Latest Updates
-
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா?
சனி-புதன் உருவாக்கும் அர்த்தகேந்திர யோகம்: மே 18 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்...
Saturn Mercury Make Ardhakendra Yog On 18 May 2025: வேத ஜோதிடத்தில் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடியவர் தான் சனி பகவான். நீதிமான் என்று அழைக்கப்படும் சனி பகவான் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் பயணிப்பார். இவர் மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாவார்.
தற்போது சனி பகவான் குரு பகவானின் ராசியான மீன ராசியில் பயணித்து வருகிறார். சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் சனி பகவான் மீன ராசிக்குள் நுழைந்துள்ளார். அதே சமயம் கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன், புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார்.

தற்போது புதன் மேஷ ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் மே 18 ஆம் தேதி புதனும், சனியும் ஒருவருக்கொருவர் 45 டிகிரியில் இருப்பதால், அர்த்தகேந்திர யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.
அதில் சில ராசிக்காரர்கள் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியைப் பெறுவதோடு, திடீர் நிதி நன்மைகளையும் பெற போகிறார்கள். இப்போது சனி-புதன் உருவாக்கும் அர்த்தகேந்திர யோகத்தால் மே 18 முதல் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் சனி புதனால் உருவாகும் அர்த்தகேந்திர யோகத்தால் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். முக்கியமாக இந்த ராசிக்காரர்களின் நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பணிபுரிபவர்கள் சிறப்பான நன்மைகளைப் பெறுவார்கள். அதுவும் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கலாம். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறலாம். வியாபாரிகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு சனி புதனால் உருவாகும் அர்த்தகேந்திர யோகமானது அதிர்ஷ்டத்தைத் தரும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தினர் மற்றும் வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
புதிய வீடு, வாகனம் வாங்க வேண்டுமென்ற ஆசை இருந்தால், இக்காலத்தில் உங்களின் அந்த ஆசை நிறைவேறும் வாய்ப்புள்ளது. அத்துடன் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்களின் பேச்சு மற்றவர்கள் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கும். இதனால் பல முக்கியமான வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு சனி-புதனால் உருவாகும் அர்த்தகேந்திர யோகத்தால் ஊடகம், மார்கெட்டிங் துறையில் இருப்பவர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். பல நல்ல செய்திகளை இக்காலத்தில் பெறுவீர்கள். அதிர்ஷ்ட கதவு திறப்பதால், ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பு திறன்களும் சிறப்பாக இருக்கும்.
பணிபுரிபவர்கள் நிறைய வெற்றியைப் பெறுவார்கள். முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்கள் கிடைக்கும். வேலை தொடர்பான குறுகிய பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த பயணம் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும் வகையில் இருக்கும். சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கலாம். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கலாம். வீட்டின் சூழல் மகிழ்ச்சியாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications