Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
Today Rasi Palan 08 November 2024: இன்று இந்த 4 ராசிக்காரர்கள் அவசரப்படுவதைத் தவிர்க்கணும்...
Today Rasi Palan: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நிலை ஆகியவற்றால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் இருக்கும்.
அதுவும் இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு நவம்பர் 08 ஆம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 9.15-10.15 மணி வரை. மாலை 4.45-5.45 மணி வரை. ராகு காலம் காலை 10.30-12.00 மணி வரை. குளிகை காலை 7.30-9.00 மணி வரை. எமகண்டம் காலை 3.00-4.30 மணி வரை. சூலம் - மேற்கு திசை. திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இன்று ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். முக்கிய வேலைகளை முன்கூட்டியே முடிக்க முயற்சிக்க வேண்டும். உங்கள் வேலையில் சில சிக்கல்கள் இருந்தால் அவை தீர்க்கப்படும். உங்கள் திட்டங்கள் நிறைவேறும். பணியிடத்தில் உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இன்பு புதிய தொடர்புகளால் நல்ல நன்மைகள் கிடைக்கும். உங்கள் முன்னேற்றத்தில் இருந்த தடைகள் நீங்கும். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம். வீட்டில் சண்டைகளை தவிர்த்தால் தான், குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் சொல்லும் தவறான முடிவுகளை ஒப்புக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் நீங்கள் வருத்தப்படுவீர்கள். திட்டமிட்டு பணத்தை செலவிட வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இன்று உங்களின் தைரியம் அதிகரிக்கும். பணியிடத்தில் உங்களின் புதிய முயற்சிகளால் உயர் அதிகாரிகள் மகிழ்ச்சியடைவார். ஆரோக்கியத்தில் முழு கவனம் செலுத்துவீர்கள். மற்றவர்களுக்கு உதவ முன்வருவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்புள்ளது.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இன்று உங்களுக்க நல்ல நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். மார்கெட்டிங் துறையில் இருப்பவர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும். குடும்ப பிரச்சனைகள் தொடர்பாக மூத்தவர்களிடம் ஆலோசனை பெறுவீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இன்று கலவையான நாளாக இருக்கும். வேலையை திட்டமிட்டு செய்ய வேண்டும். வியாபாரிகள் பணத்தை முதலீடு செய்யும் முன் சிந்திக்க வேண்டும். வேலை செய்பவர்களின் சில திட்டங்கள் அவர்கள் கையை விட்டு போகலாம். குடும்ப உறுப்பினர் ஒருவரிடமிருந்து சில ஏமாற்றமான தகவல்களைப் பெறலாம். வேலையை தள்ளிப் போடுவதைத் தவிர்க்க வேண்டும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இன்று சிறப்பான நாளாக இருக்கும். உங்களின் வேலைகள் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்தால், அதுவும் முடிக்கப்படலாம். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். குடும்பத்தில் ஏதேனும் ஒரு பிரச்னையில் தகராறு ஏற்பட்டால், இரு தரப்பினரின் கருத்தையும் கேட்டு அமைதி காத்து முடிவெடுப்பது உங்களுக்கு நல்லது.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இன்று சட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் எதற்கும் அவசரப்பட வேண்டாம். எதிரிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். உணவுப் பழக்கவழக்கங்களில் ஏற்படும் இடையூறுகளால், உங்களுக்கு வயிறு தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கும். அந்நியர்களிடம் இருந்து தூரத்தை கடைபிடிப்பது நல்லது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். குடும்பத்தில் ஈகோவிற்கு இடம் கொடுத்தால், அது உங்களுக்கு சில தீங்குகளை ஏற்படுத்தும். நீங்கள் யாரிடமாவது கடன் வாங்கியிருந்தால், அதை நீங்கள் திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும். உங்கள் மனம் எதையோ நினைத்துக் கவலைப்படும். அலுவலகத்தில் உங்கள் வேலையை உயர் அதிகாரிகள் பாராட்டுவர்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இன்று உற்சாகமான நாளாக இருக்கும். அனுபவம் வாய்ந்த ஒருவரைச் சந்திப்பீர்கள். ரிஸ்க் எடுத்தால், சில இழப்புகளை சந்திக்க நேரிடும். அதிக வேலை காரணமாக சோர்வு, தலைவலி, உடல்வலி போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நீண்ட நாட்களுக்கு பிறகு நண்பரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் எதிரிகளில் ஒருவர் உங்களை தொந்தரவு செய்ய முயற்சி செய்யலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இன்று நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பணிகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். முதலீடு தொடர்பான ஏதேனும் ஒரு திட்டத்தைப் பற்றி நண்பர் உங்களிடம் கூறினால், நீங்கள் அதில் மிகவும் கவனமாக முதலீடு செய்ய வேண்டும். உங்களைச் சுற்றியுள்ள சூழல் இனிமையாக இருக்கும். சொத்து தொடர்பாக ஏதேனும் ஒப்பந்தம் சிக்கியிருந்தால், அதுவும் இறுதி செய்யப்படலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு நம்பிக்கையான நாளாக இருக்கும். வேலை தொடர்பான சில பிரச்சனைகளை நீங்கள் எதிர்கொண்டிருந்தால்,, அது இன்று முடிவுக்கு வரும். உங்களின் வேலையில் சக ஊழியர்கள் உங்களுக்கு முழு ஆதரவு தருவார்கள். அவசரப்பட்டு உணர்ச்சிவசப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். நீங்கள் உங்கள் வேலையைத் திட்டமிட்டால், அது உங்களுக்கு சிறப்பாக இருக்கும். முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இன்று நம்பிக்கை நிறைந்த நாளாக இருக்கும். முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உங்களுக்கு ஏதேனும் பொறுப்பு இருந்தால், அதில் ஓய்வெடுக்க வேண்டாம். அரசியலை நோக்கிச் செல்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். மாணவர்களின் விருப்பம் நிறைவேறும். உங்கள் பெற்றோரின் ஆசீர்வாதத்துடன், உங்கள் நிலுவையில் உள்ள எந்தவொரு வேலையும் முடிவடையும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
