Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
சனி நட்சத்திர பெயர்ச்சி: 2025-ல் இந்த 3 ராசிக்காரர்களின் கையில் பணம் அதிகம் குவியப்போகுது...
Saturn Transit In Pooratathi Nakshatra 2024: ஜோதிடத்தில் மிகவும் முக்கியமான கிரகமாக சனி கருதப்படுகிறது. கிரகங்களிலேயே சனி ஒரு ராசியில் சுமார் 2 1/2 ஆண்டுகள் பயணிப்பதால், சனியின் தாக்கம் ஒருவரது வாழ்க்கையில் சற்று அதிகமாக இருக்கும். அதே சமயம் சனி அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார். அவ்வாறு சனி நட்சத்திரத்தை மாற்றும் போதும் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
தற்போது சனி பகவான் ராகுவின் சதய நட்சத்திரத்தில் பயணித்து வருகிறார். இந்நிலையில் டிசம்பர் 27 ஆம் தேதி சனி பகவான் பூரட்டாதி நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். பூரட்டாதி நட்சத்திரத்தின் அதிபதி குரு பகவான். குருவும், சனியும் நட்பு கிரகங்கள் என்பதால், குருவின் நட்சத்திரத்திற்கு சனி செல்வதால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கப் போகிறது.

அதுவும் இந்த சனி நட்சத்திர பெயர்ச்சி 2024 ஆம் ஆண்டின் இறுதியில் நிகழ்வதால், 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே சில ராசிக்காரர்களுக்கு பம்பர் பலன்கள் கிடைக்கப் போகின்றன. இப்போது சனி பூரட்டாதி நட்சத்திரத்திற்கு செல்வதால் எந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
ரிஷபம்
சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். நல்ல பொருள் இன்பம் கிடைக்கும். வாழ்க்கையில் பல மாற்றங்களைக் காணக்கூடும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். பணியிடத்தில் கொடுக்கப்பட்டுள்ள உங்கள் இலக்குகளை எளிதில் அடைவீர்கள். தொழில் ரீதியாக பலவிதமான நன்மைகளைப் பெறுவீர்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். முக்கியமாக சனி வக்ர நிவர்த்தி அடைந்து பயணிப்பதால் நிறைய பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
கன்னி
சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்கள் தொழில் ரீதியாக ஏராளமான நன்மைகளைப் பெறுவார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வழக்கறிஞர்கள், மருத்துவர்களுக்கு இந்த பெயர்ச்சியானது நல்ல பலன்களைத் தரும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வாழ்க்கையில் பலவிதமான மகிழ்ச்சிகளைப் பெறுவீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். இதனால் புதிய வேலைகளைத் தொடங்கினால் நல்ல வெற்றி கிடைக்கும். சனியின் நிலையால் மனதில் பல குழப்பங்கள் ஏற்படும். இருப்பினும் அதை எளிதில் கடந்துவிடுவீர்கள். குருவின் நட்சத்திரத்திற்கு சனி செல்வதால், குரு பகவானின் அருளால் தொழிலில் பல நன்மைகள் கிடைக்கும். அதுவும் பணிபுரிபவர்கள் பதவி உயர்வு, சம்பள உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. வணிகர்கள் எதிர்பாராத அளவில் நிறைய லாபத்தைப் பெற வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
