Latest Updates
-
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம்
மீன ராசியில் வக்ரமாகும் சனி பகவான்: ஜூலை 13 முதல் இந்த 3 ராசிக்கு வாழ்க்கை நரகமா இருக்கப்போகுது..
Saturn Retrograde in Pisces 2025: நவகிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படும் சனி பகவான், நேர்மை, ஒழுக்கம் ஆகியவற்றின் காரணியாவார். மேலும் இவர் மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியும் கூட. கிரகங்களிலேயே சனி பகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடியவர். அதுவும் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார். இதனால் சனி பகவானின் தாக்கம் ஒருவரது வாழ்க்கையில் ஆழமாக இருக்கும்.
தற்போது சனி பகவான் மீன ராசியில் பயணித்து வருகிறார். அதுவும் சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் சனி பகவான் மீன ராசியில் நுழைந்துள்ளார். இந்நிலையில் இந்த சனி பகவான் ஜூலை 13 ஆம் தேதி மீன ராசியில் வக்ரமாகவுள்ளார். இப்படி சனி பகவான் வக்ரமாவதால் அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிக்காரர்களின் வாழ்க்கையில் தெரியும்.

அதில் சில ராசிக்காரர்கள் மிகவும் சிறப்பாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம். அதுவும் சனி பகவான் சுமார் 138 நாட்கள் மீன ராசியில் வக்ர நிலையில் இருக்கப் போகிறார். இப்போது மீன ராசியில் வக்ரமாகும் சனி பகவானால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் சனி பகவான் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். காதல் வாழ்க்கை மோசமாக பாதிக்கப்படலாம். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் குறையும். நிதி ரீதியாக பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதனால் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சற்று மோசமாக இருக்கும். பலவிதமான ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதிப்படக்கூடும். பணியிடத்தில் உங்கள் வேலைகளை தாமதமாக முடிப்பீர்கள். ஆனால் சுக்கிரன் இந்த ராசியில் இருப்பதால், ஒருசில நன்மைகளை சில நாட்கள் பெறலாம்.
கடகம்
கடக ராசியின் 9 ஆவது வீட்டில் சனி வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தேவையற்ற செலவுகளால் சிரமப்பட நேரிடும். வியாபாரத்தைப் பொறுத்தவரை எதிரிகள் உங்களை ஆதிக்கம் செலுத்தக்கூடும். இந்நிலையில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இக்காலத்தில் அதிர்ஷ்டத்தை மட்டும் நம்பிக் கொண்டு எதையும் செய்யாதீர்கள். மாறாக கடினமாக உழைக்க முயற்சி செய்யுங்கள். அப்போது தான் சிறிது வெற்றியாவது பெறலாம். மற்றவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள். இல்லாவிட்டால் பெரிய பிரச்சனையில் சிக்கி அவதிப்படுவீர்கள்.
மீனம்
மீன ராசியின் முதல் வீட்டில் சனி பகவான் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வாழ்க்கைத் துணையுடனான உறவில் விரிசல் ஏற்படலாம். ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதால் உண்ணும் உணவில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும். மேலும் அதிக சோம்பலை சந்திக்க நேரிடும். இந்த சோம்பலை கைவிடாவிட்டால், பணியிடத்தில் மோசமான பிரச்சனையை சந்திக்க நேரிடும். குழந்தைகளால் சில பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்புள்ளது. மொத்தத்தில் பிரச்சனைகள் தலைவிரித்தாடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
