிக்காரர்களே, இன்று நீங்கள் பாதகமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால் இந்த சிரமத்தை நீங்கள் எளிதாக சமாளிக்க முடியும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான நல்ல செய்திகள் வந்து சேரும். உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். திடீரென்று பயணம் செய்ய நேரிடலாம். வியாபாரிகளின் நிதி நிலைமை வலுவடையும். புதிய ஒப்பந்தம் இறுதி செய்யப்படலாம். உத்தியோகஸ்தர்கள் தன்னம்பிக்கையும் ஆற்றலும் நிறைந்திருப்பதர்கள். அதன் தாக்கம் உங்கள் வேலையிலும் தெரியும். பெற்றோரின் ஆசிகளைப் பெறுவீர்கள். உடன்பிறந்தவர்களுடனான உறவும் வலுவடையும். காதல் வாழ்க்கையில் சற்று மனஅழுத்தம் இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்கள் மீது கவனம் செலுத்துவது முக்கியம். இல்லையெனில், உங்கள் உடல்நலம் கணிசமாக மோசமடையக்கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட நேரம்: காலை 5:30 மணி முதல் காலை 10:30 மணி வரை
துலாம்
துலாம் ராசிக்காரர்களே, இன்று நீங்கள் பல வேலைகளில் பரபரப்பாக இருப்பீர்கள். உங்களுக்கான நேரம் கூட கிடைக்காமல் போகலாம். நீங்கள் விலையுயர்ந்த பொருட்களை வாங்க திட்டமிட்டிருந்தால், இன்றைய நாள் சாதகமான நாளாகும். தொழிலதிபர்களுக்கு வேலை சம்பந்தமான சில பிரச்சனைகள் இருக்கலாம். ஆனால், அதற்கான தீர்வையும் காண்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் வேலையில் எந்த விதத்திலும் அலட்சியம் காட்டாதீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். திருமண வாழ்க்கையை முழுமையாக அனுபவிப்பீர்கள். நாளின் தொடக்கத்தில் இன்று சில உடல்நல பிரச்சனைகள் இருக்கலாம். ஆனால் மதியத்திற்கு பிறகு நேரம் உங்களுக்கு நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 9:05 மணி வரை
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, நீங்கள் ஒரு பெரிய வேலைக்கான வாய்ப்பைப் பெறலாம். உங்கள் தொழில் புதிய திசையில் நகரும். உங்களின் ஆற்றலையும், செயல்திறனையும் சரியாகப் பயன்படுத்தி, நல்ல வெற்றியைப் பெறுவீர்கள்.
வணிகர்களின் பெரிய ஆர்டரும் சரியான நேரத்தில் முடிக்கப்படும். சந்தையில் உங்கள் நிலை வலுவாக இருக்கும். அரசு ஊழியர்களுக்கு முன்னேற்றம் கூடும். வருமானம் அதிகரிப்பதால் உங்கள் மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.
வீட்டில் சூழ்நிலை சாதகமாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் கோப குணம் உங்களுக்கு பிரச்சனையை உண்டாக்கும். உங்களை நீங்களே கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு நீங்கள் நன்றாக உணருவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 36
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை
தனுசு
தனுசு ராசிக்காரர்களே, உங்கள் வாழ்க்கை முறையை மாற்றி, தேவையற்ற விஷயங்களிலிருந்து விலகி இருங்கள். நீங்கள் வேலை தொடர்பான புதிய வாய்ப்பைப் பெறலாம். ஆனால், நீங்கள் சரியான தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் புதிய தொழில் தொடங்குவதற்கு ஏற்ற நாள் அல்ல. அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் பணியில் மகிழ்ச்சி அடைவார்கள். உங்கள் செயல்திறனில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடையே பரஸ்பர ஒருங்கிணைப்பு இருக்கும். உங்கள் உடன்பிறந்தோரிடமிருந்து சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். காதல் ஜோடிகளுக்கு இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உயர் ரத்த அழுத்த பிரச்சனை இருப்போர் இன்று மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் காலை 11:20 மணி வரை
மகரம்
மகர ராசிக்காரர்களே, நீங்கள் அடைய விரும்பும் இலக்குகளை அடைவதில் தடைகள் இருக்கலாம். ஆனால், நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். காதல் உறவு வலுவாக இருக்கும். உங்கள் உறவுக்கு நீங்கள் முழு அர்ப்பணிப்புடன் இருப்பீர்கள். தொழிலதிபர்கள் ஆபத்தான முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும். பெரிய முதலீடுகளைச் செய்வதற்கு இது உகந்த நேரம் இல்லை. உத்தியோகஸ்தர்களின் பணிகள் குறித்த நேரத்திற்கு முன்பே முடிவடையும். இன்று உயர் அதிகாரிகளும் உங்களைப் பாராட்டுவார்கள். வீட்டுப் பொறுப்புகளைப் புறக்கணிக்காதீர்கள். உங்கள் கவனக்குறைவான அணுகுமுறை உங்கள் அன்புக்குரியவர்களை வருத்தமடையச் செய்யும்.
காதல் உறவில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். அவசர முடிவுகளை எடுப்பதை தவிர்க்க வேண்டும். இன்று நீங்கள் மந்தமாகவும் பலவீனமாகவும் உணரலாம். சரியாக சாப்பிடுவதோடு, உடற்பயிற்சியும் அவசியம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் காலை 11 மணி வரை
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, பிறரிடம் பேசும் போது தவறான கருத்துக்கள் கூறுவதைத் தவிர்க்கவும். இல்லையெனில், தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படலாம். வேலையில் உங்கள் கவனமும் அர்ப்பணிப்பும் உங்களுக்கு முன்னேற்றத்திற்கான வழியைத் திறக்கும். தொழிலதிபர்கள் முழுமையடையாத பணிகளில் அதிக கவனம் செலுத்தவும். அலுவலகத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும். நீங்கள் மாற்றத்தைப் பற்றி யோசிக்கிறீர்கள் என்றால் , இதுவே அதற்கு சரியான நேரம். குடும்ப உறுப்பினருடன் உங்களுக்கு வாக்குவாதம் ஏற்படலாம். நீங்கள் உங்கள் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும், இல்லையெனில் வீட்டில் சூழ்நிலை மோசமடையக்கூடும். உங்கள் வாழ்க்கைத் துணை உங்களைப் புறக்கணிக்கலாம். இன்று உங்களுக்கு வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம். அஜீரணம், வாயு, அமிலத்தன்மை போன்றவற்றால் நீங்கள் சிரமப்படுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 22
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:30 மணி முதல் இரவு 8 மணி வரை
மீனம்
மீன ராசிக்காரர்கே, இன்று உங்கள் பெயருக்கு கலங்கம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் பேச்சில் இனிமையைக் கொண்டு வாருங்கள். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும்.
வியாபாரம் தொடர்பான பயணம் செய்ய வேண்டியிருக்கும். இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சொந்தமாக தொழில் தொடங்க நினைத்தால் நல்ல வாய்ப்பு கிடைக்கும். குடும்ப உறவுகளில் அன்பும் பாசமும் நிலைத்திருக்கும். வீட்டின் பெரியவர்கள் உங்களால் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். காதலுக்கான வாய்ப்புகள் அதிகம். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரலாம். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உங்களுக்குள் புதிய ஆற்றலை உணர்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2 மணி முதல் இரவு 7 மணி வரை
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











