Latest Updates
-
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது!
100 ஆண்டுகளுக்கு பின் சனி சுக்கிரனால் உருவாகியுள்ள நவபஞ்ச யோகத்தால் ராஜவாழ்க்கை வாழப்போகும் ராசிகள்!
Saturn Venus Made Navpancham Rajyog After 100 Years: ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதோடு, அவ்வப்போது மற்ற கிரகங்களுடன் இணைந்து சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும். அவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலனைத் தரும் நீதிமான் சனி பகவானும், அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரனும், சுமார் 100 ஆண்டுகளுக்கு பின் நவபஞ்ச ராஜயோகத்தை உருவாக்கியுள்ளனர். இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதில் சிலருக்கு மோசமாக இருக்கலாம்.

இருப்பினும், சில ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகமானது மிகவும் அதிர்ஷ்டமாக, நல்ல நிதி ஆதாயங்களை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைத் தரக்கூடும். இப்போது சனி மற்றும் சுக்கிரனால் உருவாகியுள்ள நவபஞ்ச ராஜயோகத்தால் எந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
மகரம்
நவபஞ்ச ராஜயோகத்தால் மகர ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த ராசிக்காரர்களின் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறக்கூடும். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். செய்யும் வேலைகளில் நல்ல வெற்றி கிடைக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பதவி உயர்வைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. குறிப்பாக நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
கும்பம்
நவபஞ்ச ராஜயோகத்தால் கும்ப ராசிக்காரர்களுக்கு பலவிதமான நற்பலன்கள் கிடைக்கும். அதுவும் இந்த ராசிக்காரர்களின் வசதிகள் அதிகரிக்கும். ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வீர்கள். புதிய வாகனம் அல்லது சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவதால், எடுத்த வேலைகளில் வெற்றி நிச்சயம் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு நவபஞ்ச ராஜயோகத்தால் எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும். காதலித்து வந்தால், உங்கள் காதல் வெற்றி பெறும். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் இந்த ராஜயோக காலத்தில் கைக்கு வந்து சேரும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் புதிய பொறுப்புக்களைப் பெறலாம். சமூகத்தில் உங்களின் மரியாதை, புகழ் மேம்படும். பெட்ரோல், தாதுக்கல், எண்ணெய், இரும்பு போன்றவற்றுடன் தொடர்புடைய தொழில்களை செய்து வந்தால், நல்ல லாபத்தைப் பெறலாம். மேலும் கலை, மாடலிங், ஹோட்டல் போன்றவற்றில் இருப்பவர்களும் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
