Latest Updates
-
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள்
1 வருடம் கழித்து கன்னியில் ஒன்றிணையும் சூரியன்-புதன்: இந்த 3 ராசிக்கு தொழிலில் ஜாக்பாட் அடிக்கப்போகுது!
Sun Mercury Conjunction In Virgo 2025: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் ஒரு ராசியில் 1 மாத காலம் பயணிப்பார். இந்த சூரியன் தற்போது சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் வருகிற செப்டம்பர் 17 ஆம் தேதி சூரியன் கன்னி ராசிக்குள் நுழையவுள்ளார்.
மறுபுறம் கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன், புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். இந்த புதன் செப்டம்பர் 15 ஆம் தேதி கன்னி ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் கன்னி ராசியில் சூரியன் மற்றும் புதனின் சேர்க்கை நிகழவுள்ளது. இந்த கிரகங்களின் சேர்க்கையால் மிகவும் சக்தி வாய்ந்த புதாதித்ய ராஜயோகமானது உருவாகவுள்ளது. இந்த ராஜயோகமானது கன்னி ராசியில் சுமார் 1 வருடம் கழித்து உருவாகவுள்ளது.

இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. முக்கியமாக வருமானத்தில் உயர்வுடன், தொழிலில் நல்ல வெற்றியும், லாபமும் கிடைக்கப் போகிறது. இப்போது கன்னியில் உருவாகும் புதாதித்ய ராஜயோகத்தால் தொழில் ரீதியாக அதிர்ஷ்டமடையும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
தனுசு
தனுசு ராசியின் 10 ஆவது வீட்டில் புதன் மற்றும் சூரிய சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வணிகத்தில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். முன்னேற்றத்திற்கான பாதை திறக்கும். எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளும் நல்ல பலனைத் தரும். வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் காண கடினமாக உழைப்பீர்கள். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். தொழிலதிபர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள்.
சிம்மம்
சிம்ம ராசியின் 2 ஆவது வீட்டில் புதன் மற்றும் சூரிய சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் திடீர் நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். வேலையை மாற்ற அல்லது பதவி உயர்வுக்காக முயற்சித்துக் கொண்டிருந்தால், இக்காலத்தில் நல்ல பலனைப் பெறலாம். ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஊடகம், வங்கி, பேச்சு, இசை போன்ற துறையுடன் தொடர்புடையவர்கள் இந்த ராஜயோக காலத்தில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 11 ஆவது வீட்டில் புதன் மற்றும் சூரிய சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் மிகப்பெரிய உயர்வு ஏற்படும். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றில் இருந்து நல்ல லாபத்தைப் பெறக்கூடும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்தபடி நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
