Latest Updates
-
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
குழந்தைகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில பொதுவான லன்ச்பாக்ஸ் தவறுகள்! இனிமே பண்ணாதீங்க
2025 சனி பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு அடுத்த 2 1/2 வருஷம் எப்படி இருக்கும் - விளக்கும் ஜோதிடர்..
Saturn Transit 2025: வேத ஜோதிடத்தில் நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் நவகிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படும் சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு மார்ச் 29 ஆம் தேதி இடப்பெயர்ச்சி அடைகிறார்.
திருக்கணித பஞ்சாங்கப் படி, சனிபகவான் மீன ராசிக்கு சென்று அமர்கிறார். கால புருஷ தத்துவப் படி, 12 ஆம் வீடான மீன ராசியில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு பயணம் செய்யும் சனிபகவானால் மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது என்று ஜோதிடர் சொ. ஜெயலட்சுமி அவர்கள் தமிழ் போல்ட்ஸ்கையுடன் பகிர்ந்து கொண்டார். வாருங்கள், மேஷ ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டின் சனிப்பெயர்ச்சி எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.

சனிப்பெயர்ச்சி 2025
ஜோதிடத்தில் சனி பகவான் கர்ம காரணம். வேலை, தொழிலுக்கு சனிபகவானின் தயவு அவசியம். சனிபகவான் என்றாலே பலருக்கும் பயம் இருக்கிறது தேவையில்லாத பயம். சனிபகவான் நீதிமான் என்பதால் நல்லவர்களுக்கு நல்லதே செய்வார். எனவே சனிப்பெயர்ச்சியை நினைத்து பயப்பட தேவையில்லை.
சனி பகவான் மேஷ ராசிக்கு 12 ஆம் வீடான விரைய ஸ்தானத்திற்கு வரப்போகிறார். கடந்த 5 ஆண்டு காலமாக தனது வீடுகளில் ஆட்சி பெற்று அமர்ந்து பயணம் செய்தார் சனி பகவான். இந்நிலையில் குருபகவான் வீட்டிற்கு சனி வரப்போகிறார். காலபுருஷ தத்துவப்படி, இது 12வது வீடு. மார்ச் 29ஆம் தேதி சனிபகவான் மீன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார்.
சூரியன், ராகு, சுக்கிரன் மீன ராசியில் பயணம் செய்ய அவர்களோடு கூட்டு குடித்தனம் செய்யப்போகிறார் சனிபகவான். 5 கிரகங்கள் ஒரு ராசியில் பயணம் செய்யப் போகின்றன. இந்த நேரத்தில் சனிபகவான் பெயர்ச்சி அடைவது உலக அளவில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். விபத்துகள், உலக நாடுகளில் பிரச்சினைகள், யுத்தங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. நேர்மையாகவும் நாணயமாகவும் நடைபெறுபவர்கள் பயப்பட தேவையில்லை.
ஏழரை சனி ஆரம்பம்
லாப ராசியில் இருந்த சனி பகவான் 12ஆம் வீட்டிற்கு வரப்போகிறார். ஏழரை சனி காலமாக இருந்தாலும் பயப்பட வேண்டாம். வேலையில் மாற்றம் ஏற்படும். நிரந்தர வேலை கிடைக்கும். பலருக்கு வேலையில் பளு ஏற்படும். தூக்க குறைபாடுகள் ஏற்படும். எனவே சற்று கவனம் தேவை.
சனிபகவானின் பார்வை மீன ராசியில் இருந்து உங்கள் ராசிக்கு 2ஆம் வீடான தன ஸ்தானத்தை பார்வையிடப் போகிறார். பல வழிகளில் இருந்தும் பணம் கிடைக்கப்போகிறது. சனி பெருக்கு என்று சொல்வது போல பணத்தை பெருக்கப்போகிறார். குடும்ப ஸ்தானத்தை சனி பார்வையிடுவதால் திருமணம் நடைபெறப் போகிறது. ஏழரை சனி காலத்தில் திருமணம் நடைபெறுவது உறுதி. குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும்.
சனிபகவானின் பார்வை உங்கள் ராசிக்கு 6 ஆம் வீட்டின் மீது விழுகிறது. ருண ரோக சத்ரு, ஆள் அடிமை ஸ்தானத்தை சனிபகவான் பார்க்கிறார். இதனால் வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கப் போகிறது. பாக்ய ஸ்தானமான 9ஆம் வீட்டின் மீதும் சனிபகவானின் பார்வை விழுகிறது. எனவே நிறைய தர்ம காரியங்கள் செய்வீர்கள்.
ஏழரை சனி காலம் என்பதால் வேலை செய்யும் இடத்தில் சில நெருக்கடிகள் ஏற்படும். குழப்பம் வர வாய்ப்பு உள்ளது. கோபத்தை கட்டுப்படுத்துங்கள், நிதானத்தையும் அமைதியையும் கடைபிடியுங்கள். விட்டுக்கொடுத்து செல்லுங்கள். விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை.
ஆரோக்கியத்தில் கவனம் தேவை
உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். நேரம் கெட்ட நேரத்தில் கண்டதையும் சாப்பிடாதீர்கள். சரியான நேரத்திற்கு சத்தான உணவுகளை சாப்பிடுங்கள். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். வேலைக்காகவோ, படிப்பிற்காகவோ வெளிநாடு செல்லும் யோகம் கைகூடி வரப்போகிறது.
இரண்டாம் சுற்று, மூன்றாம் சுற்றில் இருப்பவர்கள் ஏழரை சனி காலத்தை எளிதாக கடந்து விடலாம். முதல் சுற்று ஏழரை சனியை சந்திக்கப்போகும் மேஷ ராசி மற்றும் மேஷ லக்ன காரர்கள் சனிக்கிழமைகளில் சிவ ஆலயம் சென்று சனி ஹோரையில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது பாதிப்புகளை குறைக்கும். மேலும் கால பைரவர் வழிபாடு செய்வது மன அமைதியை கொடுக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
நவகிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படும் சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு 2025 மார்ச் 29 ஆம் தேதி இடப்பெயர்ச்சி அடைகிறார்.
2025-ல் நடக்கும் சனிப்பெயர்ச்சிக்கு பின் மேஷ ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலம் என்பதால் வேலை செய்யும் இடத்தில் சில நெருக்கடிகள் ஏற்படும். குழப்பம் வர வாய்ப்பு உள்ளது. கோபத்தை கட்டுப்படுத்துங்கள், நிதானத்தையும் அமைதியையும் கடைபிடியுங்கள். விட்டுக்கொடுத்து செல்லுங்கள். விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை.
2025-ல் நடக்கும் சனிப்பெயர்ச்சியால் முதல் சுற்று ஏழரை சனியை சந்திக்கப்போகும் மேஷ ராசி மற்றும் மேஷ லக்ன காரர்கள் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் சிவ ஆலயம் சென்று சனி ஹோரையில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது பாதிப்புகளை குறைக்கும். மேலும் கால பைரவர் வழிபாடு செய்வது மன அமைதியை கொடுக்கும்.



Click it and Unblock the Notifications