Latest Updates
-
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது..
2026 ஆம் ஆண்டின் முதல் சூரிய பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்...
Thai Matha Rasi Palan 2026: ஜோதிடத்தில் கிரகங்களின் ராஜாவாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். இப்படி சூரியன் ராசியை மாற்றும் போது தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. அந்த வகையில் 2026 ஆம் ஆண்டில் நுழைந்துள்ளோம். இந்த ஆண்டின் முதல் சூரிய பெயர்ச்சி ஜனவரி 14 ஆம் தேதி நடக்கிறது. இந்த சூரிய பெயர்ச்சியின் போது சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்குள் நுழையவுள்ளார்.
இந்த மகர ராசியின் அதிபதி சனி பகவான். இந்த சனி பகவானின் மகர ராசியில் சூரியன் நுழைவதால் தமிழ் மாதமான தை மாதம் பிறக்கிறது. இந்த தை மாதத்தில் தான் சூரியன் தட்சிணாயனத்திலிருந்து உத்தராயணத்திற்கு நகர்கிறார். இக்காலத்தில் ஒருவரது ஜாதகத்தில் சூரியன் வலுவான நிலையில் இருந்தால், அந்நபர் சமூகத்தில் நல்ல மரியாதையையும், அந்தஸ்தையும் பெறுவார்கள்.

இந்த சூரிய பெயர்ச்சியால் பிறந்துள்ள தை மாதத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், 4 ராசிக்காரர்கள் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். இப்போது தை மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் கடின உழைப்புக்கான பலனைப் பெறுவார்கள். பணியிடத்தில் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். சொத்து தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவுகளைப் பெறக்கூடும். திருமண வாழ்க்கையில் வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலையில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். சட்ட விஷயங்களில் நல்ல வெற்றியைப் பெறக்கூடும். வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரிகள் எதிர்பாராத அளவில் நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள்.
துலாம்
துலாம் ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். முயற்சிகளுக்கு ஏற்ற நல்ல பலன் கிடைக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். பணிபுரிபவர்களுக்கு வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும்.
தனுசு
தனுசு ராசியின் 9 ஆவது வீட்டின் அதிபதியான சூரியன் 2 ஆவது வீட்டிற்கு சூரிய செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு தை மாதம் அதிர்ஷ்டமாக இருக்கும். இப்படி அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால், எந்த வேலையை செய்தாலும் அதில் வெற்றி கிடைக்கும். தொழில் மற்றும் வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். மொத்தத்தில் சூரியனின் ஆசியால் தொழில் மற்றும் நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications