Latest Updates
-
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள்
சூரியன்-கேது இணைவதால் கோடிகளைக் குவிக்கப் போகிற 3 ராசிக்காரங்க இவங்கதான்...!
ஜோதிட சாஸ்திரத்தில், கிரக இயக்கங்கள் பொதுவாக சுப-அசுப யோகங்கள் மற்றும் ராஜயோகங்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அனைத்து கிரகங்களும் அவ்வப்போது தங்கள் இயக்கத்தை மாற்றிக்கொண்டே இருக்கின்றன, இந்த யோகங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
ஆகஸ்ட் 2025 மாதத்தில் சூரியன்-கேது சேர்க்கை உருவாகப் போகிறது, இந்த இணைப்பு சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கப் போகிறது. கிரகங்களின் ராஜாவான சூரியன், ஒருவரின் அடையாளம் மற்றும் தலைமைத்துவ பண்பைக் குறிக்கிறது. மறுபுறம், கேது நிழல் கிரகமாக கருதப்படுகிறார். சூரியன்-கேது சேர்க்கை எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கப் போகிறது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு சூரியன்-கேது சேர்க்கை சாதகமான நன்மைகளை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். இந்த சூரியன்-கேது சேர்க்கை அவர்களின் பதினொன்றாவது வீட்டில் உருவாகிறது. இதன் விளைவாக அவர்களின் வருமானம் அதிகரிக்கும். துலாம் ராசியினருக்கு இது ஒரு சிறந்த காலமாக இருக்கும். மேலும் இது அவர்களுக்கு தங்கள் திட்டத்தை செயல்படுத்த சிறப்பான காலமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் அவர்கள் தங்கள்புதிய திட்டங்களை செயல்படுத்தத் தொடங்கலாம்.
நிதி நிலைமை வலுவடைந்து பல்வேறு ஒப்பந்தங்களிலிருந்து திடீர் பண ஆதாயங்களைப் பெறலாம். மேலும், வெளிநாட்டு தொடர்பான வேலைகளுடன் தொடர்புடைய நபர்கள் லாபத்தையும் புதிய திட்டங்களையும் பெற வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கையில் அமைதியும் நிலைத்தன்மையும் நிலவும்.
சிம்மம்
சிம்ம ராசி ஜாதகக்காரர்களுக்கு சூரியன்-கேது இணைப்பு மிகவும் சாதகமாக இருக்கும். இந்த பெயர்ச்சி ஜாதகரின் லக்னத்தில் இந்த இணைப்பு நடப்பதால், மக்களின் நம்பிக்கை கணிசமாக அதிகரிக்கிறது.இந்த காலகட்டத்தில் உங்களின் நிதி நிலைமை எதிர்பாராத அளவிற்கு வலுப்பெறும். கடந்த கால கடன் பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வரும். வியாபாரத்தைப் பொறுத்தவரை சிம்ம ராசிக்காரர்களுக்கு இது மிகவும் சாதகமான நேரமாகும்.
உங்கள் வாழ்க்கையில் திருப்தியாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்வீர்கள். குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வேலையில் இருப்பவர்களுக்கு சில புதிய பொறுப்புகள் கிடைக்கக்கூடும். மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் ஒத்துழைப்புடன், அனைத்துப் பொறுப்புகளையும் துல்லியமாக மேற்கொள்ள முடியும். ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு சூரியன்-கேது இணைப்பு மிகவும் மங்களகரமானதாக இருக்கும்.இந்த காலகட்டத்தில் அவர்கள் தாங்கள் விரும்பிய சாதனைகளை அடைய வாய்ப்பு கிடைக்கும். கடந்த காலத்தில் எதிர்கொண்ட முக்கிய தடைகள் நீங்க வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் புதிய உச்சத்தை அடைய அவர்களுக்கு ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உருவாகும். அவர்கள் வாழ்க்கையில் முக்கியமான ஆசைகளில் ஒன்று இப்போது நிறைவேறும். மாணவர்களுக்கும் வெற்றிகரமான நாட்கள் வரவிருக்கின்றன.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

