Latest Updates
-
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன?
30 ஆண்டுகளுக்கு பின் வக்ரமாகும் சனி பகவான்: ஜூலை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..
Saturn Retrograde In Pisces On July 2025: வேத ஜோதிடத்தில் நீதிமான் என்று அழைக்கப்படும் சனி பகவான், ஒரு ராசியில் சுமார் 2 1/2 ஆண்டுகள் வரை பயணிப்பார். தற்போது இந்த சனி பகவான் மீன ராசியில் பயணித்து வருகிறார். சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் மீன ராசியில் பயணித்து வரும் சனி பகவான், ஜூலை மாதத்தில் வக்ரமாகி பின்னோக்கி பயணிக்கவுள்ளார்.
கிரகங்களிலேயே சனி பகவான் ஒரு ராசியில் நீண்ட காலம் பயணிப்பதால், சனியின் நிலையில் சிறு மாற்றம் ஏற்பட்டாலும், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அதுவும் ஜூலை மாதத்தில் சனி பகவான் மீன ராசியில் வக்ரமாவதால், அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணக்கூடும். அதில் சிலருக்கு அதிர்ஷ்டமாகவும், இன்னும் சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம்.

அதுவும் சனி வக்ரமாவதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் தங்களின் நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தையும், பணியிடத்தில் பதவி உயர்வையும் பெற வாய்ப்புள்ளது. இப்போது 30 ஆண்டுகளுக்கு பின் மீன ராசியில் வக்ரமாகும் சனி பகவானால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கும்பம்
கும்ப ராசியின் 2 ஆவது வீட்டில் சனி வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். உங்களின் சிறப்பான செயல்திறன் நல்ல பாராட்டைப் பெறும். எழுத்து, பத்திரிக்கை போன்ற துறையில் இருப்பவர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். புத்திசாலித்தனத்தால் பல கடினமான வேலைகளையும் திறம்பட செய்து முடிப்பீர்கள். இக்காலத்தில் தகவல் தொடர்பு திறன் சிறப்பாக இருக்கும். சனி பகவானின் ஆசியால் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் சனி வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் தொழிலில் சிறப்பான முன்னேற்றத்தைக் காண்பார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வணிகர்கள் இக்காலத்தில் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தும் வாய்ப்பு கிடைத்தால், அதை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. அரசு வேலை செய்பவர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். தந்தையின் முழு ஆதரவு கிடைக்கும். பணிபுரிந்து கொண்டிருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மீனம்
மீன ராசியின் முதல் வீட்டில் சனி பகவான் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வசதிகள் அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். சிலர் பரம்பரை சொத்துக்களைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவைப் பெறுவார்கள். இதன் மூலம் உங்களின் இலக்குகளை எளிதில் அடைவீர்கள். இக்காலத்தில் உங்களின் திட்டங்கள் அனைத்தும் நல்ல வெற்றியைத் தரும். ரியல் எஸ்டேட், எண்ணெய், இரும்பு தொடர்பான வேலை செய்பவர்கள், நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
