Latest Updates
-
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க...
சனிபகவான் நட்சத்திரத்தை மாற்றுவதால் இந்த 3 ராசிக்காரங்க கொடிகட்டி பறக்கப்போறாங்களாம்...உங்க ராசி இதுல இருக்கா?
2025 புத்தாண்டு வருவதற்கு முன் நடக்கும் ஜோதிட நிகழ்வுகளில், சனியின் நட்சத்திர மாற்றம் மிகவும் முக்கியமானது. கர்மவினை அளிப்பவரும் நீதியின் கடவுளுமான சனிபகவான் நாளை நட்சத்திரம் மாறுகிறார். சதயம் நட்சத்திரத்திலிருந்து பூரட்டாதி நட்சத்திரத்திற்கு சனிபகவான் சஞ்சரிக்கிறார். சனியின் நட்சத்திர மாற்றம் அனைத்து ராசிக்காரர்களையும் பாதிக்கும் ஒரு நிகழ்வாகும்.
இந்த நட்சத்திர மாற்றத்தால் சில ராசிகளில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட காலம் தொடங்குப்போகிறது. அவர்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் அடைவார்கள். சனிபகவானின் இந்த நட்சத்திர மாற்றத்தால் அதிர்ஷ்டமடையப்போகும் ராசிக்காரர்கள் யாரென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திர மாற்றம் சிறப்பான நன்மைகளைத் தரும். இந்த காலகட்டத்தில் அவர்கள் அதிக லாபத்தை அடைவார்கள். கடனாகக் கொடுக்கப்பட்ட பணம் திரும்ப கிடைக்கும். தொழிலதிபர்கள் மற்றும் வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் நாளை முதல் அனுகூலமான பலன்களை எதிர்பார்க்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.
மேலும் அவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற நன்மைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த காலகட்டத்தில், மகர ராசியில் பிறந்தவர்களின் பேச்சு வசீகரமானதாக மாறும். மற்றவர்களின் கவனத்தையும் அன்பையும் ஈர்ப்பார்கள். திருமண வாழ்க்கையில் தம்பதிகளிடையே அன்பும், நெருக்கமும் அதிகரிக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திரம் மாற்றம் சாதகமான மாற்றங்களை இருக்கும். இந்த ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் சனி சஞ்சரிப்பதால் அவர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். இந்த காலகட்டத்தில் அவர்களின் அனைத்து முயற்சிகளும் அவர்களுக்கு வெற்றியைத் தரும். வேலை தேடும் மிதுன ராசியினருக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறலாம். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவோருக்கு வெற்றி பெற வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரம் நிமித்தமாக வெளியூர் மற்றும் உள்நாட்டிற்கு பல பயணங்களை மேற்கொள்ள இது ஒரு நல்ல நேரம். தர்ம காரியங்களில் ஈடுபடுவது அவர்களின் நற்பெயரை அதிகரிக்கும். நீண்ட காலம் தள்ளிப்போன பல வேலைகள் இப்போது முடிவடையும்.
கும்பம்
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு சனிப்பெயர்ச்சி அபரிமிதமான பலன்களை அளிக்கப்போகிறது. அவர்களின் அணுகுமுறை இந்த காலகட்டத்தில் வித்தியாசமானதாக இருக்கும் மற்றும் அவர்களின் புதிய முயற்சிகள் அவர்களுக்கு பெரிய வெற்றியைக் கொடுக்கப்போகிறது. அவர்களின் தொடர்ச்சியான வெற்றியால் அவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
அவர்களின் தலைமைப் பண்பு மேம்படுவதால் புதிய பொறுப்புகள் அவர்களிடம் ஒப்படைக்கப்படும். புதிய சொத்து, வாகனம் வாங்கும் அதிர்ஷ்டம் உருவாகும். முதலீடு செய்வதற்கு இது ஒரு நல்ல நேரமாகும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்கள் நிறைந்திருக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் செய்வதற்கான காலம் வந்துவிட்டது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
