Latest Updates
-
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
2026-ன் முதல் சூரிய பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும்... உங்க ராசி இதுல இருக்கா?
Sun Transit In Capricorn 2026: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் சிம்ம ராசியின் அதிபதியாவார் மற்றும் இவர் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். அந்த வகையில் 2026 ஆம் ஆண்டின் முதல் சூரிய பெயர்ச்சி ஜனவரி 14 ஆம் தேதி நடந்தது.
இந்த பெயர்ச்சியின் போது சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்குள் நுழைந்துள்ளார். இந்த மகர ராசியின் அதிபதி சனி பகவான். இந்த சனி பகவானும், சூரியனும் மகன், தந்தை உறவை கொண்டிருந்தாலும், எதிரிகளாக கருதப்படுகிறார்கள். இப்படிப்பட்ட மகர ராசிக்கு சூரியன் சென்றிருப்பதால் அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.

அதில் சிலருக்கு மோசமாக இருந்தாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். குறிப்பாக 4 ராசிக்காரர்கள் இந்த சூரியனின் ராசி மாற்றத்தால் வருமானத்திலும், தொழிலிலும் நல்ல முன்னேற்றத்தைக் காணவுள்ளனர். இப்போது 2026 ஆம் ஆம் ஆண்டின் முதல் சூரிய பெயர்ச்சியால் நிதி ரீதியாக அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். முக்கியமாக நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் இந்த சூரிய பெயர்ச்சியால் கிடைக்கப் போகிறது. பணியிடத்தில் உங்களின் செயல்திறன் நல்ல பாராட்டைப் பெறும். தந்தையுடனான உறவு வலுபெறும். நிதி நிலைமை வலுவடையும். தொழில் ரீதியாக எதிர்பாராத அளவில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள்
ரிஷபம்
ரிஷப ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். அதிர்ஷ்ட வீட்டிற்கு சூரியன் சென்றிருப்பதால், இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவால் வெற்றிகளைக் குவிப்பார்கள். எந்த ஒரு வேலையை செய்தாலும், அதில் வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் உங்களின் கடின உழைப்பை பாராட்டி, பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றை வழங்கலாம். இக்காலத்தில் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். செல்வ வீட்டிற்கு சூரியன் சென்றிருப்பதால், தனுசு ராசிக்காரர்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். பணிபுரிபவர்களுக்கு வருமானத்தில் உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் இக்காலத்தில் கைக்கு வந்து சேரும். வியாபாரிகள் மற்றும் வணிகர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். இதன் மூலம் நிதி நிலைமை வலுவடையும்.
மீனம்
மீன ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். வருமானம் மற்றும் ஆசைகளின் வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளதால், மீன ராசிக்காரர்கள் சூரியனின் அருளால் வருமானத்தில் உயர்வைக் காண்பார்கள். பல புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் செயல்திறனுக்கு ஏற்ப சம்பள உயர்வு கிடைப்பதற்கான வய்ப்புக்களும் உள்ளன. முக்கியமாக சூரியனின் அருளால் நீண்ட கால ஆசைகள் இக்காலத்தில் நிறைவடையும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
