Latest Updates
-
விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்.. -
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம் -
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நாஞ்சில் புளிக்குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும்
3 முறை நடக்கும் சூரிய பெயர்ச்சியால் ஆகஸ்ட் மாதம் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது...
Sun Transits 3 Times In August 2025: ஜோதிடத்தில் கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் சிம்ம ராசியின் அதிபதியாவார். கிரகங்களிலேயே சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றக்கூடியர். அதோடு குறிப்பிட்ட கால இடைவெளியில் நட்சத்திரத்தையும் மாற்றுவார். சூரியனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.
சூரியன் தற்போது கடக ராசியில் பயணித்து வருகிறார். இந்த கடக ராசியில் ஆகஸ்ட் 17 ஆம் தேதி வரை இருப்பார். அதன் பின் தனது சொந்த ராசியான சிம்ம ராசிக்கு நுழைவார். இது தவிர சூரியன் ஆகஸ்ட் மாதத்தில் 2 முறை நட்சத்திரத்தையும் மாற்றவுள்ளார். அதில் ஆகஸ்ட் 3 ஆம் தேதி சூரியன் ஆயில்யம் நட்சத்திரத்திற்கும், ஆகஸ்ட் 30 ஆம் தேதி பூரம் நட்சத்திரத்திற்கும் செல்லவுள்ளார்.

இப்படி ஒரே மாதத்தில் சூரியன் 3 முறை தனது நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளார். அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். இப்போது ஆகஸ்ட் மாதத்தில் 3 முறை ராசியை மாற்றும் சூரியனால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
துலாம்
ஆகஸ்ட் மாதத்தில் 3 முறை நடக்கும் சூரிய பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களுக்கு வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றின் மூலம் நிறைய பணம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் ஆகஸ்ட் மாதத்தில் 3 முறை நடக்கும் சூரிய பெயர்ச்சியால் வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காணக்கூடும். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். தொழிலதிபர்கள் தங்கள் எதிரிகளை எளிதில் வெற்றி பெறுவார்கள். வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். அதோடு அலுவலகத்தில் உடன் வேலை செய்வோர் மற்றும் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். தந்தையுடனான உறவு வலுவடையும்.
சிம்மம்
ஆகஸ்ட் மாதத்தில் 3 முறை நடக்கும் சூரிய பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். அலுவலகத்தில் செயல்திறன் மேம்படும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வணிகர்களுக்கு வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
