Latest Updates
-
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, தன் பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்.. -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான்
சூரியன் மீது விழும் சனியின் கொடிய மூன்றாம் பார்வை: மே 15 முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
Saturn's Third Aspect Falls On Sun: வேத ஜோதிடத்தில், சனி பகவான் இருக்கும் நிலை மட்டுமின்றி, சனியின் பார்வையும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் சனியின் மூன்றாம் பார்வை மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். இப்படிப்பட்ட சனியின் மூன்றாம் பார்வை நாளை முதல் சூரியன் மீது விழவுள்ளது.
தற்போது கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் மேஷ ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் சூரியன் மே 15 ஆம் தேதி மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்குள் நுழையவுள்ளார். சூரியன் ரிஷப ராசியில் நுழையும் போது, சனியின் மூன்றாம் பார்வை சூரியன் மீது விழுகிறது.

பிரகாசமான சூரியன் மீது சனியின் மூன்றாம் பார்வை விழுவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதில் சில ராசிக்காரர்கள் மிகவும் மோசமான விளைவை சந்திக்கவுள்ளனர். அதுவும் இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பிரச்சனைகளை அதிகம் சந்திப்பார்கள்.
குறிப்பாக ஒருவரது தன்னம்பிக்கை குறையும், தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் மற்றும் வேலையில் இடையூறு ஏற்படும் வாய்ப்புள்ளது. இப்போது சனியின் மூன்றாம் பார்வை சூரியன் மீது விழுவதால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் குடும்ப வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதுவும் தந்தையுடனான உறவு பதட்டமாக இருக்கும். அதிக கோபம் கொள்வீர்கள்.
இந்த கோபத்தையும், நடத்தையையும் கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் உங்களைச் சுற்றியிருப்பவர்கள் உங்களை விட்டு விலக நேரிடும். பண விஷயங்கள் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பண பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எந்த வேலையையும் திட்டமிட்டு செய்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்.
துலாம்
துலாம் ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக சற்று சவாலானதாக இருக்கும். சனியின் பார்வை விழுவதால் இந்த ராசிக்காரர்களின் பொறுமையும், முடிவெடுக்கும் திறனும் சோதிக்கப்படும்.
பணியிடத்தில் உங்கள் வேலையை அனைவரும் கவனிப்பார்கள். எனவே ஒவ்வொரு வேலையையும் கவனமாக செய்ய அறிவுறுத்தப்படுகிறது. வேலையை மாற்ற நினைத்துக் கொண்டிருந்தால், சற்று பொறுமையாக இருக்க வேண்டும். இக்காலத்தில் அளவாக பேசினால் நல்ல பலனைப் பெறலாம். நிதி நிலை சீராக இருக்க வேண்டுமானால், பட்ஜெட் போட்டு செலவழிக்க வேண்டும். திருமண வாழ்க்கை சற்று பதட்டம் நிறைந்ததாக இருக்கும்.
மகரம்
மகர ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இந்த இந்த ராசிக்காரர்கள் மிகுந்த சோம்பலை சந்திப்பார்கள். இதன் காரணமாக பல முக்கியமான வேலைகள் முடிவடையாமல் தேங்கக்கூடும். தவறான சகவாசத்தை தவிர்க்க வேண்டும்.
மாணவர்களுக்கு படிப்பில் கவன சிதறல் ஏற்படும் வாய்ப்புள்ளது. நீதிமன்றம் தொடர்பான விஷயங்களால் மன அழுத்தம் அதிகரிக்கும். புதிய முதலீடுகளை செய்யும் எண்ணம் இருந்தால், அதைத் தவிர்க்க வேண்டும். ஒருவேளை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டால், அனுபவம் வாய்ந்த ஒருவருடன் கலந்தாலோசித்த பின் எந்த முடிவையும் எடுக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications