Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும்
ராகுவின் நட்சத்திரத்திற்கு செல்லும் சூரியன்: ஜூன் 22 முதல் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்...
Sun Nakshatra Transit In June 2025: ஜோதிடத்தில் கிரகங்களின் ராஜாவாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் சிம்ம ராசியின் அதிபதியாவார் மற்றும் இவர் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவதோடு, அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார். அந்த வகையில் தற்போது சூரியன் மிதுன ராசியில், மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பயணித்து வருகிறார்.
சூரியனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். இந்நிலையில் சூரியன் வருகிற ஜூன் 22 ஆம் தேதி மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் இருந்து திருவாதிரை நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். இந்த திருவாதிரை நட்சத்திரத்தின் அதிபதி ராகு. கிரகங்களில் சூரியன் மரியாதை, பதவி மற்றும் கௌரவத்தின் கிரகமாக இருந்தாலும், ராகு அதன் அசுப விளைவுக்கு பெயர் பெற்றது.

இதனால் சூரியன் ராகுவின் நட்சத்திரத்திற்கு செல்வதால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பிரச்சனைகள் தலைதூக்கலாம் மற்றும் ஏராளமான சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம். இப்போது ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்திற்கு செல்லும் சூரியனால் ஜூன் 22 முதல் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
விருச்சிகம்
திருவாதிரை நட்சத்திரத்திற்கு சூரியன் செல்வதால் விருச்சிக ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகரிக்கக்கூடும். தேவையில்லாமல் மற்றவர்களின் விஷயத்தில் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும். தொழில் தொடர்பான பயணங்களை தவிர்ப்பது நல்லது. யாருக்கும் கடன் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். சொத்து தொடர்பான பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்க வேண்டும். குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வருமானத்தில் உயர்வு ஏற்பட்டாலும், அதற்கேற்ப செலவுகளும் அதிகரிக்கும். இதன் விளைவாக மன அழுத்தம் அதிகரிக்கும். இக்காலத்தில் தவறான நபர்களின் சகவாசத்தைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் சிக்கலில் சிக்கி அவதிப்பட நேரிடும்.
ரிஷபம்
சூரியன் திருவாதிரை நட்சத்திரத்திற்கு செல்வதால் ரிஷப ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகரிக்கலாம். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும். முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தால், இக்காலத்தில் அதை தவிர்ப்பது நல்லது. இல்லாவிட்டால் இழப்புக்களை சந்திக்க நேரிடும். வணிகர்கள் தங்களின் திட்டங்களில் தோல்வியை சந்திக்க நேரிடும். பழைய விஷயங்களால் பதற்றம் அதிகரிக்கும். தொழிலில் கூட்டாண்மையைத் தவிர்க்க வேண்டும். மொத்தத்தில் இக்காலத்தில் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
மீனம்
திருவாதிரை நட்சத்திரம் செல்லும் சூரியனால் மீன ராசிக்காரர்கள் தங்களின் காதல் வாழ்க்கையில் சிரமங்களை சந்திக்க நேரிடும். பாதகமான சூழ்நிலைகளில் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். பணியிடத்தில் பொறுப்புக்கள் அதிகமாக வழங்கப்படலாம். உங்களைச் சுற்றியிருப்பவர்களிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும். அலட்சியமாக இருந்தால் பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் உறவுகளில் விரிசல் ஏற்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
