18 ஆண்டுகளுக்கு பின் சிம்மத்தில் உருவாகும் தரித்திர யோகம்: இந்த 5 ராசிக்காரர்களை தரித்திரம் துரத்தப்போகுது...

Daridra Yog 2025: ஜோதிடத்தின் படி, கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். அவ்வாறு சூரியனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். தற்போது சூரியன் கடக ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் சூரியன் தனது சொந்த ராசியான சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார்.

சொந்த ராசிக்கு சூரியன் செல்வது சற்று சிறப்பானது. ஆனால் இந்த சிம்ம ராசியில் ஏற்கனவே கொடூரமான கிரகமாக கருதப்படும் கேது பயணித்து வருகிறார். இதனால் இந்த சூரிய பெயர்ச்சியால் சிம்ம ராசியில் கேது சூரிய சேர்க்கையால் தரித்திர யோகம் உருவாகவுள்ளது. அதுவும் 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகவுள்ளது.

Sun Ketu Conjunction In Leo Make Daridra Yog 2025 After 18 Years Unlucky Zodiac Signs

யோகங்களில் தரித்திர யோகமானது மிகவும் மோசமான யோகமாகும். இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். முக்கியமாக இந்த யோகத்தால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஏனென்றால் சூரியன் தந்தை, ஆன்மாவின் காரணி, கேது விபத்துக்கான காரணி.

இதனால் இந்த யோகத்தால் பெரிய விபத்தோ, கொந்தளிப்போ ஏற்படலாம். முக்கியமாக 5 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் பல மோசமான விளைவுகளை சந்திக்க போகிறார்கள். இப்போது சூரிய கேது சேர்க்கையால் உருவாகும் தரித்திர யோகத்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்

மேஷ ராசியின் 5 ஆவது வீட்டில் கேது சூரிய சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆரோக்கியத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதுவும் இதயம் தொடர்பான பிரச்சனைகளைக் கொண்டவர்கள் வழக்கத்தை விட கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். மேலும் கர்ப்பிணி பெண்களும் இக்காலத்தில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. அதுவும் இக்காலத்தில் மிதுனத்தில் குரு சுக்கிர சேர்க்கையால் கஜலட்சுமி ராஜயோகம் உருவாகியிருப்பதால், சில நன்மைகளைப் பெறுவார்கள். தரித்திர யோகத்தின் விளைவுகளைத் தவிர்க்க, கேதுவின் மந்திரங்களை உச்சரிக்க அறிவுறுத்தப்படுகிறது.

ரிஷபம்

ரிஷப ராசியின் 4 ஆவது வீட்டில் கேது சூரிய சேர்க்கையால் தரித்திர யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்காது. வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தாயாரின் ஆரோக்கியம் குறித்த கவலை அதிகரிக்கலாம். அதிக மன அழுத்தத்தை சந்திக்க நேரிடும். பணிபுரிபவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்காது. வாழ்க்கையில் ஏராளமான சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்பதால் ஒவ்வொரு விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். ஆயினும் நிதி நிலை சிறப்பாக இருக்கும். வீட்டில் நடக்கும் பிரச்சனைகளும் தீரும்.

கடகம்

கடக ராசியின் 2 ஆவது வீட்டில் கேது சூரிய சேர்க்கையால் தரித்திர யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதிப்படக்கூடும். முக்கியமாக கண்கள் மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பயணங்களை மேற்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும். இந்த ராசியின் லக்ன வீட்டில் புதனும் சுக்கிரனும் ஒன்றிணைவதால் லட்சுமி நாராயண யோகம் உருவாகி, சில நன்மைகளையும் வழங்கும்.

சிம்மம்

சிம்ம ராசியின் முதல் வீட்டில் ராகு சூரிய சேர்க்கையால் தரித்திர யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களும் ஆரோக்கிய பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். மேலும் எந்த வேலையை செய்வதாக இருந்தாலும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் எதிர்பாராத மோசமான சம்பவங்களை சந்திக்க நேரிடும். தரித்திர யோகத்தின் மோசமான விளைவுகளைத் தவிர்க்க கேதுவின் மந்திரங்களை பாராயணம் செய்ய வேண்டும்.

தனுசு

தனுசு ராசியின் 9 ஆவது வீட்டில் கேது சூரிய சேர்க்கையால் தரித்திர யோகம் உருவாகவுள்ளது. இந்த தரித்திர யோகத்தால் தனுசு ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மிகவும் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் சற்று குறையலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இதயம் தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே இக்காலத்தில் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Desktop Bottom Promotion