Latest Updates
-
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
மகரத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 5 ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்டத்தை கொண்டு வரப்போகுது..
Budhaditya Rajyoga On 24 January 2025: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்களின் ராசி மாற்றங்களானது மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் கிரகங்கள் ராசியை மாற்றும் போது சில சமயங்களில் சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்கும். அவ்வாறு உருவாகும் யோகங்களும் ஒருவரது வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை உண்டாக்கும்.
தற்போது 2025 ஆம் ஆண்டில் நுழைந்துள்ளோம். இந்த ஆண்டின் ஜனவரி 14 ஆம் தேதி கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் மகர ராசிக்குள் நுழையவுள்ளார். அதைத் தொடர்ந்து கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் ஜனவரி 24 ஆம் தேதி மகர ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் மகர ராசியில் புதன் மற்றும் சூரியனின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது.

இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இப்போது மகர ராசியில் உருவாகவுள்ள புதாதித்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 9 ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். மேலும் முடிவெடுக்கும் திறன் மேம்படும். நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும். முதலீடுகளை செய்ய திட்டமிட்டால், நல்ல லாபம் கிடைக்கும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.
கன்னி
கன்னி ராசியின் 5 ஆவது வீட்டில் புதாத்திய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழிலில் சிறந்து விளங்குவார்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். கூட்டு வணிகம் செய்பவர்களுக்கு நிறைய லாபம் கிடைக்கும். பேச்சாற்றல் சிறப்பாக இருக்கும். இதன் பேச்சின் மூலம் பல முக்கியமான வேலைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.
கும்பம்
கும்ப ராசியின் 12 ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காண்பதோடு, நிதி ரீதியாகவும் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பணியிடத்தில் உங்களின் புதுமையான யோசனைகள் உங்களுக்கு நற்பெயரை வாங்கித் தரும். உங்களின் செயல்திறன் சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மகரம்
மகர ராசியின் முதல் வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தலைமைப்பண்புகள் மேம்படும். புத்திசாலித்தனத்தால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மேலும் உங்களின் சிறப்பான செயல்திறன் நல்ல பாராட்டைப் பெறும். வேலையில் முழு கவனத்தை செலுத்தினால், நல்ல வெற்றி கிடைக்கும்.
மீனம்
மீன ராசியின் 11 ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் மனக்குழப்பம் நீங்கும். எந்த முடிவுகளையும் தெளிவாக யோசித்து எடுப்பீர்கள். நிதி ரீதியான முடிவுகளை திறம்பட எடுப்பீர்கள். அதன் மூலம் நல்ல நிதி ஆதாயங்களையும் பெறுவீர்கள். பணியிடத்தில் எடுக்கும் முயற்சிகள் நல்ல வெற்றி அடையும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபம் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications