Latest Updates
-
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 28 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க..
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: நவம்பர் 06 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கை பிரகாசிக்கப்போகுது...
Sun Transit In Visakam Nakshatra On 06 November 2024: ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது ராசியையும், நட்சத்திரங்களையும் மாற்றி மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் மாதம் ஒருமுறை ராசியையும், 14 நாட்களுக்க ஒருமுறை நட்சத்திரத்தையும் மாற்றுவார்.
இந்நிலையில் அக்டோபர் 17 ஆம் தேதி தான் சூரியன் துலாம் ராசிக்குள் நுழைந்தார். அப்படியிருக்க நவம்பர் 06 ஆம் தேதி சூரியன் விசாக நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். விசாக நட்சத்திரமானது குரு பகவானின் நட்சத்திரமாகும். குருவும், சூரியனும் நண்பர்களாவர்.

குரு பகவானின் நட்சத்திரத்திற்கு சூரியன் செல்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக, திடீர் நிதி ஆதாயங்களைத் தரும். இப்போது விசாக நட்சத்திரத்திற்கு சூரியன் செல்வதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இலக்கை அடைய எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரிகளுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். புதிய நட்புகள் கிடைக்கும். இந்த நட்பால் எதிர்காலத்தில் நல்ல ஆதாயங்கள் கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் தைரியமும், வீரமும் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பணம் தேடி வரும். புதிய தொழிலை தொடங்கினால் நல்ல பலனைப் பெறுவீர்கள். புதிய முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். வெளிநாட்டுடன் தொடர்புடைய வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலைகளில் நல்ல வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புக்களைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் கொடுக்கப்படும் இலக்குகளை எளிதில் அடைவீர்கள். வாழ்க்கையில் நீண்ட நாட்களாக சந்தித்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வியாபாரிகளுக்கு வியாபாரத்தை விரிவுபடுத்தும் வாய்ப்பு கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications