Latest Updates
-
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்.. -
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும -
தென்னிந்தியாவின் அம்பானி என்று கூறப்படும் இந்த நடிகருக்கு புர்ஜ் கலீஃபாவில் சொந்த வீடு இருக்காம்-யார் தெரியுமா -
அக்டோபர் மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த ராசிக்கெல்லாம் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
சனி வக்ர பெயர்ச்சி: இன்னும் 5 நாட்களில் இந்த 7 ராசிக்காரர்களுக்கு ப்ரேக்-அப் ஏற்பட வாய்ப்பிருக்கு.. உஷார்..
Saturn Retrograde In Aquarius On June 2024: வேத ஜோதிடத்தில் சூரிய பகவானின் மகன் தான் சனி பகவான். இந்த சனி பகவான் வக்ர பார்வையை ஒருவர் மீது பதித்தால், அந்நபர் வாழ்வில் மிகுந்த கஷ்டத்தை, பிரச்சனைகளை சந்திப்பார்கள். இத்தகைய சனி பகவான் மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாவார்.
சனி பகவானின் நிலையில் சிறு மாற்றங்கள் ஏற்பட்டாலும் அது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது சனி பகவான் தனது மூல திரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் சனி பகவான் வருகிற ஜூன் 29 ஆம் தேதி வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார்.

இந்த வக்ர நிலையில் நவம்பர் மாதம் வரை இருப்பார். சனி வக்ரமாக இருக்கும் காலத்தில் சில ராசிக்காரர்கள் தங்கள் காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இப்போது சனி வக்ரமாவதால் எந்த ராசிக்காரர்கள் காதல் வாழ்க்கையில் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 10 மற்றும் 11 ஆவது வீட்டின் அதிபதி தான் சனி. இந்த சனி 11 ஆவது வீட்டில் வக்ரமாகிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு தங்கள் துணையுடன் நல்ல ஒருங்கிணைப்பு இருக்கும். இருப்பினும், சிறு சிறு விஷயங்களுக்கு அவ்வப்போது உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே சில வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே வாழ்க்கைத் துணையுடன் நல்லுறவைப் பேண சர்ச்சைகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
மிதுனம்
மிதுன ராசியின் 8 மற்றும் 9 ஆவது வீட்டின் அதிபதி தான் சனி. இவர் 9 ஆவது வீட்டில் வக்ரமாகிறார். இதனால் அதிர்ஷ்டத்தின் ஆதரவு இருக்காது. உங்களின் தன்னம்பிக்கை குறையும். குடும்ப பிரச்சனைகள் அதிகரிக்கும். உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இது உங்கள் உறவில் கசப்பை ஏற்படுத்தி, விரிசலை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது.
கடகம்
கடக ராசியின் 7 மற்றும் 8 ஆவது வீட்டின் அதிபதி தான் சனி பகவான். இந்த சனி 8 ஆவது வீட்டில் வக்ரமாகவுள்ளார். இதனால் காதல் வாழ்க்கையைப் பொறுத்தவரை, உங்களுக்கும் உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் இடையே பிரச்சனைகள் எப்போதும் இருந்தவாறு இருக்கும். இந்த பிரச்சனைகள் காரணமாக, குடும்ப வாழ்க்கை மிகவும் மோசமாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 6 மற்றும் 7 ஆவது வீட்டின் அதிபதி தான் சனி பகவான். இவர் 7 ஆவது வீட்டில் வக்ரமாகவுள்ளார். இதனால் உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே ஈகோ மற்றும் ஆணவம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம். இது உங்கள் மனதையும் மோசமாக பாதிக்கலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 3 மற்றும் 4 ஆவது வீட்டின் அதிபதி தான் சனி பகவான். இந்த சனி 4 ஆவது வீட்டில் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் பொருள் வசதிகள் மற்றும் ஆடம்பரங்கள் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. உங்களுக்கும் உங்கள் துணைக்கும் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படலாம். இதன் விளைவாக இருவருக்கும் இடையே விரிசல் ஏற்படலாம்.
கும்பம்
கும்ப ராசியின் முதல் மற்றும் 2 ஆவது வீட்டின் அதிபதியான சனி பகவான், முதல் வீட்டில் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் காதல் உறவில் தங்கள் காதலருடன் திருப்தி அடையாமல் போகலாம். மேலும் உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே குறைவான ஒருங்கிணைப்பு இருக்கும்.
மீனம்
மீன ராசியின் 11 மற்றும் 12 ஆவது வீட்டின் அதிபதியான சனி பகவான், 12 ஆவது வீட்டில் வக்ரமாகவுள்ளார். இதனால் உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே பரஸ்பர ஒருங்கிணைப்பு குறைபாடு ஏற்படலாம். மேலும் இருவரும் ஒருவரையொருவர் ஆதரிக்காமல் இருக்கலாம். இந்த காரணங்களால் உறவில் நீங்கள் திருப்தியற்றதாக உணரக்கூடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
