Latest Updates
-
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? -
2 கைப்பிடி முருங்கைக்கீரை இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. சாதத்துக்கு தாறுமாறா இருக்கும்.. -
திருநெல்வேலி ஸ்டைல் பொரிச்ச குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - டக்கரா இருக்கும்
சனி வக்ரமடைவதால் இந்த 4 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பல சிக்கல்களை சந்திக்கப் போறாங்களாம்...!
ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் சக்திவாய்ந்த கிரகங்களில் ஒன்று சனி. மகரம், கும்பம் ஆகிய ராசிகளுக்கு அதிபதியான சனி, கர்மாவின் அதிபதியாகவும் இருக்கிறார். சனி நமது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தருகிறார். கடந்த ஜென்மத்தில் கர்மாவின் பலன்களுக்கு இந்த ஜென்மத்தில் சனிபகவான் நல்ல மற்றும் கெட்ட பலன்களைத் தருவார் என்று நம்பப்படுகிறது.
சனிப்பெயர்ச்சி
ஜூன் 29 முதல், சனி கும்ப ராசியில் சஞ்சரிக்கிறது. இந்த கிரகம் நவம்பர் 15 வரை ஒரே பாதையில் பயணிக்கும். சனிப்பெயர்ச்சியின் போது சிலரது வாழ்க்கையில் நிறைய சாதகமான விஷயங்கள் நடக்கும். ஆனால் ஒருவரின் ராசியில் சனியின் நிலைக்கேற்ப மாறும். சனி வக்ர பெயர்ச்சியின் போது சில ராசிக்காரர்களுக்கு உபத்திரவங்களையும் ஏற்படுத்துகிறார். இந்த சனி வக்ர காலத்தில் வாழ்க்கையில் துன்பத்தை அனுபவிக்கப் போகும் ராசிகள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

கன்னி
கன்னி ராசியில் பிறந்தவர்கள் சனியின் வக்ர பெயர்ச்சியின் போது வாழ்வில் அமைதியற்றவர்களாக இருப்பார்கள். சிலர் நிதிரீதியாக பெரும் இழப்புகளை சந்திக்க நேரிடும், வேலையில் இருப்பவர்கள் சில பாதகமான விளைவுகளை சந்திக்கலாம். அவர்கள் தங்கள் உடல் நலத்திலும் சில பின்னடைவுகளை சந்திக்க நேரிடும்.
அவர்கள் விவரிக்க முடியாத சோர்வு மற்றும் ஆற்றல் பற்றாக்குறையை அனுபவிக்கலாம். வயிறு சம்பந்தமான நோய்கள் ஏற்படலாம். பதவி உயர்வு, சம்பள உயர்வை எதிர்பார்த்து இருப்பவர்கள் ஏமாற்றத்தை சந்திக்கலாம். வார்த்தைகளைப் பயன்படுத்தும்போது மிகவும் கவனமாக இருங்கள். இல்லையெனில் குடும்பத்தில் பல பிரச்சினைகளை சந்திக்கலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் அதிபதி போர் கடவுளான செவ்வாய். சனி வக்ர பெயர்ச்சியின் போது குடும்பத்தில் பல பிரச்சனைகளை சந்திப்பார்கள். சொத்து தொடர்பான சிக்கல்கள் ஏற்படலாம். மனரீதியாக பல சிக்கல்களை சந்திக்க வேண்டி வரும். இந்த காலகட்டத்தில் தொடர்ச்சியான தோல்விகளால் விரக்திக்கு ஆளாகலாம். உடன்பிறந்தவர்களுக்கிடையேயான நிதிப் பிரச்சனைகள் மற்றும் பணப் பிரச்சனைகள் மனக்கசப்பை உண்டாக்கும். உங்களின் கோபத்தால் இப்போது பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். எனவே அமைதியைக் கடைபிடிப்பது நல்லது.
மகரம்
மகர ராசியின் அதிபதியாக சனிபகவான் இருக்கிறார். இந்த காலகட்டத்தில் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் அணைத்து விஷயங்களிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், எதையும் நன்றாக சிந்தித்து அதற்குப்பின் செயல்படுத்த வேண்டும். புதிதாக எந்த முயற்சியிலும் இறங்க வேண்டாம், அது உங்களுக்கு தோல்வியைக் கொடுக்கலாம். இந்த காலகட்டத்தில் நண்பர்களால் சில தொந்தரவுகள் ஏற்படலாம். இந்த நேரத்தில் காதல் உறவுகளில் ஈடுபடுவது நல்லதல்ல. ஏனெனில் அதில் ஏமாற வாய்ப்பு உள்ளது.
மேஷம்
மேஷ ராசியும் செவ்வாய் கிரகத்தால் ஆளப்படுகிறது. மேஷ ராசிக்காரர்கள் சனி வக்ர பெயர்ச்சியின் போது உடல் நலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரைப் பார்க்க தயங்க வேண்டாம். இந்த நேரத்தில் புதிய சொத்துக்களில் முதலீடு செய்வது நல்லதல்ல. இது நிதி இழப்பு மற்றும் ஏமாற்றத்திற்கு வழிவகுக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

