Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
சனி-சூரிய சேர்க்கையால் ஜூன் 03 முதல் இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்... உங்க ராசி இதுல இருக்கா?
Saturn Sun Form Panchak Yoga On 03 June 2025: வேத ஜோதிடத்தில் சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடியவர். இதனால் சனி பகவான் நீதிமான் என்று அழைக்கப்படுகிறார். ஜோதிடத்தின் படி, சனி பகவான் ஒரு ராசியின் சுமார் 2 1/2 ஆண்டுகள் வரை பயணிப்பார். அந்த வகையில் சனி பகவான் சமீபத்தில் தான் மீன ராசிக்குள் நுழைந்தார். இந்த மீன ராசியில் சனி பகவான் 2027 ஆம் ஆண்டு வரை இருப்பார்.
அதே சமயம் கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன், ரிஷப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் சூரியன் மற்றும் சனி பகவானின் நிலைகளால் பஞ்சக யோகம் உருவாகவுள்ளது. அதுவும் இந்த யோகம் ஜூன் 03 ஆம் தேதி உருவாகவுள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அதில் சிலருக்கு அதிர்ஷ்டமாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கும்.

பஞ்சக யோகம் என்றால் என்ன?
பஞ்சக யோகம் என்பது இரண்டு கிரகங்கள் ஒன்றுக்கொன்று 72 டிகிரியில் இருக்கும் போது உருவாகிறது. பொதுவாக இந்த யோகத்தால் கிரகங்கள் ஒன்றுக்கொன்று நேர்மறை ஆற்றலை பரிமாறிக் கொள்ளும். ஆனால் ஜூன் 03 ஆம் தேதி சூரியனுக்கும், சனி பகவானுக்கும் இடையே உருவாகிறது.
ஜோதிடத்தின் படி, சூரியனும், சனியும், தந்தை, மகனாக இருந்தாலும், எதிரிகளாக கருதப்படுகிறார்கள். இதனால் இந்த யோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மோசமாக இருக்கப் போகிறது. இப்போது சனி, சூரியனால் உருவாகும் பஞ்சக யோகத்தால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
மிதுனம்
பஞ்சக யோகத்தால் மிதுன ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முக்கியமாக வேலை மற்றும் குடும்ப வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் உங்கள் நடத்தை சற்று மோசமாக இருக்கும். இதனால் உறவுகளில் விரிசல் ஏற்படும் வாய்ப்புள்ளது. இக்காலத்தில் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். அதோடு ஆரோக்கியத்திலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஆயினும் உங்கள் அம்மாவின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். இது சற்று நிம்மதியைத் தரும்.
துலாம்
பஞ்சக யோகத்தால் துலாம் ராசிக்காரர்கள் புதிய முதலீடுகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஒருவேளை முதலீடு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டால், நன்கு யோசிக்க வேண்டும். ரிஸ்க் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் நிதி இழப்புக்களை சந்திக்க நேரிடும். உங்கள் கருத்துக்களை மற்றவர்கள் மீது திணிப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அதன் விளைவாக பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும். பேசும் போது இனிமையை கடைப்பிடிக்க வேண்டும். பணியிடத்தில் உடன் வேலை செய்வோருடன் ஒருங்கிணைந்து வேலை செய்யுங்கள். ரகசியங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். இல்லாவிட்டால் பெரிய பிரச்சனைகளை சந்திப்பீர்கள்.
கும்பம்
பஞ்சக யோகத்தால் கும்ப ராசிக்காரர்கள் கோபத்தையும், அவசரத்தையும் தவிர்க்க வேண்டும். எந்த முடிவையும் எடுக்கும் முன் நன்கு யோசித்து பின்னரே எடுக்க வேண்டும். கண்ணியமான நடத்தையை கடைப்பிடிக்க வேண்டும். கடினமாக உழைத்தால் மட்டுமே வெற்றியைப் பெறக்கூடும். ஆபத்தான முதலீடுகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடையே நல்லிணக்கத்தை பேண முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால் உறவுகளில் விரிசல் ஏற்படும். சொத்து விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



