Latest Updates
-
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும்
சனி-சந்திர சேர்க்கையால் உருவாகியுள்ள விஷ யோகம்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
Saturn Moon Conjunction Make Vish Yog On 27 March 2025: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றி சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்கி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதில் நீதிமான் சனி பகவான் தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் மார்ச் 27 ஆம் தேதி சந்திரன் கும்ப ராசியில் பயணிக்கத் தொடங்குவார். இதனால் கும்ப ராசியில் சனி மற்றும் சந்திரனின் சேர்க்கை நிகழவுள்ளது. இவ்விரு கிரகங்களின் சேர்க்கையினால் மிகவும் கொடிய விஷ யோகம் உருவாகியுள்ளது. இந்த மோசமான யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

முக்கியமாக இந்த அசுப யோகத்தினால் சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகரிக்கும். அதுவும் நிதி இழப்பும், ஆரோக்கிய பிரச்சனைகளும் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. இப்போது கும்ப ராசியில் உருவாகியுள்ள விஷ யோகத்தால் எந்த ராசிக்காரர்கள் அடுத்த 2 1/2 நாட்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசியின் 8 ஆவது வீட்டில் சனி சந்திர சேர்க்கையால் விஷ யோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் அடுத்த 2 1/2 நாட்கள் மிகுந்த மன அழுத்தத்தை சந்திக்க நேரிடும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்படக்கூடும். தொழிலில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சில பெரிய சர்ச்சைகளில் சிக்க வாய்ப்புள்ளது. எனவே அடுத்த 2 1/2 நாட்கள் பேசும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும் எந்த ஒரு புதிய வேலைகளையும் தொடங்காமல் இருப்பது நல்லது.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 4 ஆவது வீட்டில் சனி சந்திர சேர்க்கையால் விஷ யோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். திருமணமானவர்கள் தங்கள் வாழ்க்கையில் மன அழுத்தத்தை சந்திக்க நேரிடும். வாழ்க்கைத் துணையுடன் மனக்கசப்புகள் ஏற்படலாம். தாயாரின் ஆரோக்கியம் மோசமடையும் வாய்ப்புள்ளது. மேலும் உங்கள் தாயுடன் கருத்து வேறுபாடுகளும் ஏற்படலாம். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மேலும் இக்காலத்தில் பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும்.
மீனம்
மீன ராசியின் 12 ஆவது வீட்டில் சனி சந்திர சேர்க்கையால் விஷ யோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் மீது இக்காலத்தில் வீண் பழி சுமத்தப்படலாம். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் உடன் வேலை செய்வோருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். மேலும் இக்காலத்தில் யாருக்கும் கடன் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த பணம் கைக்கு வராமல் போகும். தேவையற்ற செலவுகளை அதிகம் சந்திக்க நேரிடும். அதைக் கட்டுப்படுத்தினால், பணப் பிரச்சனைகளை சந்திப்பதைத் தவிர்க்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
