Latest Updates
-
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது! -
கொங்குநாட்டு ஸ்டைல் பச்சைப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
நட்ஸ்கள் குறித்து பலரது மனதில் உள்ள டாப் 5 சந்தேகங்களுக்கு பதிலளித்த டாக்டர்.அருண்குமார்! மிஸ் பண்ணாம படிங்க.. -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்! -
ரவா பன் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
சனி-சந்திரனால் உருவாகியுள்ள விஷ யோகம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்!
சூரிய பெயர்ச்சியால் ஐப்பசி மாதம் இந்த 3 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா?
Sun Transit In Libra 2024: ஜோதிடத்தில் கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரிய பகவான். இந்த சூரியன் சிம்ம ராசியின் அதிபதியாவார். கிரகங்களில் சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். அப்படி சூரியன் ராசியை மாற்றும் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன.
அந்த வகையில் சமீபத்தில் தான் சூரியன் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்குள் நுழைந்தார். துலாம் ராசியானது சுக்கிரனின் ராசியாகும். துலாம் ராசிக்குள் சூரியன் நுழைந்ததால் தமிழ் மாதமான ஐப்பசி மாதம் பிறந்துள்ளது. சூரியனின் ராசி மாற்றம் அனைத்து ராசிக்கார்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதில் சில ராசிக்காரர்களுக்கு அற்புதமாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம். இப்போது சூரியன் துலாம் ராசிக்குள் நுழைந்ததால் பிறந்த ஐப்பசி மாதமானது எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் ஐப்பசி மாதத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்திற்கான பல புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். புதிய தொழிலைத் தொடங்கும் வாய்ப்புகள் கிடைக்கலாம். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நிதி நிலை மேம்படும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் ஐப்பசி மாதத்தில் செல்வம் பெருகும். இக்காலத்தில் மிகவும் ஆற்றலுடன் இருப்பீர்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். சிலர் புதிய வருமான ஆதாரங்களைப் பெறலாம். புதிய தொழிலைத் தொடங்கும் ஆசை இருந்தால், இக்காலம் அதற்கு சாதகமாக இருக்கும். சமூகத்தில் உங்களின் மதிப்பும், மரியாதையும் உயரும். குடும்ப உறுப்பினர்களிடையேயான உறவு மேம்படும்.
கும்பம்
கும்ப ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் ஐப்பசி மாதமானது கும்ப ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். அரசு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருந்தால், இக்காலத்தில் நல்ல செய்தியைப் பெறலாம். வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். நிதி நிலை வலுவாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் பிரச்சனை இருந்தால், இக்காலத்தில் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications