Latest Updates
-
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம்
சனி-சுக்கிரனால் ஆகஸ்ட் 1-ல் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் வருமானம் உயரப்போகுது...
Saturn Venus Make Kendra Yog On August 2025: ஜோதிடத்தில் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடியவர் சனி பகவான். இந்த சனி பகவான் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார் மற்றும் இவர் மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாவார். தற்போது சனி பகவான் மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்த ராசியில் அடுத்த 2 1/2 ஆண்டுகள் இருப்பார்.
இதனால் இந்த காலகட்டத்தில் சனி பகவான் மற்ற கிரகங்களுடன் இணைந்து, அதன் காரணமாக சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். இந்நிலையில் ஆகஸ்ட் 01 ஆம் தேதி சனி பகவானும், அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரனும் சேர்ந்து கேந்திர யோகத்தை உருவாக்கவுள்ளனர்.

அதுவும் இந்த கேந்திர யோகத்தின் போது சனி பகவானும், சுக்கிரனும் ஒருவருக்கொருவர் 90 டிகிரியில் இருப்பார்கள். இந்த யோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதில் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம். இப்போது சனி சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் கேந்திர யோகத்தால் வாழ்க்கையில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். மாணவர்கள் போட்டி தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். உறவுகளைப் பொறுத்தவரை, மிகவும் சிறப்பாக இருக்கும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். இதுவரை வேலையில் சந்தித்த போராட்டம் முடிவுக்கு வரும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும். மொத்தத்தில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்திற்கான பாதை திறக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் கேந்திர யோகத்தால் புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். பரம்பரை சொத்துக்கள் கைக்கு கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உங்களின் செயல்திறன் நல்ல பாராட்டைப் பெறும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். எந்த முடிவை எடுத்தாலும், சாதகமான பலனைப் பெறுவீர்கள். நீதிமன்றம் தொடர்பான விஷயங்களில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். ஆரோக்கிய பிரச்சனைகள் இருந்தால், அது முடிவுக்கு வரும். வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் சிறப்பான பலனைப் பெறுவார்கள். முக்கியமாக இந்த ராசிக்காரர்கள் இந்த கேந்திர யோகத்தால் நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு கேந்திர யோகமானது காதல் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களைக் கொண்டு வரும். உறவுகளில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பணிபுரிபவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். சிலருக்கு சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. முக்கியமாக பணிபுரிபவர்களுக்கு உயர் அதிகாரிகளிடமிருந்து நல்ல பாராட்டும், சம்பள உயர்வுகளும் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications