Today Rasi Palan 02 October 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் எவ்வித மாற்றத்தை பற்றி யோசிப்பதையும் தவிர்க்கணும்

Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். 2024ம் ஆண்டு அக்டோபர் 02ம் தேதி புதன்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

Today Rasi Palan - 02 October 2024 Daily Horoscope in Tamil Today Horoscope in Tamil

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 9.15-10.15 மணி வரை. மாலை 4.45-5.45 மணி வரை. ராகு காலம் காலை 12.00-1.30 மணி வரை. குளிகை காலை 10.30-12.00 மணி வரை. எமகண்டம் காலை 7.30-9.00 மணி வரை. சூலம் - வடக்கு திசை. திருவோணம், அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே, உங்கள் குடும்பத்தில் சில சுப நிகழ்ச்சிகள் நடைபெறலாம். உங்கள் பெற்றோரின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். ஆரோக்கியத்தைப் புறக்கணிக்கும் தவறைச் செய்யாதீர்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. தொழில் விரிவாக்கத் திட்டங்கள் வெற்றி பெறும். வேலை தேடுபவர்கள் விரும்பிய வேலையைப் பெறலாம். ஆனால், நீங்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டும். உங்கள் அன்புக்குரியவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். காதல் வாழ்க்கையில் புதிய திருப்பம் ஏற்படலாம். நல்ல ஆரோக்கியத்திற்காக, நேரத்திற்கு உணவை உண்ணுங்கள். மேலும், தினமும் லேசான உடற்பயிற்சியையும் செய்ய முயற்சிக்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: பீச்
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: காலை 6:20 மணி முதல் காலை 9:20 மணி வரை

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே, நீங்கள் புதிய வருமான ஆதாரங்களைப் பெறலாம. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் நிதி நிலை மேம்படும். உங்கள் பேச்சு மற்றும் நடத்தையின் முழு பலனைப் பெறுவீர்கள். உங்கள் நல்ல குணங்கள் பெரிதும் பாராட்டப்படும். அலுவலகத்தில் சூழ்நிலைகள் இனிமையானதாக இருக்கும். குறிப்பாக, உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவார்கள். வியாபாரிகள் தடைபட்ட ஒப்பந்தம் முடிவடையும். உத்தியோகஸ்தர்கள் வேலை சம்பந்தமான பயணங்கள் செல்ல வாய்ப்புண்டு. உங்களின் இந்தப் பயணம் முன்னேற்றத்திற்கான பாதையைத் திறக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவீர்கள். உங்கள் காதல் துணையுடன் நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். உங்கள் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 40
அதிர்ஷ்ட நேரம்: காலை 9:15 மணி முதல் மதியம் 12:15 மணி வரை

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு சாதனைகள் நிறைந்த நாளாக இருக்கும். கடந்த காலத்தில் உங்கள் கடின உழைப்புக்கு தகுந்த பலன் கிடைக்கும். குழந்தைகளால் ஓரளவு மகிழ்ச்சி அடைவீர்கள். வணிகர்கள் முதலீடு செய்ய விரும்பினால், உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். வியாபாரிகளுக்கு சமீபகாலமாக ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளின் மனதைக் கவர உங்கள் மீது அதிக வேலை அழுத்தம் எடுத்து கொள்வதைத் தவிர்க்கவும். வீட்டு சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையை சிறப்புற உணரச் செய்ய சில சிறப்பு திட்டங்களை நீங்கள் செய்யலாம். நீங்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
அதிர்ஷ்ட எண்: 27
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 7:30 மணி வரை

கடகம்

கடக ராசிக்காரர்களே, நீதிமன்றம் தொடர்பான ஏதேனும் வழக்குகள் நடந்து கொண்டிருந்தால், நீங்கள் வெற்றி பெறலாம். சில விலையுயர்ந்த பொருட்களை வாங்க திட்டமிடலாம். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான ஒருங்கிணைப்பு நன்றாக இருக்கும். நீங்கள் கூட்டு வியாபாரம் செய்தால், உங்கள் துணையின் செயல்பாடுகளைக் கண்காணிப்பது மிகவும் முக்கியம். வெளிநாடு சென்று வேலை செய்ய வேண்டுமென்ற கனவில் இருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். குடும்ப உறவுகளில் நல்லிணக்கம் இருக்கும். உங்கள் பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, தவறான உணவுப் பழக்கங்களிலிருந்து
விலகி இருங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பீச்
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: காலை 4:05 மணி முதல் காலை 9 மணி வரை

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே, சில நல்ல செய்திகள் கிடைத்து மனம் மகிழ்ச்சியாக இருக்கும். வேலை சம்பந்தமாக பயணம் செய்ய வேண்டியிருக்கும். தொழிலதிபர்கள், அவசர அவசரமாக எந்த ஆவணத்திலும் கையெழுத்திட வேண்டாம். உத்தியோகஸ்தர்களின் செயல்பாடுகள் மேம்படும். நல்ல பலன்களையும் பெறுவீர்கள். வியாபாரத்தில் நிலவும் மந்த நிலை மாறி, விரைவில் விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக மாறும். உத்தியோகஸ்தர்கள் முக்கியமான வேலை தொடர்பான விஷயங்களை பிறருடன் அதிகம் பகிர வேண்டாம். குடும்ப பிரச்சனையையும் தீர்க்க, நீங்கள் அமைதியாகவும் புத்திசாலித்தனமாகவும் பணியாற்ற வேண்டும். திருமண வாழ்க்கையில் அதிக கவனம் தேவை. ஆரோக்கியத்தில் கவனக்குறைவாக இருப்பது, உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 9:15 மணி வரை

கன்னி

கன்னி ராசிக்காரர்களே, நிதி விஷயங்களில், நீங்கள் எந்த விதமான ஆபத்தான முடிவு எடுப்பதையும் தவிர்க்க வேண்டும். இல்லையெனில், நீங்கள் நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும். அலுவலகத்தில் தவறான முடிவெடுப்பதால் உங்களின் சில வேலைகள் தடைபடலாம். திருமண வாழ்வில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும். தொழிலதிபர்கள் விரைவான லாபம் ஈட்ட, தவறான பாதையில் செல்வதைத் தவிர்க்கவும். இல்லையெனிலட, நீங்கள் பெரிய சிக்கலில் சிக்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். உங்கள் கோபத்தையும் பேச்சையும் கட்டுப்படுத்துவது நல்லது. காதல் வாழ்க்கையில் சில குழப்பங்கள் இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வாயு, அஜீரணம், அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகள் வரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 21
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை

துலாம்

துலாம் ராசிக்காரர்களே, அலுவலகத்தில் உங்களுக்கு கிடைக்கும் முன்னேற்றத்தால் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் குழந்தையின் உடல்நிலை குறித்த கவலையிலிருந்தும் விடுபடலாம். வேலை தேடிக் கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். இழந்த மதிப்புமிக்க பொருளை திரும்பப் பெற வலுவான வாய்ப்புள்ளது. கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு நல்ல நிதி பலன்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களின் கடின உழைப்பு உங்களின் உயர் அதிகாரிகளை வெகுவாக ஈர்க்கும். அலுவலகச் சூழல் நிம்மதி அளிக்கும். குடும்பத்தில் உள்ள சிலருடன் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். உங்களுடைய சில முக்கிய பிரச்சனைகளை தீர்க்க உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுக்கு உதவலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நீங்கள் சோர்வாக மிகவும் உணர்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: காலை 5:15 மணி முதல் காலை 10 மணி வரை

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே, உத்தியோகஸ்தர்களுக்கு இன்று மிகவும் முக்கியமான நாளாக இருக்கும். உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கலாம். தொழிலதிபர்கள் அனுபவமுள்ளவர்களின் ஆதரவையும் ஊக்கத்தையும் பெறுவதன் மூலம் புதிய திசையைப் பெறுவார்கள். நீங்கள் சில முக்கிய வணிக முடிவுகளையும் எடுக்கலாம். மாலையில் குடும்ப உறுப்பினர்களுடன் வெளியே செல்ல திட்டமிடலாம். அரசு ஊழியர்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும். வீட்டில் நிலவும் பிரச்சனையால் மனஅழுத்தம் ஏற்பட்டால், விரைவில் மனக்கசப்புகள் அனைத்தும் தீரும். காதல் ஜோடிகளுக்கு இன்று சர்ச்சைக்குரியதாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நீங்கள் மிகவும் சோர்வாக உணரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 16
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:20 மணி முதல் மாலை 5 மணி வரை

தனுசு

தனுசு ராசிக்காரர்களே, உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிட வாய்ப்பு கிடைக்கும். இன்று நீங்கள் சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். அதனால், மனம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். தொழிலதிபர்களுக்கு நல்ல நிதி பலன்கள் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். தொழிலதிபர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை திடீரென அதிகரிக்கக்கூடும். ஆனால், உங்கள் கடின உழைப்பு மற்றும் தன்னம்பிக்கையின் உதவியுடன், அனைத்து வேலைகளையும் குறித்த நேரத்தில் முடிப்பதில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்களுடனான உறவும் மேம்படும். நீங்கள் யாரிடமாவது காதலை முன்மொழியப் போகிறீர்கள் என்றால், அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நரம்பு சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: காலை 4 மணி முதல் காலை 9:25 மணி வரை

மகரம்

மகர ராசிக்காரர்களே, வருமானத்தை விட செலவுகள் அதிகரிக்கக்கூடும். அதிகரித்து வரும் உங்கள் செலவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். நீங்கள் வேலையை மாற்ற திட்டமிட்டிருந்தால், இன்று நல்ல நாளாக இருக்கும். குடும்பம் தொடர்பான எந்த முடிவையும் அவசரத்தில் எடுக்காதீர்கள். இல்லையெனில், அது உங்கள் உறவுகளையும் பாதிக்கும். தொழிலதிபர்கள் வியாபாரத் திட்டங்களில் மாற்றங்களைச் செய்வதைத் தவிர்க்கவும். அரசு ஊழியர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். உங்கள் மனதில் ஏதேனும் குழப்பம் இருந்தால், உங்கள் அன்புக்குரியவர்களுடன் வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ளுங்கள். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்களுக்கு பல்வலி பிரச்சனை வரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:30 மணி முதல் இரவு 9:15 மணி வரை

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே, வாழ்க்கைத் துணையுடன் உறவில் அன்பும் இணக்கமும் இருக்கும். முக்கிய முடிவுகளில் உங்கள் அன்புக்குரியவரிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவீர்கள். நாளின் இரண்டாம் பகுதியில் திடீர் நிதி ஆதாயம் உண்டாகக்கூடும். அதனால், உங்கள் நிதி சிக்கல்கள் தீர்க்கப்படும். அரசுத் துறையுடன் தொடர்புடையவர்கள் நல்ல வெற்றியைப் பெறலாம். வியாபாரிகளின் பொருளாதார நிலை வலுவடையும். உங்களுக்கு சில புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். நீங்கள் உங்கள் வேலையை மாற்ற விரும்பினால், நல்ல சலுகை கிடைக்கும். குடும்பத்தில் யாருடனாவது கருத்து வேறுபாடு இருந்தால், உங்கள் பக்கத்தை அமைதியாக முன்வைக்க முயற்சிக்கவும்.ஆரோக்கியத்தில் அலட்சியமாக இருக்க வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 40
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:30 மணி முதல் காலை 11 மணி வரை

மீனம்

மீன ராசிக்காரர்களே, படிப்பில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும். இன்று சில நல்ல செய்திகளையும் பெறலாம். குடும்ப உறுப்பினர்களுடன் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும். பண விஷயத்தில் நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். திடீர் பயணத்திற்கான வாய்ப்புகள் உண்டு. தொழிலதிபர்கள் புதிய வேலைகளைத் திட்டமிடலாம். விரைவில் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் உள்ள அர்ப்பணிப்பு உயர் அதிகாரிகளின் மனதை கவரும். குடும்ப உறுப்பினர்களுடனான ஒற்றுமை நிலைத்திருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையிடமிருந்து அன்பும் ஆதரவும் கிடைக்கும். உங்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
ஆரோக்கியத்தைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 35
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Wednesday, October 2, 2024, 5:00 [IST]
Desktop Bottom Promotion